07 November 2015

வீர "சிங்கம் "வராரு ..2"வீரசிங்கம்  புல்லட்டில் வந்து இறங்கியதும் சக வாத்தியார்களும் மொத்த மாணவர் கூட்டமும் திரும்பி பார்த்தார்கள் (வீரசிங்கம் என் சித்தப்பா  இவரை பற்றி சொல்ல பல வீரகதைகள் இருக்கு பிறகு சொல்கிறேன், ஒரு வார்த்தையில் சொன்னால் சுத்துபட்டி ஊர்களுக்கு இவரின் வீரம் பற்றி தெரியும்)

எவன்டா "என் புள்ளய அடிச்சது என்றவாறு புல்லட்டிலிருந்து இறங்கினார்!

சகவாத்தியார்களில் ஒருவர் "ஏ ங்க என்ன வேனும் "என்றார் 

வீரசிங்கத்திற்கு கோபம் அடங்கமால் மறுபடியும் (இவரும் புல் போதையில்தான் இருப்பார்) எவன்டா கால் அமுக்க சொன்னா மயிராண்டி என்றார் 

"அதற்குள் சீனிவாசன் வாத்தியாரே "ஏன் நாந்தான் "என்றார் வீரசிங்கத்தை பற்றி தெரியாமல் 

"நாந்தான் "என்று சொல்லிமுடிப்பதற்குள் "பட்டார் பட்டார் "என்று வாத்தியாரின் இரு கண்ணமும் சிவந்து ரத்தம் வருமளவுக்கு அடித்து உதைத்தார் 

சகவாத்தியார் யாரும் தடுக்கவும் வரவில்லை. புடிக்கவும் வரவில்லை 

புள்ளைகளுக்கு சொல்லித்தர வர்றியா உன் பு...அமுக்க வர்றியா என்று வாத்தியாருக்கு இரு கண்ணமும் ஒரு கிலோ வீங்குமளவுக்கு அடி 

"ஒழுங்கு மருவாதியா பாடம் சொல்லிக்கொடி இல்லனா என்ன பண்ணுவேனு எனக்கு தெரியாது என்றார் 

யோய் நீ என்னய்யா பண்ணுவ "என்று வீராப்புடன் வந்த தலைமை ஆசிரியர் சீறினார் 

"சும்மா இருடா மயிராண்டி இதான் நீ பாத்துக்கிற லட்சணமா?
எவன்கிட்ட சொல்வ நீ யார வேனும்னாலும் கூட்டிகிட்டுவாடா அதுவறைக்கும் நான் இங்க இருக்கேன் "என்றார் வீரசிங்கம் 

அடிவாங்கிய வாத்தியார் மயக்கம் வந்து விழ பள்ளிக்கூடம் பரபரப்பானது 

இதற்குள் விசயம் தெரிந்து உள்ளூர்காரர்களும் வந்துவிட 

இவரும் விசயம் சொல்ல 

எல்லோரும் "ஆமாப்பா "இந்த வாத்தியாரு தினம் போதையில் வர்றதவர்றத
பாத்திருக்கன் என்றார்கள் 

பலவித சச்சரவுக்கு பிறகு தலைமை ஆசிரியர் வந்து சரிப்பா "இது நடக்காம. இனிமே பாத்துக்கறன் என்றார் 

ஒருவழியாக பிரச்சனை முடிந்து வீடுவந்து சேர்ந்தோம்!

அடுத்த நாள் அந்த வாத்தியார் வரவில்லை! நாங்கள் 8வகுப்பு முடித்து வரும்வரைக்கு ஆண் வாத்தியார் யாருமே அந்த பள்ளிக்கூடத்திற்கு வரவில்லை 

வீரசிங்கம் இருந்தவரை யாரும் வாலாட்ட முடியாது 

சிறுநீரக பாதிப்பால் தன் 45வயதில் இறந்தார்!

அவர் இறந்து இன்றுடன் 15ஆண்டுகள் முடிந்துவிட்டன

அவர்மகன் வேலுச்சாமியும் யாரும் எதிர்பாராமல் தன் 28வயதில் இறந்துவிட்டான்! 

இவர் இறந்த பிறகு இன்று எங்க ஊரில் நடக்காத காரியம் எல்லாம் நடக்கிறது 

அதே வீரத்துடன் சொர்க்கத்திலுயோ நரகத்திலியோ இருப்பாரே என்னவோ!


இங்கு நான் எழுதியிருப்பது முழுக்க உண்மை! அவரை பற்றி நிரைய கதைகளை நேரம்கிடைக்கும் போது உங்களிடம் பகிர்வேன் நன்றி! 


06 November 2015

வீர "சிங்கம் "வராரு"எங்க ஊரிலிருந்து ஒன்றறை கி மீ தூரம் உள்ள பக்கத்து ஊரில் ஊ.ஓ.ந.நி.பள்ளிகூடத்தில்தான் படித்தேன்! என்னுடன்  பலரும் எங்க ஊரிலிருந்து படித்துவந்தோம்!

பள்ளிக்கூடம் இரண்டு கட்டடத்துடன்தான் இயங்கிவந்து! ஒரு கட்டம் காமராசர் காலத்து கட்டடம் !இன்னென்று பஞ்சாயத்து தலைவரின் முயற்சியால் நிதி வசுல் மூலம் கட்டியது 

இந்த கட்டடம் என்பதும் சுற்றிலும் சுவருடன்  கதவு சன்னல் ஏதுமில்லை தரைக்கும் மணல்தான் 

பக்கத்து ஊரிலிருந்து சீனிவாசன் என்ற ஆசிரியர்தான் மூன்றாம் வகுப்பு வாத்தியார்! நானும் எங்க ஊர் என் வயது பசங்களும் அடக்கம் 

சீனிவாசன் வாத்தியார் ஒல்லியான உடம்புடன் நெடு நெடு உயரத்துடன் நல்ல சிகப்பாவும் இருப்பார்! களையான முகத்தில் கண்கள் மட்டும் மிளகாய் பழமாதிரி செக்கசெவேல்னு இருக்கும் 


காலையில் வகுப்புக்கு வரும்போதே புல் சாராய மப்புடன் வருவார்! பள்ளி முடிந்து வீடு  போகும்  போதுகூட போதை கண்களில் மிச்சமிருக்கும்!

வகுப்புக்கள் தொடங்கியதும் ஒரு அரைமணி நேரம் பாடம்நடத்துவார் !அவர் போதையில் நடத்துவது எங்களுக்கு ஒன்றும் புரியாது அல்லது விளங்காது!


போதை தலைக்கு ஏறியதும் "டேய் படிங்கடா "என்று சொல்லிவிட்டு மேசைமீது தலைவைத்து குறட்டை விடுவார்!

அதற்குப்பிறகு நாங்களும் மணற்தரையில் பாண்டி கிச்சுதாம்பலா அப்படினு பல விளையாட்ட புழுதி பறக்க விளையாடுவோம்!

அப்பபப்ப தலைய தூக்கிபாத்து "டேய் சத்தம் போட்டு தொலையாம இருங்கடா "என்பார் 

மதிய உணவுக்கு பின் இதே கதைதான் 

ஆனால் அவர் தூங்கும் சமயம் நாங்க அவர் காலை பிடித்துவிட வேண்டும்!

மதியம்  சாப்பிட்டதும் எங்களுக்கும் தூக்கம் வந்துவிடும்!

தினம் தொடரும் இந்த கால் பிடிக்க ஒரவர் பின் ஒருவராக சுழற்சி முறையில் எங்களுக்கு பணி ஒதுக்குவார்!

அப்படித்தான் அன்று எனக்கும் எங்க ஊர்காரன் வேலுசாமிக்கும் கால் பிடிக்கும் பணி வந்தது !

வாத்தியார் வசதியாக மேசைக்கடியில் காலை நீட்டி மேசைமேல் தலைவைத்து தூங்க 

நானும் வேலுச்சாமியும் காலை அமுக்கிகொண்டிருந்தோம் 

அமுக்க அமுக்க எங்களுக்கும் துக்கம்வந்து தூங்கிப்போனோம் 

என்னைவிட வேலுச்சாமி பயங்கர கருப்பாக இருப்பான் சரியான முரடன் வேறு!

நாங்க ஒரு நொடி கால அமுக்கலனா கூட வாத்தியார்  காலை உதறி ஞாபகப்படுத்துவார் 

மீண்டும் அமுக்க வேண்டும் மீண்டும் தூக்கம் மீண்டும் கால் உதறல்!

நான் எப்படியோ  தூக்கத்த கட்டுபடுத்தி அமுக்கிகொண்டிருந்தேன்!

வேலுச்சாமி தூங்கி தூங்கி விழுந்தான் 
நானும் "அடேய் தூங்காதடா "என்று சொன்னேன்!

என் பேச்சையும் மீறி தூங்க. தூக்கம் கலைந்த வாத்தியாருக்கு கோபம் வர 

வேலுச்சாமியை ஓங்கி நெஞ்சில் ஒரு உதை விட்டார்!

தூக்க கலக்கத்தில் எகிறி விழுந்த அவன் பெரும் அழுகையுடனும் சீறும் சினத்துடனும் வாத்தியாரை பார்த்து 

"ஏன்டா உதைச்ச. பு மவனே "என கத்த மற்ற வாத்தியார்களும் வந்தார்கள் 

வேலுச்சாமி அழுகையுடன் "இப்ப பாருடா "என்றவன் பையை தூக்கி கொண்டு ஓட்டம் பிடித்தான் தன் அப்பா வீரசிங்கத்திடம் சொல்ல 

வீரசிங்கம் புல்லட்டில் வந்து இறங்கினார் 

மொத்த பள்ளிக்கூடமும் கலகலத்து பார்த்தன 

என்ன நடந்தது தெரியுமா!
நன்றி மீதிய நாளைக்கு சொல்றேன்!! 

03 November 2015

எங்க ஊருக்கு வராதிங்க ...4.!""கரும்பு காட்டுல நரிவிரட்டினோம் 

கம்பு காட்டுல கிளி விரட்டினோம் ..

கடலை காட்டுல காக்கா விரட்டினோம். ..

நெல்லு காட்டுல மயில் விரட்டினோம் ...


"குருதுக்குள்  எந்த அப்பனுமில்ல 

அள்ற அளவுக்கு விளையவுமில்ல 

விளையற அளவுக்கு மழையுமில்ல 

வானம் பாத்த மக்களுக்கு வேற வழியுமில்ல ....

"ஓயாம உழுத மாடுக .,

உறங்கியே  களச்சு போச்சுங்க ...

வரப்புலேயே மேய்ஞ்ச வண்டி மாடுக ...

பாரம் சுமக்க மறந்து போச்சுங்க ...."காட்ட வித்தாவது கான்வெண்ட்டுல 

படிக்க வைக்கனும்ங்க ...

கடன் வாங்கியாவது கவர்மெண்டுல 

வேல வாங்கியே தீரணும்ங்க ...


"எங்க பொழப்பு மண்ணோடு 

மண்ணா கலந்தாச்சுங்க ...

எங்க மக்கா மாருகளாச்சும் 

ஆடி கார்ல ஆடாம போகட்டுங்க ..


"நீங்க இங்க வாழ வரவேணாம் 

எப்படி வாழரோம்னு பாக்க வாங்க!!


நன்றி!!! 31 October 2015

கண்ணா பின்னா கவிதைகள் ..!


"நான் "இறந்ததும் 
எரித்துவிடாதீர்கள் 
புதைத்துவிடுங்கள் 
புதைத்த இடத்தில் 
சிறுசிறு பூக்காளாவது பூக்கட்டும் 

(இங்கு நான் என்பது நானல்ல நான் என்ற அகந்தை)


"மோதலில்தான் 
காதலாம் 

வா 
மோதிப்பார்க்கலாம் 

(கீழே விழாமல் மோதிப் பாருங்கள்) 

"நீ இப்படித்தானா "
என்கிறாய் 
எப்படி எப்படியோ
சொல்லி புரியவைத்தேன் 
இறுதிவரை ஏற்கமறுக்கிறாய் 
"நீயும் இப்படித்தானா "

கண்ட கண்ட கல்லை
கடவுள் என்கிறாய் 
கண்ட கண்ட மனிதர் 
காலை கழுவுகிறாய் 
கண்டகண்ட சரக்கு 
குடிக்கிறாய் 
கண்டும் காணமலும் 
கதைக்கிறாய் 
நீ இருந்தும் இல்லாமலும் 
வாழ்கிறாய்! 


"தலைக்கணம் அதிகம் 
என்கிறாய் 
தவறு திருத்துவிடு 
உண்மையில் 
மனதில்தான் அதிககணம் 
அதுவே  என் குணம் 


நன்றி இரு நாட்களாக சரியான தலைவலி! ஓய்வில் இருக்கும் சமயம்தான் கண்ணா பின்னானு எழுத வருகிறது! நன்றி 

29 October 2015

வாழ்த்த வாங்க ...!!


"நாளை (30.10.15 )வெள்ளியன்று என் செல்ல மகள் முதல் பிறந்த நாளை கொண்டாடுகிறார்! "ஜோகிதா "தங்கத்தை வாழ்த்துங்கள்! வளரட்டும்! வளம்  பெறட்டும்! 


பிகு :இந்த படங்கள் 6.7வது மாதங்களில் எடுத்தது!) 

வாழ்த்த வாங்க நட்புகளே! நன்றி 

28 October 2015

சில்லைறையாக சிரிக்காதே ..!4Gகவிதைகள்

விளக்கம் :4gகவிதை என்பது ரூல்ஸ் பார்க்காமல் எழுதுவதே (பி.கு) இங்கு பலர் அப்படித்தான் எழுதுகிறோம்!


"சில்லைறை "யாக 
ஏனடி ...
சிரித்து தொலைக்கிறாய் 
கோடி ரூபாய்க்கு 
எங்கு போவேன் ...!!

""ஒரே ஒரு தரம் 
திரும்பி பாரேன் 
தாரமாக வேண்டாமா?
சாபமாகுவதற்குள்
சம்மதம் தா ...!!


""உனை 
நினைக்காத சமயங்களில் 
கொசுவாய் கடிக்காதே 
ஆல்அவுட் 
வைக்கதுடிப்பவர்கள் 
அறியவில்லை ...!!


""110
நமக்கு நாமே 
முதல் கையொழுத்து,
மக்கள் கூட்டு இயக்கம்,
மக்களுக்காக மக்கள் பணி,
இத்தனையிருந்தும், 
நம்மை 
சேர்த்துவைக்க 
எவர்க்கும் துப்பில்லை ..!!


""சென்ற இடமெல்லாம் சிறப்பு 
முதல்வருக்கும் 
மதல் போட்டு குடிப்பவனுக்கும் .!"மலர்கள் மலர்வது 
வாடுவதற்காகல்ல 
நம்மை வாழ்த்துவதற்காகத்தான் ...!!நன்றி! இன்னும் நிறையாக இருக்கு! இது நிறைவா?
சொல்லுங்க ..!!

27 October 2015

கரிசனம் கட்டிகிட்டு அழுகுது ...!!


"ஏனிந்த திருட்டுத்தனம் 
முறைத்துப்பாரேன் 
மூழ்கிவிடவாப் போகிறேன் ..!

""*கரிசனம் 
கட்டிகிட்டு அழுகுது 
காவேரி 
கண்ணீர் வரண்டு புலம்பது 
கடமை 
கால்ல. விழுந்து கதறது 
தமிழ்நாடே 
கோடநாடு போகுது ..!!

"நீ பார்க்கும் 

பொருட்களும் ..

உனை பார்க்கும் 

பொருட்களும் 

சிந்திக்க வேண்டாம் 

சிரிக்காவது சொல்லிக்கொடு!! 

"டீவி குட்டிபோடாது 

ஆடு ஓட்டும் போடாது!!""*அடக்கு முறைக்கு 

அடிபனிய மாட்டோம் 

என்றவர்கள் 

அரசு கடையை கண்டால் 

தளர்ந்துவிடுகிறார்கள்.,.!!"நீ வீசிய கோலம் 
நீ வீசிய பார்வை 
நீ வீசிய முறைப்பு 
நீ வீசிய பேப்பர் 
நீ வீசிய பஸ் டிக்கெட் 
நீ வீசிய நான் 
இவையும் கவிதைதான் 

(இப்படி எழுதினாத்தான் லைக்ஸ் வருதுங்க)


நன்றி !! 

26 October 2015

அப்பாச்சி ....!!

"என்னுடைய முகநூல் வாட்ஸ்அப் கவிதைகள்!! 


"
அப்பத்தா  
ஆச்சிகளை

முதியோர் இல்லத்தில் 

சேர்த்துவிட்டு 

"அப்பாச்சிகளை "

ஷோரூம்களில் 

தேடிக்கொண்டிருக்கிறோம் ...!!


"நீ கிடைக்க.

வெள்ளைப்பிள்ளையாருக்கு

108தேங்காய்  உடைத்தேன்

எதிரே ..

ஏன் வந்தாய் 

1008தேங்காயாய் அல்லவா 

சிதறிப்போனேன் ,.!!


"கம்பங்கூழ் குடிச்சு 

உயிர வளர்த்தவங்க ..

நுங்கு குடிச்சு 

தெம்பு வளர்த்தவங்க ..

சாராயம் குடிச்சு 

சண்ட வளர்த்தவங்க..

டாஸ்மாக்ல குடிச்சு 

இப்ப அரச வளர்க்கிறாங்க ...!!
"தவறி விழுந்தோ.

தன்னால் விழுந்தோ


நல்ல விதைகளை 


முளைக்க  விடவதேயில்லை 

நாம் ...!!


நன்றி! நாளைக்கு 4Gகவிதைகள் வரும் 

24 October 2015

ஆண்ராய்டு திருமணங்கள் ....(சி சி 2)"இன்று திருமணங்கள் சொக்கத்துல நிச்சயக்கப்படுதா? இல்லையானு எனக்கு தெரியாது! ஆனால் ஆண்ராய்டு போனால நிச்சயக்கப்படுதுனு ஆணித்தரமா என்னால் சொல்லமுடியும்! 

இதுவும் நேற்று நடந்த சம்பவம்தான்!

"என் வீட்டருகில் இருக்கும் ஒரு குடும்பத்தில் நடந்தது! 18வயது நிரம்பாத அந்த பெண் அவர்கள் வீட்டில் தங்கி ஒரு பாலிடெக்னிக்கலில் முதல் வருடம் படித்து கொண்டிருந்தாள்! இந்த பெண் ஆறுமாதமாக இவர்கள் வீட்டில் இருப்பதுகூட எனக்கு தெரியாது! அவ்வளவு அடக்கமான பெண்ணாம்! அவர்கள் வீட்டில் இந்த பெண்ணுக்கு என்ன காரணமோ, மாப்பிள்ளை பார்த்துவிட்டார்களாம்! கூடவே காஸ்டிலி செல்லும் மாப்பிள்ளைகாரன் வாங்கி தர எந்நேரமும் பேச்சு பேச்சுதான் !விடிய விடிய போசினாலும் இவர்கள் கண்டுகொண்டதாக தெரியவில்லை! ஒருவேளை "உரிமையானவுடன்தானே பேசுறா என்று விட்டுவிட்டார்கள்! இதற்கிடையில் மாப்பிள்ளை வீட்டில் உடனே திருமணத்தை நடத்த வேண்டும் என்றதும் பெண் வீட்டுக்குகாரக்களுக்கு சந்தேகம் வந்து "உங்க சம்பந்தமே வேணாம் என்றிருக்கிறார்கள்! இந்த விசயத்தை இந்த பெண்ணிடம் சொல்ல எதையும் வெளிக்காட்டாமல் "அப்படியா ரெம்ப சந்தோசம் "என்றவள்? அந்த செல்லை கிழே போட்டு உடைத்துவிட்டாள்! என் பக்கத்துவீட்டுகாரர்கள் அந்த பெண்ணை உச்சிமுகர்ந்தார்கள் "ரெம்ப நல்லவளா இருக்கா "என்று என் மனைவிகூட சொல்லி  புல்லறிக்க வைத்தாள்!

நேற்றுதான் யாரும் எதிர்பார்க்காத திருப்பம் நடந்துச்சு!

ஊருக்கு போயிட்டு வர்றேனு போனவா நேரா மாப்பிள்ளை வீட்டுக்கு போயிட்டாளாம் 

படிக்கிற பெண்ணுக்கு திருமணம் நடத்தவேண்டும் என்று யார் செய்த தவறு


படித்து முன்னேற வேண்டும் என்று இன்றைய பெரும்பாலான பெண்கள் இருப்பதில்லை!

திருமணம்செய்து பிள்ளைகள் பெருவதே பலர் சாதனையாக நினைக்கிறார்கள் என்பதுதான் உண்மை!

"மாப்பிள்ளை பார்த்து பெற்றவர்கள் தவறுதானே!
அதிலும் செல் தந்து பேச சொன்னது முட்டாள்தனம்! அதைவிட கண்டிக்காமல் இருந்தது பெரும் தவறு!

எல்லா தவறுகளையும் பெற்றவர்கள் செய்தாலும் இந்த வயதில் திருமணத்திற்கு என்ன அவசரம் என்று அந்த பெண்ணுக்கு யாரும் சொல்லவில்லை!


18வயதிலேயே திருமண ஆசையை வளர்த்தது யார்! சினிமா சமுக தளங்களுக்கும் இதில் பங்கு உண்டு! 
அறியாத வயதில்  தெரியாமல் செய்யும் செயல்கள் என்னமாதிரி விளைவுகளை ஏற்படுத்தும்!! 

"ஆண்ராய்டும் அவமானத்தை தரும்
அழிவையும் தரும்
நம்மிடமிருக்கும் சில்லறைத்தனமான சிந்தனைகளில் இதுவும் உண்டு!!!

நன்றி!!! 

23 October 2015

கீழ்கண்டவற்றுக்கு ஆட்கள் தேவை ..?(சி சி ..1)"நேற்று என்னுடன் வேலைபார்க்கும் நண்பர் தன் கைபேசியில் இருந்த ஒரு விடியோ "வை காண்பித்தார்! அதை பார்க்க பார்க் அதிர்ச்சி! அதிர்ச்சி என்பதை விட இந்த மனித சமுகம் எதை நோக்கி போகிறது என்ற கேள்விதான் எழுகிறது! மனித மனம் இன்னும் நல்ல முறைகளுக்கு மாறவில்லை வக்கிற எண்ணங்களால் நிரம்பியிருக்கிறதா என்பதை நிருபிக்கும் செயல்தான் நான் வீடியோவில் பார்த்தது?


அந்த வீடியோவில் இருந்தது ....


"நகரின் முக்கிய நான்கு வழிசந்திப்பில்  பலவித வாகனங்கள் வருவதும் போவதுமாக இருக்கும் நேரத்தில். திடீரென்று ஒரு பெண் கைகளை விரித்தவாறு எதிர் வரும் வாகனங்களை நிறுத்த "டேய் ...த்தா "வண்டிய நிப்பாட்டுடா "என்று மறிக்கறார் வண்டியோட்டிகளில் சில அதிர்ச்சியாகி நிப்பாட்டிவிடுகிறார்கள்! சிலர் "எது நடந்தா எனக்கென்ன என்று விரைகிறார்கள்? அந்தப்பெண்ணுக்கு பைத்தியம் பிடித்துவிட்டதா? என்று நீங்கள் நினைக்கலாம்! உண்மைதான் அறிவை மழுங்கடிக்கும் மதுவை குடித்து சீரழிந்தால் பைத்தியம்தானே! அந்த பெண்  இல்லை குடும்ப தலைவி போல இருந்தாள், நிலைகொள்ளமுடியாத போதையில் என்ன செய்கிறோம் என்பதை சிறிதும் உணரமுடியாத நிலையில் இருந்தாள்! ஒவ்வொரு  தடவையும் வாகனங்களை நிப்பாட்ட முயற்சிக்கும் போது கீழே விழுந்தாள்! அவள் கூட இருந்தவன் அது கணவனா? கள்வனா தெரியாது "அடியே ஏன்டி இப்படி செய்யிற "என்று தலையில் அடித்துக்கொண்டு அவளை இழுப்பதும் பிடிப்பதுமாக இருந்தான்! அவள் கட்டியிருந்த சேலை நலுவியதுகூட அவளுக்கு தெரியவில்லை! அவள்கூட இருந்தவன் எவ்வளவோ கெஞ்சியும் அவள் கேட்கவில்லை, கேட்கும் நிலைமையுலும் இல்லை! பாவாடையுடனும் ஜாக்கட்டுடனும் அவள் மறுபடியும் வண்டிகளை நிப்பாட்ட முயற்சித்தாள்! அங்கு கூடியிருந்த எந்த ஆணும் சரி பெண்ணும் சரி அவளுக்கு உதவி செய்ய முன்வரவில்லை! அவள் மார்பகம் தெரிய ஆரம்பித்ததும் நல்ல மனம் படைத்த சிலர் தத்தம் கைபேசிகளில் படம்பிடிக்க ஆரம்பித்துவிட்டார்கள் 


"அப்படி பிடிக்கப்பட்ட வீடியோவைத்தான்  நான் பார்த்தேன்! நண்பரும் சிறிதும் வெட்கம் மானம் சூடு சுரனை எழுதுமில்லாமல் தன் வண்டியை நிப்பாட்டி விட்டுத்தான் இதை பிடித்திருக்கிறார்?

இதைவிட ட்ராபிக்கை சரிசெய்த பெண் காவலர் எதையும் தாம் பார்க்கவில்லை என்று இருந்ததை என்ன சொல்வது என்றே தெரியில்லை 

"இப்படி வக்கிர புத்தி கொண்டவர்கள், நடுசாலையில் அவர்கள் உறவுகள் நடந்துகொண்டிருந்தாலும் படம் பிடித்திருப்பார்களோ? என்னவோ?

மனித மனத்தில் ஒரு துளிகூடவா மனிதன்மை இல்லாமற்போய்விட்டது?? அந்த பெண் நிஜ வாழ்வுக்கு திரும்பினால் "நீ இப்படி நடந்துவிட்டாய் "என்றால் அவளுக்கு அது சங்கடத்தை ஏற்படுத்ததா?

தெரியாமல் செய்வது தவறு என்றால் தெரிந்தே செய்த ஈரமில்லாதவர்களை என்ன செய்வது???

இப்போதைய. சூழ்நிலையில் பிறக்கும் சிசுவுக்குதான் "போதை பழக்கம் இல்லையோ?

அதற்கும் கூடிய விரைவில் பழக்கப்படுத்திவிட்டுத்தான் மதுவை ஒழிப்பார்களா?

"இப்படிபட்ட கீழ்த்தரமான, மட்டமான, சில்லறைத்தனமான சிந்தனைகளை எப்போது நாம் உணரப்போகிறோம்!! 

குறிப்பு (அந்த வீடியோவை என் கைபேசியால் இணைக்கமுடியவில்லை எப்படியும் வாஸ்அப் "பில் வரும் பாருங்கள்)

நன்றி 

22 October 2015

அட்மிஷன் நடைபெறுகிறது .குறைந்த இடங்களே உள்ளது ...??!
"விஜயதசமியை முன்னிட்டு Lkg .Ukg வகுப்புகளுக்கு அட்மிஷன் நடைபெறுகிறது "என்று நேற்று பல இடங்களில் பார்த்தேன்! இதில் ஆச்சரியப்பட அதிசியக்க விஷயம் ஒன்றுமில்லைதான்! காலங்காலமாக நடப்பதுதான்! ஆனால் முதியோர் இல்லங்களில் அட்மிஷன் நடைபெறுகிறது என்ற பிளாக்ஸ் போர்டும் சில இடங்களில் நேற்று தென்பட்டது? மனதுக்கு வருத்தத்தை தருகிறது! 3வயது குழந்தைக்கு 3லட்சம் நன்கொடை தந்து பள்ளியில் சேர்க்கும் நாம், பழுத்த அனுபவங்களை  கனிந்த இதயங்களை முதியோர் இல்லத்தில் சேர்ப்பது என்ன கலாச்சாரம் என்ன பண்பாடு? எந்த முதியவரும் விருப்பபட்டு முதியோர் இல்லத்திற்கு வருவதில்லை மடையர்களே? அவர்களை வைத்து பராமரித்து  புண்ணியம் தேடிக்கொள்ளும் மகான்களே. இதயமில்லாமல் அட்மிஷனுக்குஅழைத்து  வரும் கூறுகெட்ட ஜென்மத்திற்கு எதாவது அறிவுறை சொல்லுங்க! இல்லையா முதியோர் இல்லத்தை மூடிட்டு மனமாற்று இல்லம் வச்சு தெலைங்க!!!


"வெங்கடாசலபதி சாமி 
முருகன் சாமி 
கருப்ப சாமி 
குலசாமி 
வேப்பமர சாமி 
சின்ன சாமி 
பெரிய சாமி 
இத்தனை சாமிய 
வேண்டியும் 
ஏன்னு கேக்காத சாமி 
என்ன சாமி!!!! 

"நேற்று நாடு முழுவதும் விதவிதமாக ஆயுத பூஜை எல்லாம் கொண்டாடினேம் 
அது தேவையானதுதான்! ஆனால் இறுதியாக கண்திருஷ்டி என்று தேங்காயையும் பூசனிகாயையும் நடு வீதியில் யாருக்கும் பத்து பைசா பயனில்லாமல் உடைப்பது என்ன பக்தியில் சேர்ப்பது! நேற்று ஒரு நாள் மட்டும் எத்தனை எத்தனை தேங்காயும் பூசனிகாயும் உடைந்து தன் உயிரை விட்டிருக்கும்? இதற்குபின்னால் எத்தனை விவசாயிகள் உழைப்பிருக்கும்!
நடுவீதியில் நடு சாலையில் உடைத்தால்தான் திருஷ்டு நீங்கும் என்று யார் எந்த புராணத்தில் சொல்லியுள்ளார்கள்! உருவாகும் ஒவ்வொரு பொருளும் அதுதது இதற்குத்தான் என்றால் மனிதன் மட்டும் என்ன தேவைக்காக படைக்கப்பட்டுளான்??? 
(நான் என் அனுபவத்திற்கு அப்பாற்பட்டு கூறியிருந்தால் மன்னிக்கவும்)

"தி ஒ தகவல் :விஞ்ஞானமும் மெய்ஞானமும் கைகோர்த்துக்கொண்டால் மட்டுமே மனித சமுதாயம் சிறக்கும்!!

அழகு என்பது கடமையை பாதிக்கும் கடமையை சரியாக செய்தால் மட்டுமே வாழ்க்கை உயரம் :சொன்னவர் நம் கலாம் அய்யா!

நன்றி!!! 


21 October 2015

ம் ....என்னத்த சொல்ல....!? 2"கண்டம் விட்டு கண்டம் தாக்குற ஏவுகனை முதல் மனிதனை அழிக்கும் அத்தனை விசயங்களையும் கண்டுபிடித்துவிட்டோம்! அத்தியாவச பொருட்களான இந்த வெங்காயம் பருப்பு  போன்றவைகள் விலையோற்றத்திற்கு என்ன காரணம் என்று யாராவது கண்டுப்பிடித்தார்களா? ராக்கெட்டை விட விலை உயர்வுக்கு எது? யார் காரணம்! பற்றாக்குறை இறக்குமதி செய்யவேண்டும் என்கிறார்கள்! பணக்காரர்கள் பாவம் ஏழைகள் என்கிறார்கள்! ஒவ்வொரு சமயத்திலும் மட்டும் ஏன் விலை ஏறவேண்டும்? துண்டு துக்கடா கட்சிகள் எல்லாம் பல நிறுவனங்கள் வியாபரிகளிடம் தேர்தல் நிதியாக லட்சலட்சமாக வாங்கினால் நன்கொடை கொடுத்தவன் எப்போது விட்ட காசை பிடிப்பான்! இப்படித்தான் பிடிப்பான்! இதுதான் உண்மையான காரணமாகவும் இருக்கும்! அடுத்த தேர்தல் வரப்போகிறதே?? காசு தரவேண்டுமே! அதற்குள் இன்னும் என்னவெல்லாம் விலையேறப்போகிறதோ? 
இன்னும் ஆறுமாத காலத்திற்குள் அவஸ்தைபட போவது தினக்குலிக்கு போகிறவர்கள்தான்! மற்றவர்கள் கஸ்டப்படுவது போல நடிப்பார்கள்!!!

அரசியலை மிஞ்சி நம்ப நடிகர்கள் அடிதடி கலாட்டா எல்லாம் செய்து ஒரு வழியாக பாண்டவர் அணி சங்கத்தை பிடித்துவிட்டது! இந்த அணியின் முக்கிய லட்சியம் நடிகர்சங்க கட்டிடம் கட்டுவதான்! அதற்கு நிதி வசுல் செய்யவேண்டுமாம்! ஏங்கடா ஒரு படத்துக்கு ஆயிரம் இரண்டாயிரமா சம்பளம் வாங்குறிங்க! உங்க நடிப்பு திறமைக்குத்தான் நாப்பது அம்பது கோடி வாங்குறிங்களே! ஆளுக்கு ஒரு லட்சம் போட்டாவே ஆசியாவிலேயே பெரிய கட்டிடமா கட்டிலாம் ????ஊரான் காசுனா அம்புட்டு எளப்பமா?? 

""தி ஒ விளக்கம் :இன்று நம் உலகித்திற்கு மிக தேவையானது புத்திசாலிதனம் இல்லை! அது நம்மிடம் அதிகமாகவே உள்ளது! உலகத்தில் இல்லாமல் இருப்பது நல்ல தூய்மையான மனம்தான்! தூய்மையான மனம் இந்த உலகத்தில் அழிக்கபட்டுவிட்டது! குழந்தைகள் மனதை போல தூய மனங்கள் வேண்டும்! அது நம்மிடம்தான் உள்ளது! நம்மனம் குழந்தையின் மனதைப் போல சுத்தமாக இருந்தால் இந்த உலகம்  பூஞ்சோலையாக இருக்கும்!! தி ஒ தகவல்.     :இணையதளத்தில் உள்ள 4ஆயிரத்து 500கோடி பக்க தகவல்களை அச்சடிக்கவேண்டுமானால் 13ஆயிரத்து 600கோடி பேப்பர்கள் வேண்டுமாம்!
விக்கிபீடியாவில் உள்ள 4கோடியே 72லட்சத்து 91ஆயிரம் பக்கங்களை அச்சாக்கவேண்டுமானால் 
7கோடியே 8லட்சத்து 59ஆயிரத்து 865பேப்பர்கள் வேண்டுமாம் !இதற்காக அமேசான் காட்டில 1கோடியே 60லட்சம் மரங்களை வெட்ட வேண்டும்!

"ஆக இதில் கிடைக்காத தகவல் என்னன்னா!? நம்ம சொந்த கதை நெந்த கதை தான் எழுதவேண்டும் 
அதிவுமில்லாமல் இதில் உள்ள தகவல்களை வைத்து எழுதி பிரபலமடைய அதிர்ஷ்டமும் வேண்டும் போல!! 

"தி ஒ சிந்தனை :ஒரு தரம் வந்தால் அது கனவு! இரு தரம் வந்தால் அது ஆசை! பல தரம் வந்தால் அது லட்சியம்!! இப்படி தம் கலாம் அய்யா சொல்லியிருக்கார் !

இன்னிக்கு வேல கம்மி அதான் நேரத்துலயே எழுத்திட்டேன்!!

நன்றி!! !

20 October 2015

இரண்டு வார்த்தை கதைகள்...!"அனைத்து அன்பு உள்ளங்களுக்கும்  வணக்கம்! இது என்னுடைய 50வது பதிவு !கைபேசியில்!! "இரண்டு வார்த்தைகளில்கூட அருமையாக கதை  எழுத முடியும் என்று சுஜாதா சார் சொல்லியிருக்கார்!

இது என் முதல் முயற்சி :

தலைப்பு :நீயெல்லாம் கதை எழுத ஆரம்பித்தால் நல்லாயிருக்குமா ??

கதை :முயற்சி திரு வினையாக்கும்  !

 தலைப்பு :இந்த வயதில் காதலிப்பது தவறு                     : 

கதை :வரைமுறை இல்லாமல் வருவதே காதல்!


தலைப்பு ::குற்றவாளிகளை பிடிக்கமுடியாமல் கஷ்டப்பட்டான் 

கதை :எழுத்தாளனால் எப்படி முடியும்!!

தலைப்பு :பிரபல ரவுடி வெட்டிக்கொலை 

கதை,:டாக்டர் போஸ்மார்ட்டம் ரிப்போர்ட் ரெடியாடுச்சா !


(இது எப்படினு பார்த்துச் சொல்லுங்க!) 


விளக்கம் :ஹைக்கூ என்பது மூன்று வரிகளில் 17அசைகளுக்குள் ஒரு காட்சியை வியக்க. வைக்கும் கவிதை!

இதை எழுத காரணம்  இங்கு பல கவிதை பார்த்தேன்! அது ஹைக்கூவா என்பது சரியாக புரியவில்லை! எனக்கு இது போல எழுதத்தெரியாது! இந்த 17அசைகள் என்னவென்று யாராவது விளக்கினால் பரவாயில்லை!!


தி ஒ தகவல் :இறப்பு என்பது இயற்கையாநிகழக்கூடிய. ஒன்று! சாதரணமான மனுசனால் அதன் வரவை அறியமுடியாது அது தேவரகசியம்! ஆனால் ஞானிகளுக்கும் முனிவர்களுக்கும் அது எளிய செயல் மரணத்தின் முதல் அறிகுறி தெரியும்போதே அதை ஞானிகள் எதிர்கொள்ள தயாராகிவிடுகின்றனர்! இயற்கையான மரணத்தின் முதல் அறிகுறி எந்த உறுப்பில் தெரியும்? இது சிக்கலான கேள்வி! பிறப்புக்கு ஒரு வழிதான்! ஆனால் மரணத்திற்கு பல வழி! மரணம் ஒரு மனிதனுக்கு ஏற்படும் சமயம் முதலில் செயலற்றுப் போவது அவனுடைய. தொடை பாகமே என்பது ஞானிகள் கருத்து!!

ஊழலற்ற நாட்டை உருவாக்க மூவரின் உதவி அவசியம் அவர்கள், தாய், தந்தை, குரு,

இப்படி சொன்னவர் நம் கலாம் அய்யா!!

நன்றி ஊக்கப்படுத்தும் நண்பர்களுக்கு மீண்டும் நன்றி 

அனைவருக்கும் "சரஸ்வதி ஆயுத பூஜை வாழ்த்துக்கள்!

நன்றி !!

19 October 2015

55 சிறு சிறு கதைகள்..


சிறு விளக்கம் :55வார்த்தைகளில் எழுதப்படும் சிறு கதைகளில் காட்சியமைப்பும் முடிந்த பின் அதனைபற்றிய சிந்தனையும் இருக்கவேண்டும் இது என்முதல் முயற்சி

"காதல் -தலைப்பு

"நீண்டநாட்களாக புவனா மேல் ஒன்சைடாக காதலித்து வருபவன் குமார், அவளுக்காக எதை வேண்டுமானாலும் இழக்க தயார் நிலையில் இருந்தான்

புவனா அவனை கண்டுகொள்ளவே இல்லை

கடிதம் முதல் தொழில் நுட்பத்தின் அனைத்து வசதிகளையும் முயற்சித்து தூதுதனுப்பினான்

வழக்கம் போல் வருமிடங்களில் காத்திருந்தான் ம்ஹிம் அவள் பார்க்க கூட மறுத்தாள்

நெந்துபோன குமார் அந்த விபரீத முடிவை எடுத்தான்,

அது தானும் இறந்து அவள் ஆவியுடன் கலப்பது!

கயிறொடுத்து சுருக்கி தலையை மாட்டினான் !

த்ரிலர் கதை!

55ரூபாய் கொலை

வேலு சரியான குடிடிகாரன் எப்போதும் பாட்டிலும் கையுமாகமிருப்பான், கண்களில் நெருப்பை கொட்டியது போலமிருக்கும்

வேலு அந்த ஒதுக்குப்புறமான அரசு தண்ணிகடையில்தான் சரக்கடிப்பான்

வாயிலிருந்து எடுக்காமல் மூனு நான்கு கூலிங் பீரை குடித்துவிடுவான்

அவன் சகாகளுக்கு ஆச்சரியமாகவும் பொறாமையாகமிருக்கும்

அன்று ஒரே மூச்சாக நாலு பீரை குடித்து ஐந்தாவதில் பாதி குடிப்பதற்குள் தலை வெடித்து இறந்தான்

கடைசியாக குடித்த பீரீல் கூலிங் குறைந்ததே தலைவெடித்து இறக்க காரனம் என மருத்துவறிக்கை சொன்னது!


நன்றி