click to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own text

28 July 2015

அக்னி சிறகுகள்

* 1999ம் வருசம்  பொக்ரான் அணு குண்டு சோதனையில் சாதனை
படைத்து உலக நாடுகளை மிரல
செய்தவர் டாக்டர் ஏ பி ஜெ
அப்துல் கலாம்  அவர்கள்!!


*அந்த வருடம்தான் Yssp (young. Student scientics program) அதாவது
இளம்மாணவர் அறிவியல் அறிஞர்களை உருவாக்கும் திட்டம் 
ஆரம்பித்து இந்தியா முழுவதும்  கொண்டுவந்தார்கள்

*அதில் நானும் ஒருவனாக தோர்ந்தெடுக்கபட்டேன் மொத்தம் 100மாணவர்கள்களுக்கு திருச்சி  
ஜோசப் கல்லுரியில் பயிற்சி கெடுத்தார்கள்!!


*ஒருமாத பயிற்சியின் நிறைவுநாளின்போது,, அக்னி சிறகு நாயகரை சந்திக்கும் வாய்ப்பு பெற்றேம்

*கான்பரஸ்காலில் இருந்து
விடுவிடு வென்று வந்தார்கள்
நான் ரெம்ப குட்டையாக 
இருந்ததால் முதல் படிக்கட்டில்
நின்றுகென்டிருந்தேன் 

*முதல்நபராக எனக்கும் 
சிலமாணவர்களுக்கும் கை கொடுத்தார்கள்
பிறகு புகைப்படம் எடுத்துகொண்டோம்

*எல்லோரும்  சிறந்த முறையில் படித்து எதிர்கால இந்தியா விற்கு துணை புரிவீர்களா? என்று 
கேட்டார் கலாம் அய்யா 
இருப்போம் ""என்று ! 100மாணவர்களும் சொன்னேம்


*அவர்களுடைய எளிமையத்தான் எங்களை ரெம்ப கவர்ந்தது 
இன்றுவரை அவருடைய
ஹேர்ஸ்டைலைதான் கடைபிடித்து வருகிறேன்

*இன்று அவர் மறைந்துவிட்டார்
அறிவியில் இருக்கும்வரை 
அவர் இருப்பார் அக்னி சிறகுக்கு 
என்றும் அழிவில்லை!! 

25 July 2015

நீங்கள் அதிர்ஷ்டசாலி???

உண்ண உணவும், உடுத்த உடையும்
வசிக்க இடமும் உனக்கு இருந்தால்
உலகில் உள்ள 75%மக்களைவிட நீ
வசதி உள்ளவன்,,,!!!


வங்கியில் பணமிருந்தால்
8%பணக்காரர்களுள் நீயும் ஒருவன்
உலகில்80%மக்களுக்கு  வங்கி கணக்கே இல்லை!!!


உன்னிடம் கம்யூட்டர் இருந்தால்
அவ்வாய்ப்பு பெற்ற 1%மனிதர்களில் நீயும் ஒருவன்!!!

24 July 2015

களவு போன கவிதைகள்

 
       வாடுவதற்கு வருந்துவதில்லை
                       பூக்கள்!!

        இறப்பதற்கு அஞ்சுவதில்லை
                      விட்டில் பூச்சிகள்!!


       1,மாதா
        2,பிதா
        3,குரு
        4,தெய்வம்
        5,இதையும் சோர்த்து கொள்ளுங்கள்

       ""ஸ்மார்ட்போன்"""


        இன்று சரியாய்
         படிக்காதவர்கள்,,,,

         நாளை  தம்
         குழந்தைகளுக்காக
         படிக்கிறார்கள்!!!!


         சும்மாயிருக்கும்
         கடவுளுக்கு 1008 அர்ச்சனை

         வேலையில்லாமலிருந்தால்
          நமக்கு 1008 அறிவுறை!!!!



        நீ வீசிய பூ,
        நீ வீசிய சாக்லெட் பேப்பர்
        நீ வீசிய. ஐஸ்கிரீம் குச்சி
       நீ வீசிய  நான்,,,,
       இவையும் கவிதைகள்தான்!!!!




        கனவு
        காண்பவர்களை விட,,,
        அதை
        தேடுபவர்பகள்
        இங்கு குறைவு!!!!!!



     

16 July 2015

தினம் கொஞ்சம் சீரியஸ்

மறைந்த மெல்லிசை  மன்னர்
அவர்களுக்கு அரசு சார்பில்
மரியாதை செலுத்தவில்லை!!!!
 -செய்தி

1200 படங்களுக்கு இசையமைத்த
அவர்க்கு மத்திய அரசு  சரியான 
 கெளரவம் தரவில்லையென 
நம் தமிழக அரசு சொல்கிறது!?
37மந்திரிகள் இருக்கும்  நம் அரசுக்கு 
இது தெரியாதா??

மற்ற மாநிலங்களில்இதுபோன்ற 
கலைகர்களுக்கு அரசு சார்பில் 
மரியாதை அளிக்கும்போது 

ஏன்??????  

தமிழக அரசு செய்யவில்லை 
உரிய அங்கிகாரம் வழங்கவில்லை 


மற்ற மாநிலங்களில்  டாஸ்மாக் இருக்கிறது  அதனால் தமிழகத்திலும் இருக்கிறது!!!  நீதிமன்றமும் இது அரசின் கெள்கை முடிவு 
தலையிடமுடியாது என்கிறது??

சட்டசபை நிகழ்சிகளை நேரடியாக ஒளிபரப்ப நிதி இல்லை, மற்ற மாநிலங்களில் இது நடைமுறையில் இல்லை  அதனால் தமிழ்நாட்டுக்கு இது தேவையில்லை என்கிறது !!!

அரசும் நீதிமன்றமும் 
கோவில் கோவிலாக யாகம் செய்யும் போது, கன்டுகெள்ளாது 

எதிர்கட்சிகளுக்கு ஒருமாதிரி 
பதிலையும்,  மக்களுக்கு ஒருமாதிரி 
பதிலையும் சொல்லகூடிய அரசு நம் 
தமிழக அரசு?!!!



மக்களின் கெள்கை முடிவு 
என்ன என்பதை யார் அறிவார்கள்






நன்றி இவை என் கருத்துகளே

10 July 2015

கோவிந்தனின் அப்ரண்டீஸ் கிராமம்

            எங்கள், கிராமத்தை பார்க்காமல் சாகமாட்டேன் என்று 
கோவிந்தன் அடம்பிடித்தான்!!

சிட்டியில் வாழ்ந்த அவனுக்கு  இந்த ஆசை ஏன் வந்தது என்பது எனக்கு
 தெரியாது!  

கிளைமேட் ஒத்துக்காது என்று எவ்வளவோ சொல்லிபார்த்தேன்
முடியாது என்றான்?

சரி வந்து தொலை??!  

எங்கள் கிராமத்தை பார்த்து
ஒரு நிமிசம் மயங்கிவிட்டான்

ஆமாம் கண்ணுக்கு எட்டிய தூரம் 
பச்சை கிடையாது! சூரியனின் 
மொத்த கோபமும் எங்கள்  கிராமத்து மீது விழுந்து சும்மா   தக தகனு  சுட்டெரித்தது?   

மச்சி இந்த ஊர்ல எப்படிடா இருக்கீங்க?

பரம்பரையா இங்கதான் இருக்கோம்

"யாரும் கண்டுகலயா? ""

யார் கண்டுகனும்? '

அரசாங்கம்,?  Mp.mla. இவங்கதான்

பஞ்சாயத்து தலைவரே கண்டுகறது
இல்ல இதுல இவங்க எங்க??

எப்பதான் கண்டுக்குவாங்க??

உலகம் அழியறப்ப?  இல்லனா நாங்க மொத்தமா சாகறப்ப, இல்லனா? ஓட்டு கேட்டு வர்றப்ப?

ஏன் நீங்க அரசுக்கு மனு  எழுதி  
போடலாமே?? 

எழுதி எங்க கொடுக்கறது?  
டெல்லிக்கா?  சென்னைக்கா?  ஒன்னு
ஊர் சுத்துறாங்க, இல்லனா 
கோயில்ல சுத்துறாங்க?

அப்ப இதுக்கு என்னதான் முடிவு??

அது ஆட்சியாளர்களின் கையில அதுக்கு ஆண்டவன் மனசு வைக்கனும்??

ரோடு இல்ல,  குடிநீர் வசதி இல்ல 
அடிப்படை வசதிகள் எதுவும் இல்ல??ட்ரான்ஸ்பபோர்ட் வசதி இல்ல?

அதுக்குப்பேர்தான் வரப்பட்டிகாடு

மச்சி இது மாதிரி இன்னும் எத்தனையோ ஊர்கள் இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் இருக்கு? எத்தனை பிரதமர்கள், எத்தனை முதலமைச்சர்கள், எத்தனை ஐந்தாண்டு, பத்தாண்டு திட்டங்கள்  எத்தனை கோடிகளில் வளர்ச்சிபணிகள்  எதுவும் இவர்களுக்கு வருவதில்லை 
எத்தனை சிறப்புகளில் நம்நாடு 
முன்னிலையில் இருந்தாலும்
இவர்களுக்கு விடிவு கிடையாது?  
ஏன்தெரியுமா??

பல பெரிய பணக்காரனுக்கும்
தொழிலதிபர்களுக்கும் 
பணத்தை வாரி வழங்கி  
சம்பாதிக்க வழி செய்து தரும் 
அரசு சாமானியர்களை கண்டுகெள்வதும் இல்லை 
மதிப்பதும் இல்லை 

உண்மைதான் மச்சி 


அதுமட்டுமல்ல?
பணக்காரர்களிடம் தேர்தல் நிதி வாங்குவார்கள் ஏழைகளுக்கு இதனை செய்கிறேம்னு  ஓட்டு வாங்குவார்கள்??

அப்ப ஏழைகள்தான் ஆட்சியை தீர்மானிக்கிறார்களா,??

இல்லை ஊழல்வாதிகள் 

எப்படி புரியலை??
உழைப்புகேற்ற ஊதியம் யாரும் தருவதில்லை வரியும் சரியாக கட்டுவதில்லைஅப்பஅப்ப 
வருணபகவானும் கருணை காட்டுவதில்லை? இதுதான் ஏழைகளை உருவாக்குகிறது 

சரி மச்சி இந்த ஊரை யாரும் வாழ தகுதியற்றதுனு செல்லலாமா,??


சொல்லவேன்டியவங்க சொல்ல 
அந்த ஆண்டவன் ஆசி வழங்கட்டும்????




நன்றி இவை என் கருத்துகளே 


09 July 2015

கோவிந்தனின் அப்ரண்டீஸ் காதல்


   என்னுடைய "நோக்கியா " வை  ரொம்ப நேரமாக நோக்கிகொன்டிருந்தான் என் நண்பன் கோவிந்தன்!
 (ஸ்மார்ட், ஸ்டச், வராத காலம்)

ஆள் அழகாக இருப்பான்,,  (ஆமா 
எந்த நடிகர் சாயலில் இருப்பானு 
கேட்ககூடாது)

ஏன்டா ரொம்ப நேரமா?  என்னத்தடா செய்யுற?  என்றேன் 

இல்ல மச்சி,  யாரோ புது நம்பர்
வருது அட்டன் பன்றதுக்குள்ள 
மிஸ்டுகால் ஆயிடுது  இப்ப.
வரட்டும் ஒரே அழுத்து ,,,,
என்றான்

பாத்துடா? அது என் செல்லு
உடைச்சுடாத!  என்றேன் 

சரி, சரி மச்,,,,,,, கால் பட்டனை அழுத்தி காதில் வைத்து 
ஹலோ யாருங்க பேசறது என்றான்

கிட்டதட்ட 2 மணிநேரம் கழித்து 
இமயமலையை ஏறிய களைப்புடன் வந்தான் 
ஆனால் அவன் முகத்தில் 
100சூர்யா பல்பு வெளிச்சம்
இருந்தது!

என்னடா? விசயம் என்றேன்

மச்சி அது ராங்க் கால் இல்ல 
என் வாழ்வ மாத்த வந்த. தெய்வ கால் என்றான்? ஆமாம் மச்சி ஒரு 
பெண்ணு பேசினா?  வாய்ஸ்  சூப்பரா இருந்துச்சு  அது இது என்று 
பேசி கொண்டே போனான்

சரிசரி என்றேன் (எனக்கும் சிறிது எரிச்சல் வந்துச்சு)

அதன்பிறகு வந்த நாட்கள் அவனுக்கு வசந்த நாட்கள்தான்  
நோக்கியாவே கதி என்று இருந்தான் மணிக்கணக்கா பேசினான்  இரவு பகல் பாராமல் 
பேசினான் அவன் அவனை
மநறந்து பேசும்போது எப்படி ஊர்,  உலகம்,  வேலை,  சாப்பாடு தூக்கம் 
நண்பன், எல்லாம் ஞாபகம் இருக்கும்!  

ஆக எல்லாமே மறந்துதான் பேசினான் சமயத்தில் மறைந்தும் பேசினான்!

என்னமோ பன்னிட்டு போகட்டும்
என்று நானும் விட்டுவிட்டேன் 
(நட்புக்கு இதான் அழகா??)

அந்த வாரம் புது நோக்கியா  வாங்கி அவளுக்கு கெடுத்தான்!

எனக்குதான் 2000 ருபாய் நஷ்டம்
(நண்பனுக்கு இதைகூட செய்யவேணாமா?)

 "டேய் இதெல்லாம் வேணாம்டா?  
இது உனக்கு சரியா வராது,?
என்றேன் 
ம்ஹீம் என் அறிவுறைகள் அவனுக்கு கொசு போல அடித்து கன்னத்தில் தேய்த்தான்
(இப்பொழுது  நான் யாருக்கும் 
அட்வைஸ் பன்றது இல்ல)

அடுத்த வாரம் புது காஞ்சிபுரம்  பட்டு சாரி எடுத்து கொடுத்தான்
(மறுபடியும் எனக்கு 1500. நஷ்டம்

டேய், ஓவரா போய்ட்டு இருக்க பாத்துக்க அவ்வளவுதான் சொல்வேன் என்றேன்!

விடு மச்சி நான் பாத்துகறேன் 
என்று சிரித்தவன் ,,, நான் கல்யாணம் பண்னினா அவளை மட்டும்தான் பன்னுவேன் இத யாராலும் தடுக்க முடியாது 
என்று சீரியஸ்யாகவும் பேசினான் 

ம்ம்,,, உன் தலையெழுத்த யார் மாற்ற முடியும்? என்றேன் 

அதுக்கு அடுத்த வாரமும் 
அவளுடன் ஊர் சுற்றி 
உணவகம் சுற்றி,  தியேட்டர் சுற்றி 
போட்டோ எடுத்து கொண்டு
வந்தான் 

அவனுடன் ஒப்பிடும்போது  
அவள் சுமார் அழகுதான் நான் இதை அவனிடம் சொல்லவில்லை?
சொன்னால்  (காதலுக்கு சாதி, மதம்,
அந்தஸ்து, கண் காது, மூக்கு, வாய் எதும் தேவையில்லை மனசு மட்டும் 
போதும் என்று நீண்ட,,,,,,,, பிரசங்கம் சொய்வான்)

அன்று முழுவதும் அவள் 
புராணத்தை திரும்ப, திரும்ப புலம்பினான் மேலும், மேலும் என்னை புல்லறிக்க வைத்தான்
ஃபுல்லும் அடிக்க (சரக்கு)
வைத்தான் 

""சாரியில் சாமங்கி பூ மாதிரி இருக்கா? சுடிதார்ல சூரியகாந்தி பூ மாதிரி இருக்கா?  தாவணியில. தாமரை பூ மாதிரி இருக்கா??
அய்யே என்னத்த சொல்றது
போ மச்சி "" என்று என் போதயை இறக்கினான் 
ட்ரஸ் இல்லாம இருந்தா எப்படி 
இருப்பா?? என்று கேட்க நினைப்பதற்குள் நான் மயங்கி 
சரிந்தேன் 

அவளும் என்னைத்தான் 
கட்டிக்குவேனு சொல்றா மச்சி  என்பது என் காதில் அரைகுரையாக விழுந்தது 

இனி அவளால் இவன் தினம் தினம் 
புல்லடித்து மட்டையாவான்
என்பது எங்கள் இருவருக்குமே 
அப்போது  தெரியாது!! 

வேலை விசயமாக விதி எங்களை பிரித்தது!
 ஆறு மாதம் கழித்து தான் அவனை பார்க்க முடிந்தது?
ஆள் இளைத்திருந்தான்,  மிகத்தில் 
ஒரு வார முடி இருந்தது அவன் தலைக்கு பின்புறம் இப்பொழுது  அந்த ஒளிவட்டம் கானவில்லை
கண்கள் இரண்டும் சிவப்பு 
ஜீரோ வாட்ஸ் பல்பு       போல
எரிந்தது      சரக்கு வாசம் 
மூக்கை துளைத்தது!   பார்க்கவே 
பரிதாபமாக இருந்தான் 


என்ன மச்சி ஆச்சு?  ஏன் இப்படி 
இருக்கற? என்றேன் 
அவ்வளவுதான்!  "ஒ " என்று அழ
ஆரம்பிச்சுட்டான் 
அழுது பார்க்காத அவனை 
அந்த அழுகை என்னை 
என்னவோ .செய்தது!!



நன்றி மீதி அடுத்த பதிவில்


(இவை என் கற்பனையே)

06 July 2015

அறிமுகம்

வணக்கம் நண்பர்களே!!!!

                     இணையம் முலமாக உங்களை சந்திப்பது மிக்க மகிழ்ச்சி
என்னுடைய நீண்ட நாள் கனவு இது!  இணையத்தில் படித்ததன்
விளைவு எனக்கும் எழுத வேண்டும்
எனும் சிறு உந்துதல்!!  படித்தது,
கேட்டது,  பார்த்தது,  அனுபவம் 
ஆகியவற்றை கலகலப்பாக!!
 நகைச்சுவையாக. உங்களுக்கு
தரலாம் என்ற ஆசை!  என் 
எழுத்துகள் உங்களை சிரிக்க 
வைக்கும் சிந்திக்க வைக்கும்
என் எழுத்துகள் உங்களை
வசிகரிக்கும் என்பதில்
எனக்கு சந்தேகமில்லை 


       உங்களை மயக்குகிறதா???
அதிர்ச்சியாக்குகிறதா???

என்பதை எனக்கு
உங்கள் கருத்துகள் மூலம் 
அறிய ஆவலாக உள்ளேன்



நன்றி   (மீண்டும் சந்திப்பேரம்)