click to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own text

29 September 2015

வீணாகும் உணவுப்பொருட்களில் ஒளிந்திருக்கும் விபரீதம்!



"மேல் காணும் படத்தில் உள்ளதுபோல் பரிமாறப்படும் உணவுப் பதார்த்தங்களை ஒருவரால் மீதம் வைக்காமல் சாப்பிடமுடியுமா? ஒருவர் எவ்வளவு பசியில் இருந்தாலும் உண்ணமுடியாது என்பதே உண்மை! அவ்வாறு மீதமாகும், அல்லது வீணாகும் உணவுப் பொருட்களினால் உண்டாகும் விபரீதம் பற்றி உங்களுக்கு தெரியுமா?

நம் ஆடம்பர ஆசையாலும், அலட்சியத்தாலும்  உலகம் முழுவதும் ஆண்டுக்கு 10 இலட்சம் டன் சமைத்த உணவுப்பொருட்கள்  குப்பையில்
கொட்டப்படுவதாக ஐநா சபையின் புள்ளிவிவரம்
அதிர்ச்சியளிக்கிறது!

ஒரு வேளை உணவுக்கூட , சரியாக கிடைக்காமல் அவதிப்படுபவர்கள் உலகம் முழுவதும் 140கோடி பேர்
சர்வதேச வறுமைக்கோட்டிற்கு கீழ் வசிப்பதாகவும் ஒரு புள்ளிவிவரம் அறிவிக்கிறது!

நாம் ஒவ்வொரும் ஒரு கைப்பிடி அளவு உணவினை சேமித்தால், பசி காரணமாக இறக்கும் 5வயதுக்குப்பட்ட சுமார் 90இலட்சம் குழந்தைகளை காப்பாற்றிவிடலாம்!

"தனிஒரு  வனுக்கு உணவிலை எனில்
ஜகத்தினை அழித்திடுவோம் "-என்று உணவு கிடைக்காமல் வறுமையில் வாடுபவனை கண்டு பாரதி கவிஞன் பாடிய பாடல் இது! ஆனால்

இன்று மீதமாகும் உணவுப் பொருட்களால்தான் ஜகத்தினை அழித்துவருகிறோம், என்பதுதான் முகத்தில் அறையும் உண்மை.

1947ம் ஆண்டிண் உலக மக்கள் தொகை 300மில்லியன்கள்! இன்று 1210மில்லியன்கள்.

ஒருபுறம் பசியால் வாடுவதும் மறுபறம் விளைந்த தானியங்களும் காய்கறிகளும் டன் கணக்கில் யாருக்கும் பயன்படாமல் வீணாகின்றன! சமைக்கும்
உணவில் 3ல்ஒரு பங்கு குப்பைகளில் கொட்டப்படுகின்றன!

அவ்வாறு வீணாகும் உணவுப் பொருட்களினால் உண்டாகும் மீத்தேன் வாயுதான் பருவநிலை மாற்றத்திற்கு மிக மிக முக்கிய தீங்கு விளைவிக்கிறது!

காற்றில் கரியமில வாயு அதிகரித்து பசுமை விளைவில் மாற்றம் ஏற்படுவதால் பூமிக்கு அருகில் உள்ள வளிமண்டலம் வெப்பமடைவதே புவி வெப்பமாதல் என்கிறார்கள்!!

வீணாக்கும் உணவுப் பொருளாலும் ,காய்கறி பழங்கள் போன்ற பொருட்கள்
அழுகுவதாலும் ,காற்றில் நைட்ரஜன் ஆக்ஸைடு அதிகரிக்கும்!

வீடுகளில் பயன்படுத்தும் குளிர்சாதனப் பெட்டியிலிருந்து வெளிவரும் "குளோரோ ஃப்ளோரோ கார்பன் "என்ற வாயுவும் வளிமண்டலத்தை அதிகம் பாதிக்கின்றன.

  வளிமண்டலத்தை அதிகம் பாதிக்கும் போது அமில மழை உண்டாக்க  காரணமாகின்றன .

வெப்ப காற்றின் பருவநிலை மாற்றத்தினால் பலவிதமான நோய்கள் வரும்!

மீத்தேன் ,கரியமில வாயு நைட்ரஜன் ஆக்ஸைடு, ஆகியன ஒன்றாக இணையும் போது ஏற்படும் வேதிவினையின் காரணமாக பவளப்பாறைகள் நிறம் அழிந்துவிடும், அடிக்கடி வறட்சி உண்டாகும், காடுகளில் தீவிபத்து ஏற்படும், பனிப்பொழிவு உண்டாகும்!

மீத்தேன் அளவு அதிகமாக கடல் மட்டம் உயர்ந்து  கடலோரப் பகுதிகளில் வெள்ளம் ஏற்படும்!

வாகனங்களால் ஏற்படும் பாதிப்பை காட்டிலும் விவசாயப் பொருட்களாலும் வீணாகும் உணவுப் பொருட்களாலும் உண்டாகும் மீத்தேன் வாயுவினால் ஏற்படும் பாதிப்பு மிக அதிகமாகும்.

மனிதனின் உணவுத்தேவையை பூர்த்திசெய்ய தினமும் பல்லாயிரக்கணக்கான தாவரங்களும் உயிரனங்களும் அழிக்கப்படுகிறது!
அதன் கழிவுகளை முறையாக பாதுகாப்பாக மறுசுழற்சி செய்ய முறையான வழிகள் ஏதுமில்லை
பருவநிலை மாற்றத்தினால் பல சிற்றுயிர்கள் முதல் மனிதன் வரை அதன் உணவுச் சங்கிலியில் மிதமிஞ்சிய மாற்றம் உண்டாகும்
100கிராம் பட்டு நூல் தயாரிக்க 1500பட்டுப்புழுக்கள் அழிக்கப்படுகின்றன.

நம் பணத்செருக்கின் பலனாக பல்வேறு விசேசங்களில் ஒருவர் சாப்பிடுவதற்கு ஐந்தாயிரம் செலவு செய்கிறோம்!அளவுக்கு அதிகமான உணவுப்பொருட்களை அறியாமையால் வீணடிக்கிறோம்!
 
அன்றைய காலங்களில் வருடம் மும்மாரி மழை பொழிந்து விவசாயிகளும் செழித்து வளர்ந்து வந்தார்கள்! இன்று பருவநிலை மாற்றத்தாலும் சுற்றுச்சூழல்,சீர் கேட்டாலும் வானம் பார்க்கும் சூழ்நிலையை உருவாக்கிவிட்டோம்,என்பதை நாம் அறிய வேண்டாமா?

இன்றைய நவீன யுகத்தில் , அசுர வளர்ச்சியில் "பழையசோற்றை பார்க்காத ,உண்ணாத "புதுத்தலைமுறைகளை அல்லவா உறுவாக்கிவருகிறோம்!

நாம் வீணாக்கும் ஒவ்வொரு  உணவுப் பருக்கைக்குப் பின்னாலும் இந்த உலகம் பருவநிலை மாற்றத்தாலும் சுற்றுச்சூழலாலும் கொஞ்சம், கொஞ்சமாக அழிந்து வருகிறது, அழித்துவருகிறோம் என்பதை அறிந்து கொள்வோம்!

"உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்  தோரோ -என்பது சாத்தனார் வாக்கு,

உணவுக் கொடுக்கும் இந்த உலகுக்கு நம்மால் முடிந்த அளவு உயிர் கொடுப்போம் வாருங்கள்!

அளவாக சமைத்து மிதமாக உண்டு வளமாகமிருப்போம்!
(
படங்கள் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டவை)
இப்படைப்பு வலைப்பதிவர் சந்திப்பு தமிழ் இணைய கல்விக்கழகம் நடத்தும் மின்தமிழ் இலக்கிய போட்டிகளுக்காகவே எழுதப்பட்டது
வகை (2) சுற்றுச்சூழல்

இப்படைப்பு என் சொந்த படைப்புதான் என்றும் வேறு எங்கும் வெளியானதல்ல என்றும் முடிவுகள் வரும்வரை வெளியாகாது என்றும் உறுதியளிக்கிறேன்

28 September 2015

ச்சும்மனாச்சுக்கும்!!!!!



""இந்தியாவில் 100ரயில் நிலையங்களில் வைபை -கூகூள் 


""பைபை சொல்ற இடத்துல எதுக்கய்யா? வைபை ????


""Make in. இன்டியா..

Skill. இன்டியா ...

Digital. இன்டியா ,..

அடுத்த ஆட்சிக்கு?

"போண்டியா?? அட போங்கய்யா??? 


""ஓட்டு ஒழுங்காப் போட்டா?

   எதுக்கு ஓட்டையாகுது?

   பஸ்சும் பர்சும்!!!! 


"''கண்ணு தெரியலணா ?தடவலாம் 

இனி எல்லாம் தெரிய தடவனும் 

இது ஆண்ராய்டு கட்டளை!!!


""மாற்றம் ,

முன்னேற்றம் ..

ஏமாற்றம் ,

மதுவ ஒழிக்கமுடியாது மணி!?!


""ஆட்சிய புடுச்சதால 

ஒருத்தர் நாடு சுத்தரார்..

ஆட்சிய புடிக்க 

ஒருத்தர் ஊர் சுத்தரார்

ஆக எல்லாருமே காதுல பூ சுத்தராங்க!!! 


""இப்ப நல்லா படி.,

  வேலையில்லயா ?

  புல்லா குடி!!!!

   


அம்புட்டுதாங்க! நன்றி 

27 September 2015

கால் கிலோ கவிதைகள்



"ஆராத்தி காண்பிக்கிறாய். ..

அம்மனுக்கு ...

சந்தன சிலைகள் 

எப்போது 

தட்டேந்தி 

ஆராத்தி எடுக்க ..

கற்றுக் கொண்டன ..

ஆச்சரியம் தாளாமல் 

அம்மனே..

பெருமூச்சு விடுகின்றாள் ...!!






நன்றி !! 

26 September 2015

இதனால் தெரிவப்பது என்னவெனில்..........?!



""அன்பு தாய்மார்களே!  ஓவர் குடிகாரர்களே! ஆசை எதிர்கட்சி எதிரிகளே! அக்கப்போர் தரும் அரசியல்வாதிகளே!!

      உங்களுக்கெல்லாம் தெரிவிப்பது என்னவெனில் 
நீங்க ஆவலா எதிர்ப்பார்த்த "மது ஒழிப்பை ஒருபோதும் என்னாலும் சரி எந்த காலமானாலும் சரி ஒழிக்க முடியாது??

     உலகம் முழுவதும் மதுக்கடைகள் இருக்கும் போது நான் மதுகடையை மூடுவேன் என்று எதிர்பார்க்கலாமா?

    போராடுபவர்கள் முதலில் இந்தியாவில் இருக்கும் மதுக்கடைகளை ஒழிக்க சொல்லுங்கள் பிறகு நானும் ஒழித்துவிடுகிறேன்!!

    சில எதிர்கட்சிகள் மதுவை ஒழிப்பதாக பகல்கனவு காண்கிறார்கள்! அது நடக்குமா?

  அன்பு குடிகாரர்களே "நீங்கள் பகல் இரவு என்று எந்த நேரமும் மப்பும் மந்தாரமாக கனவு கன்டால்தான் "என் வளர்ச்சியையும் இந்தியாவின் வளர்ச்சியையும் முன்னேற்ற முடியும் என்பதை நினைவில் கொள்க!!

      தமிழ்நாட்டில் நீங்கள் ஆண்டுக்கு குடிக்கும்அளவ வெறும்  85  மிலிட்டர்தான்! பக்கத்து மாநிலங்களை பாருங்கள் 100 110. என்று வளர்ச்சியடைகிறார்கள் !!

     நாம் எல்லா துறைகளிலும் வளர்ச்சியடைந்து இதில் மட்டும் வளரவில்லை என்றால் எதிர்கால வரலாறு புவியியல் குவியியல், எல்லாம் மன்னிக்குமா ??

    ஓவராக குடிப்பவர்களை "அன்பால் "திருத்துங்கள்! அது எப்படி என தெரியவில்லை என்றால் "என் அமைச்சர் பெருமக்களை பார்த்து நடந்து கொள்ளுங்கள்! 

      தாய்மார்கள் யாரும் வருத்தமடையாதிர்கள்
எல்லா துறைகளில் நீங்கள் சாதனை படைத்தாலும் மதுகுடிக்கும் துறையில் சற்று பின்தங்கி உள்ளீர்கள் என்பதை உணருங்கள்!

    உங்களை உங்கள் குறைகளை கேட்பதற்காக ஒருவர் ஊர் ஊராக சுற்றிவருகிறார்! இது போல
இன்னும் எத்தனை பேர் சுற்றிவந்தாலும்? மதுவையும் என்னையையும் விட்டுவிடாதிர்கள்!!

    உங்களை காக்கும் சக்தி கடவுளுக்கு அடுத்த படி முதல் படி என எல்லா படியும் என்னிடம் மட்டுமே உள்ளது!!



எல்லாம் கற்பனையே!! ஆனால் நடப்பது உண்மையே நன்றி!!

24 September 2015

வண்ண ஆடை ஏற்றுமதிகளும் வளம் அழிக்கும் சாயக்கழிவுகளும் !!


"பிரபல ஜவுளிக்கடைகளில்  10 சதவிகிதம் தள்ளுபடி  விற்பனை என்றதும் குடும்பத்துடன் ஓடுகிறோம்! தள்ளுமுள்ளு ஏற்படுகிற கூட்டத்திலும் அந்ந தள்ளுபடியிலும் தள்ளுபடி வாங்கி ஆடை எடுத்து ஆனந்தப்படுகிறோம்! என்றாவது ஒரு நாள் அந்த ஆடைகளுக்கு பின்னால் இருக்கும் வரலாற்றை தெரிந்து கொண்டது உண்டா?
ஒவ்வொரு ஆடைக்குப்பின்னால் எத்தனை தொழிலாளர்களின் உழைப்பு, இறக்குமதி இயந்திரங்களின் இரைச்சல் ,எவ்வளவு தண்ணீர் வீணாக்கப்படுகிறது ?எத்தனை விதமான ரசாயன கலவைகள் பயன்படுத்தப்படுகிறது  ?கழிவுகளை மறுசுழற்சி எப்படி செய்கிறார்கள்? அதில் நடக்கும் மிகப் பெரிய சமுதாய சீர்கேடு எவ்வளவு என்று தெரியுமா??

ஆதிகாலம் மனிதன் கைகளிலால் ஆடைகளுக்கு சாயமேற்றி விற்பனைக்கு அனுப்பினான் !பிறகு இயந்திரங்களின் அதித வளர்ச்சியில் ஒரு புறம் நூலை கொடுத்தால் மறுபுறம் வண்ண ஆடைகளாக ரகம்ரகமாக விதம்விதமாக தரும் இயந்திரங்களில் வளர்ச்சியடைந்துள்ளான்!

திருப்பூர் ஈரோடு மற்றும் கரூர் ஆகிய பகுதிகளில் பின்னலாடைகள் மிகப்பெரிய அளவில் உற்பத்தி செய்கிறார்கள் !அதனால் பல இலட்சகணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்பும்  வருமானம் கிடைக்கிறது! அரசுக்கும் வருமானம் கிடைக்கிறது!

நம் கைகளில் கிடைக்கும் ஆடைகள், ஜவுளிக்கடைகளுக்கு  வரும்முன் சுமார் 30விதமான தொழிற்சாலைகளுக்கு சென்று  வரும்! ஒரு நாளைக்கு டன் கணக்கில் உற்பத்தி செய்கிறார்கள், கிலோ கணக்கில் ரசாயன கலவைகள் பயன்படுத்துகிறார்கள் (dyes)  சாய கழிவு நீர் கோடிக்கணக்கான லிட்டர்கள் வெளிவரும் (Effluent water) இதை அப்படியே இயந்திரங்கள் மூலம் மறுசுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்த வேண்டும்! இங்குதான் பிரச்சினை ஆரம்பிக்கிறது !!

சிறு  ,குறு ,ஆலைகளாக திருப்பூரில் 900சாய ஆலைகளும் கரூரில் 250சாய ஆலைகளும் உள்ளன! இந்த ஆலைகள் ஒரு நாள் பயன்படுத்தும் தண்ணீரை காவேரியாறில்  விட்டால் கரைபுரண்டு ஓடும் !குடிநீர் தட்டுப்பாடு இருக்கவே இருக்காது!!

ஆரம்பகாலங்களில் ஆத்தங்கரை ஓரங்களில் மட்டுமே சாய ஆலைகளை அரசு அமைக்க வலியுறித்தியது! காலமாற்றத்தில் சாய ஆலைகள் மிக மிக அதிக அளவில் அதிகரித்ததால் சாய கழிவுகள் ஆற்றில் கலப்பதை தடுக்கவும் குடிநீர் தட்டுப்பாட்டை களையவும்  விவசாயத்தை காக்கவும் எல்லா ஆலைகளிலும் மறுசுழற்சி இயந்திரங்களை அமைக்க வேண்டும் என்று அரசு அறிவித்தது (Reverse osmois system)எளிதாக ROஎன்பார்கள்.

ஒரு ஆடையை வண்ணமாக்கும் ஆலைகளுக்கு "டையிங் (Dying )என்றும் வெறும் வெண்மையாக மாற்றும் ஆலைகளுக்கு "பிளிச்சிங் "(Bleacing) என்றும் பெயர் உண்டு!

ஒரு ஆடை ,வண்ணமாக, மாறுவதற்கு 20மணி நேரங்களும் வெண்மையாக மாறுவதற்கு 16மணி. நேரங்களும் ஆகும்! இப்படி மாற்றமடைய பல விதமான ரசாயனங்கள் சேர்க்வேண்டும்

இந்த சாய கழிவுநீரை சுத்தம் செய்து மறுபடியும் பயன்படுத்துவதற்கு ஏழு, நிலைகளை கடக்கவேண்டும்! அதிலும் மறுசுழற்சி இயந்திரங்கள் அதிக விலை என்பதாலும், அடிக்கடி புரச்சனைகள் ஏற்படுவதாலும், ஆட்கள் பற்றாக்குறையாலும், அதிக அளவு செலவு ஆகுவதாலும், அதிக மாற்று ரசாயனங்கள் தேவைப்படுவதாலும், எந்த ஆலையிலும் முழுதாக சுத்தப்படுத்த மாட்டார்கள்!! முடியாது என்பதும் உண்மை! வேறு வழியே கிடையாது ஆற்றிலும்  கழிவுநீர் வடிகாலிலும்  எப்படியோ விட்டுவிடுவார்கள்.

.தமிழ்நாட்டில் 2000 TDS (total dissolved salt) உப்புதன்மையுடைய நீரில் பயிர்கள் வளரும் அரசு அனுமதித்த அளவும் அதுதான் !ஆனால் ஆற்றில் கலக்கும் சாய நீரானது இந்த அளவுகளுக்கு மிக மிக அதிகமாக இருக்கும்! இதனால்தான் ஆற்றின் வளம் குறைவதுடன் அதனை பயன்படுத்தும் மனிதன் முதல் விலங்குகள் வரை பல தீங்கு விளைவிக்கும் !மனிதர்களுக்கு "ப்ளுரையிடு " தண்ணீரில் அதிகமாக இருந்தால் பற்கள் மஞ்சளாகும் ஆண்மை குறைவும் ஏற்படும் !விலங்குகள் சினையாவதில் பிரச்சனை வரும்! அதன் பாலிலும் நஞ்சு கலந்துவிடும்!  விளை நிலங்களில் கலப்பதால் மண்ணிலுள்ள நுண்ணுயிர்கள் அழிந்து விடும்! விளைந்த காய்கறிகளிலும் நஞ்சு கலந்திருக்கும்!

"சாய நீரை முதலில் முதல்நிலை சுத்திகரிப்பில் (primary effluent treatment plant) சுத்தம் பண்ண வேண்டும்! இதில் பல வண்ணத்தில் இருக்கும் நீர் சுத்தமாகிவிடும்! அதிலுள்ள கழிவுகளை  பிரிக்க சுண்ணாம்பு,பெரஸ், பாலி, ஆலம்  ஆன்டிஸ்கேலண்ட் ,ஹைட்ரோ குளரிக் அமிலம், டைபார்மர், சோடியம் மெட்டா பை சல்பேட், ஆகிய ரசாயனங்கள் வேண்டும்! (lime, ferrous, poly, antiscalent, hcl acid, dieformour, smps) இவ்னைத்து  ரசாயனங்கள் இருந்தால் மட்டுமே சாய நீர் சுத்தமாகும்!
இந்த நிலையில் சாய நீரின் உப்புதன்மை (tds) சுமார் 7000லிருந்து 9000வரை இருக்கும்!
முதல் நான்கு நிலைகளில் சுத்தமாகி வெளிவரும் கழிவில் கிட்டத்தட்ட உப்பின் அளவு(tds) 55000முதல் 75000ஆயிரம் இருக்கும்! இதில் ஒரு தேக்கரண்டி அளவு கழிவு நீரை 100லிட்டர் நல்ல தண்ணீரில் கலந்தால் வாயில் வைக்க முடியாத அளவுக்கு உப்பு கரிக்கும்! ஆக இதை அப்படியே ஆற்று நீரில் கலந்தால் என்னவாகும் என்பதை நினைத்துப்பாருங்கள்!

எவ்வளவு தீங்கு வரும் என்று எண்ணிப்பாருங்கள்!


இதை, கண்கானிக்கும் அரசு மாசு கட்டுப்பாட்டு  (TNBC) வாரியம்    எவ்வளவு கண்கானிப்புடன் இருந்தாலும் , ஆலை கழிவுகள் கலப்பதை தடுக்கமுடியவில்லை விவசாயிகள் குரல் ஓங்கும் போது ஆலைகளுக்கு அதிரடியாக சென்று ஆலை முதலாளிகளை எச்சரிக்கை செய்து திரும்புவார்கள்!இருந்தும் சாய கழிவுகள் கலப்பதை தடுக்க முடியவில்லை ?என்றதும், மறுபடியும் விவசாயிகள் போராட்டத்தை ஆரம்பிப்பார்கள்!
நம்மை, நாமே அழித்துவருகிறோம்.அதுதான் உண்மை!

சாய நீரை சுத்தமாக்குவதற்கு இவ்வளவு ரசாயனங்கள் தேவைப்படும் போது ஆடையை வண்ணமாக்குவதற்கு எவ்வளவு ரசாயனங்கள் தேவைப்படும்
லிக்கர் , சல்பர் காஸ்டிக், பெராக்ஸைடு, வெட்டிங் ஆயில் சோடா, ( liquor, salfor,caustic,peroixed,wetting oil)பிறகு ஒவ்வொரு  வண்ணத்திற்கும் ஒரு ரசாயனம், வண்ணத்தை அதிகமாக்க / குறைக்க ரசாயனங்கள், என,20வகைகள் தேவைப்படும்.டன் கணக்கில் உப்பும் (salt) பயன்படும்!

ஐந்தாவது நிலையில் வரும் அதிக கடினமான கழிவு  நீரை (குழகுழப்பாக இருக்கும்) எவாப்ரேட்டர் (Evaporater) என்கிற இயந்திரத்தில் பாய்லர் (Boilar) உதவியுடன் வெறும் உப்பை மட்டும் பிரித்து எடுப்பார்கள்! மிஞ்சும் இறுதி நீரை சூரிய ஒளியில் படும்படி அகலத் தொட்டிகளில் சேமிக்கவேண்டும்! சூரிய ஒளியில் ஆவியாக்குவதற்கு (solar evaporate bond) என்று பெயர்! ஆவியானது போக மீதமிருப்பதை அதிக சக்தி உள்ள மின் மோட்டார் மூலம் பிரித்து எடுப்பார்கள்! இதற்கு சிலட்ஜ் (Sluge) என்று பெயர்! இதையும் கடினமான "தார்பாலின்கள் "கொண்டு மூடி பாதுகாக்க வேண்டும்! இதை 0.1கிராம் அளவு கழிவை 1லிட்டர் தண்ணீரில் கலந்தால் முழுவதும் நஞ்சாகிவிடும்! இதை குடித்தால் மனிதன் மற்றும் விலங்குகள் விவசாயம் என்ன பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை உணருங்கள்!

ஒவ்வொரு சாய ஆலைகளிலும் டன் கணக்கில் சேமிக்கப்படும் இந்த "சிலட்ஜ் "என்கிற கழிவுகளை முறையாக மறுச்சுழற்சி செய்ய இதுவரையில் எந்த மாற்று வழிமுறைகளும் கண்டுப்பிடிக்கப்படவில்லை!

பரிசோதனை முயற்சியாக சில "சிமெண்ட் "ஆலைகளிலும் செங்கல் ஆலைகளிலும் முயற்சித்துப்பார்த்தார்கள்.
பயன் ஏதும் கொடுக்காததால் முயற்சி கைவிடப்பட்டது!

   எனவே "சிலட்ஜ் "எனும் கழிவுப் பொருளை அரசு வழிகாட்டுதலுடன் தேவைக்கேற்ப அகலமாக பள்ளங்கள் ஏற்படுத்தி சுற்றிலும் "கான்கிரிட் "சுவர்கள் அமைத்து அதனுள் சிலட்ஜ் களை நிரப்பி மூடிவிடுவார்கள் இதற்கு SLF என்று பெயர் (Safty land filling)

திருப்பூரில் அனைத்து சாய ஆலைகளுக்கும், L&T, (larsan&duproo) என்ற நிறுவனம்தான் தண்ணீர் வழங்கும்!

இந்த நிறுவனத்திடம் அனுமதி வாங்காமல் யாரும், எவரும், அவர்தம்
சொந்த நிலத்தில் கூட ஆழ்துளை,கிணறு மூலமோ? அல்லது வேறு வகையிலோ,ஒரு  சொட்டு நீரையும் எடுக்கமுடியாது!

அவ்வப்போது விவசாய தேவைகளுக்கும் குடிநீர் தேவைகளுக்கும், திறந்து விடும்  ஆற்று நீரையும், ஆலைமுதலாளிகள்
ஆறுகளின் ஒரத்தில் "வட்ட கிணறுகள் "அமைத்து உறிஞ்சிவிடுவார்கள்?
அதனால்தான் கடைமடை பகுதிக்கு தண்ணீர் வரவில்லை? என்று விவசாயிகள்   போராடுவார்கள்! அதற்கு இதுவும் ஒரு காரணமாகும்!

காலங்காலமாக, இந்த அவல நிலை தொடர்ந்து
வருகிறது! மறுபுறம் அதிகரித்துக்கொண்டும் வருகிறார்கள்!
மனிதர்களின் போராசை,என்று ஒழிகிறதோ அன்றுதான் விடிவுகாலம் பிறக்கும்!

நீர்வளங்களை காப்பதற்கு அரசு பல கடுமையான கட்டுப்பாடுகளை ஏற்படுத்தவேண்டும்!

ஆலை நிறுவனங்களும் வழிமுறைகளை கடைப்பிடித்து மறையாக பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவேண்டும், இதுவே
முழுமையான தீர்வு ஆகும்!

நாம் செய்யவேண்டியது வருங்கால சந்ததிகளுக்கு பணத்தை சேமிப்பதை விட சுத்தத்தையும் சுகாதர விழிப்புணர்வையும், கற்றுதருவதே நாம் செய்யும் உண்மையான பங்களிப்பாகும்!

ஏற்றுமதியாகும் ஒவ்வொரு ஆடைகளுக்குப்பின்னாலும் நம் வளம் அழிந்து வருகிறது,அழித்துவருகிறோம், என்பதை தெரிந்து கொள்வோம்!!


(பட உதவி -இணையம்)

இப்படைப்பு வலைபதிவர் சந்திப்பு -தமிழ் இனணய கல்வி கழகம் இனணந்து நடத்தும் "மின்தமிழ் இலக்கிய பபோட்டிகள் களுக்காகவே எழுதப்பட்டது!

வகை (2) சுற்றுசுழல் விழிப்புணர்வு
இவை என் சொந்த படைப்புதான் என்றும் வேறுஎங்கும் வெளியானதல்ல என்றும் முடிவுகள் வரும்வரை வேறெங்கும் வெளியாகாது என்றும் உறுதியளிக்கின்றேன் !நன்றி 

23 September 2015

நவீன காலத்தில் -கிராமக் கண்ணோட்டத்தில் தமிழ் வளர்ச்சி -ஒரு பார்வை!!!


"நாம் வெள்ளைகாரர்களிடமிருந்து சுதந்திரத்தை மட்டுமா  ?வாங்கினோம், அவர்கள் விட்டுச்சென்ற கட்டடங்கள், சாலைகள், பாலங்கள்  கூடவே இலவச இணைப்பாக ஆங்கிலத்தையும் பெற்று
இன்று வரை தமிழை கொஞ்சம், கொஞ்சமாக ,அழித்துக்கொண்டுவருகிறோம்! என்பதுதான் அப்பட்டமான உண்மை! கணினியை கண்டுப்பிடித்ததும் அவர்கள்தான்! அந்த கணினியில் நம் தமிழைப் , புகுத்தி அழகுபார்த்து,
வளர்ப்பதற்கு பெரும் முயற்சி எடுத்து வருகிறோம் என்பதே நிதர்சனம்!

அன்று என் பையனுக்கு ஆங்கிலமே தெரியாது? என்ற நிலை மாறி இன்று என் பையனுக்கு தமிழே தெரியாது என்ற நிலைக்கு வந்துவிட்டோம! இப்படி சொல்வதுதான் கெளரவம், பெருமை, சாதனை, என்று படித்தவர் படிக்காதவர் பாகுபாடு கிடையாது!

தமிழக அரசில் அரசு வேலையில் இருப்பவர்கள்
13 ,00000) பதிமூன்று இலட்சம் பேர்! இவர்களின் குழந்தைகள் எல்லாம் அரசு பள்ளியில்தான் படித்து வருகிறார்கள் என்று யாராவது கூறமுடியுமா? கைநிறைய சம்பளம் வாங்கும் இவர்கள் அரசு பள்ளியில் சேர்த்தால் அவர்கள் கெளரவம்  என்னாவது, சமுகத்தில் அவர்கள் பெருமை என்னாவது?? 2013-14ஆண்டில் அரசு தொடக்கப்பள்ளிகள் 65.16 சதவிகிதமாகவும் தனியார் தொடக்கப்பள்ளிகள் 34.84 சதவிகிதமாகவும் அதிகரிப்பதற்கு யார் காரணம்? தற்போது அரசும் தொடக்கப்பள்ளிகளில் ஆங்கில கல்வியை கொண்டுவந்து விட்டது? எதற்காக ?எல்லா மக்களுக்கும் , தனியார் மோகம் பிடித்து ஆட்டுவதால்
தமிழ் பள்ளிகள் தரமிழந்து விடும் என்ற ஆதங்க அரசியல் காரணம்தான்! எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றால் தனியார் பள்ளிகளை அனைத்தும் தடை பண்ண வேண்டியதுதானே? மாட்டவே மாட்டார்கள்! ஒவ்வொரு தேர்தலுக்கும்கோடி கோடியாக அள்ளிதரும் அட்சய பாத்திருத்தை ஆட்சியாளர்கள் புறக்கணிப்பார்களா?  மக்களும்தான் விட்டுவிடுவார்களா? பள்ளி நடத்தும் பண முதலைகள் வேடிக்கைபார்ப்பார்களா!!!

இந்த நிலையில் தமிழை எப்படி வளர்ப்பார்கள்??
இருக்கவே இருக்கிறார்கள், வறுமை கோட்டிற்கு கீழ் இருப்பவர்கள்! நம் சமுகத்தில் பணம் உள்ளவர்களுக்கு ஒரு பள்ளிக்கூடத்தையும, சாதாரணமானவர்களுக்கு ஒரு பள்ளிக்கூடத்தையும் ஏற்படுத்தி மிக சிறப்பாக "தமிழை வளர்ப்பது நாம் தான் என்பதில் பெருமைபட்டு கொள்ளலாமா???


"தமிழ் படிக்க அரசு பள்ளிகளுக்கு செல்லும் நம் மாணவர்  விகிதம் 2013-14ஆண்டுகளில்
41.06சதவிகிதம் மட்டுமே! அதே தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் 58.94
சதவிகிதம்! நினைத்துப்பாருங்கள் எதில் நாம் வளர்ச்சி அடைகிறோம்??

வளர்ந்து வரும் நவீன காலத்தில் கிராமம் மட்டும் விதிவிலக்கா? இல்லை !அவர்கள் விவசாயம் பாதாளத்திற்கு போனாலும் அவர்கள் குழந்தைகள் பெரும்பாலும் தனியார் பள்ளிகளுக்குதான் அனுப்புகிறார்கள்? காரணம், எங்கள் தலைமுறைதான் காடு கரடு என்று அலைந்து திரிகிறோம்! எங்கள் பிள்ளைகளாவது நன்றாக, படித்து அரசு வேலைக்கு போகாவிட்டாலும், தனியார் நிறுவனத்திலாவது,  கைநிறைய சம்பாதிக்க தனியார் கல்வியே சிறந்தது என்கிறார்கள்!
தமிழை மட்டுமே படித்தவர்களுக்கு தமிழ்நாட்டில் வேலை கிடைக்குமா?? தமிழை மட்டுமே படித்தவர்கள் வெளிநாடுகளில் வேலைக்கு செல்லமுடியுமா?இல்லை என்பதுதான் நாம் உணர வேண்டிய உண்மைகள்.

தற்சமயம்தான் கிராமப்புறங்களுக்கு இணைய வசதி ஏற்படுத்துவதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது!

கிராமப் பொருளாதாரம் உயர்ந்தால்தானே கிராம மக்கள் முன்னேறுவார்கள் .
இனிவரும் காலங்களில்தான் அவர்கள் கணினியை கற்க வேண்டும்! அதன்பிறகுதான்
கணினியில் தமிழ் வளர்ச்சியை காணமுடியும்!

 அகில இந்தியா IIM.IIT போன்ற நுழைவுத் தேர்வுகளில் தமிழை மட்டும் படித்தவர்கள் எத்தனை பேர் வருடா வருடம் உள்நுழைகிறார்கள்! மிக மிக குறைந்த அளவுதான்!! சுதந்திரம் வாங்கி இத்தனை ஆண்டுகள் கடந்தும்
நம் நீதிமன்றங்களில் தமிழை வழக்கு மொழியாக்க, முடியவில்லை! நீதிபதி தமிழன்!! வழைக்கறிஞர் தமிழன்! வழக்கு தருபவன் தமிழன்! வாதாடுவதோ,தீர்ப்பு வழங்குவதோ  ஆங்கிலத்தில், இதில் எவ்வளவு முரண்பாடுகள் பாருங்கள்!!


"தமிழை புது தலைமுறைகளுக்கு கற்றுத்தரும் அரசு ஆசிரியர்கள் விகிதம் 2013-14 ஆண்டுகளில் 42.91சதவிகிதம்! அதே அனைத்து பாடங்களையும் ஆங்கிலத்தில் கற்றுதரும் தனியார் ஆசிரியர்கள் விகிதம் 57.09சதவிகிதம்! எதில் நாம் அதிக வளர்ச்சியை எதிர்பார்க்கின்றோம்

இன்றைய இளைய சமுதாயம் ஆண்ராய்டு கைபேசிகளுக்கு அடிமையாகிவிட்டார்கள்!! அதில் எத்தனை பேர் தமிழில் மட்டும் "குறுஞ்செய்தி, முகநூல் செய்தி அனுப்புகிறார்கள்! கேட்டுப்பாருங்கள் தமிழில் எழுதுவது மிக கடினம் என்பார்கள்! தமிழ் வளர்த்த பல சான்றோர்களை அவர்கள் நினைவு நாளில் மட்டும் நினைத்துவிட்டு பிறகு மறந்து விடுகி றோம்!இங்கு தமிழன் தமிழில் , பேச தயங்குகிறான் என்பது அவலமல்லவா?

"இணையத்தில் எழுதுவது தமிழன், படிப்பது தமிழன் என்ற
நிலை இருக்கும் சூழலில் வலைப்பதிவர் திருவிழா "என்றில்லாமல் தமிழ்ப்பதிவர் திருவிழா என்று இருப்பின் நம் தமிழுக்கு நம்மால் முடிந்த சிறு
பெருமையாக இருக்கும்!

பல வலைப்பதிவர்கள் எழுதிவந்தாலும் அதில் எத்தனை நபர்கள் பெயரைக்கூட தாய் தமிழில் வைத்திருக்கிறார்கள்.

இங்கு பிற மொழி கலப்பில்லாமல் பேசவும் முடியாது, வாழவும் முடியாது, என்பதுதான்
உண்மை நிலவரம்!!

மூன்று வயதில் முழுக்க பிற மொழிகளை ,புகுத்தி அறிவு வளர்த்து, கைநிறைய, வருமானம் கிடைத்தவுடன், முப்பது வயதுக்கு மேல் தான், பல தமிழர்களுக்கு ,தமிழ்மொழியின் மீது பற்றும் பாசமும் ஞானமும் வருகிறதோ?எனும் ஐயம் வருகிறது.


கணினியில் தமிழ் வளர்ச்சி என்பது ஒரு புறமாக இருந்தாலும் "தரணியில் அழியும் தமிழை வளர்ப்பதே நம்
தமிழுக்கும் தமிழனுக்கும் அடுத்த தலைமுறைக்கும் செய்யும் உண்மையான பங்களிப்பாகும்!!

தமிழ் வளர்வதும் வளர்ப்பதும் நம் கைகளில்தான் உள்ளது!!

தமிழை ஊக்கப்படுத்து வோம்! தமிழனையும் ஊக்கப்படுத்து வோம்
(புள்ளி விவர ஆதாரங்கள் NUEPA 2012-14)

"இப்படைப்பு " வலைப்பதிவர் திருவிழா -தமிழ்இனணய கல்வி கழகம் நடத்தும் "மின்தமிழ் இலக்கிய போட்டிகளுக்காக எழுதப்பட்டது
வகை (1)
இவை என் சொந்த படைப்புதான் என்றும் வேறு எங்கும் வெளியானதல்ல என்றும் முடிவுகள் வெளியாகும்வரை வெளியாகாது என்றும் உறுதியளிக்கின்றேன்!!

21 September 2015

இனி என்று மாறுமோ...!




"அறிவு வளர்ந்திட ...

ஆங்கிலம் படிக்கணுமோ..

அவன் குடும்பம் தழைத்திட..

அயல்தேசம்  போகணுமோ...!


"அரைகுறை நாயகிக்கு...

அள்ளித்தரும் மனசு ...

அய்யா என்பவனை ...

அருவருப்பாய் பார்க்கும் பல தினுசு ..!


"பிணம் கூட ஏங்கிடுமே...

காலணா காசுக்கு...நம்.,

பிரதமரும் சொன்னாருங்க...

நூத்திபத்து கோடி பேருக்கு ...


"குறிதாக்கும் ஏவுகணை....

நுட்பம் போதுமய்யா..

கைதாகும் மீனவனுக்கு ...

கருனணயில்லையா...!


"நீ முந்தி  நான் முந்தி ..

மனப்  பிரச்சனையோ...

பண்பாடு வளர்ந்திடுமா ...

பதில் கூறு புதுதலைமுறையே..!


"பட்டம் படிப்பு போதும்மா தம்பி..

சமுக ஒற்றுமை..

சமுக நல்லிணக்கம்..

சமுக பண்பாடு ..

மாறிடுமோ உன்னை நம்பி ..!!


இப்படைப்பு வலைப்பதிவர் திருவிழா 2015--தமிழ் இனணய கல்வி கழகம் நடத்தும்
"மின் தமிழ் இலக்கிய போட்டி "களுக்காக எழுதப்பட்டது!

வகை (4) புதுக்கவிதை போட்டிகள் :முன்னேறும் உலகில் பண்பாட்டின் தேவைகள்! இவை என் சொந்த படைப்புதான் என்றும்  வேறு எங்கும் வெளியானதல்ல என்றும் முடிவுகள் வெளியாகும் வரை வேறெங்கும் வெளியாகாது எனவும் உறுதியளிக்கின்றேன்!

19 September 2015

உழவனை அழிக்கும் பண்பாடுகள்!!



"ஏர் புடுச்ச கையெல்லாம் ..

  ஏசி ரூம் "க்கு ஏங்குதிங்க ..

  பஞ்சம் பிழைக்கும் பாமரனுக்கு. .

  பைபர் கேபிள் எதுக்குங்க ..!


"களத்து மேடு கவலை மறக்க ...

கண்டகண்ட "சீரியல் "பேசுறாங்க ..

கழைகெத்தியும் கருக்கருவாளும் .

கண்காட்சிய ஆக்கிட்டாங்க ...!

"சீமத்தண்ணு ஊத்தற நாளு ...

திருவிழா கூட்டம்தாங்க ..

அடுப்பு விறகுக்கும்..

அஞ்சு வருசம் மழையில்லங்க ..!


"கைநாட்டுக்காரன் காடு கரையில ..

"கம்பெனி  வேண்டாங்க ...

 கால் வயித்து கஞ்சிக்கும் ...

கையோந்த வைக்காதிங்க ...!!


"அஞ்சு மாச சிசுவும்

"ஆண்ராய்டு "ல விளையாடுதங்க..

அறிவு வளருமா..

அநியாயம் பண்ணாதிங்க ...!


"உண்மை பண்பாடு -அது 

உழவன் உள்ளத்தில் கண்டு ..

உலகறிந்த வலைப்பதிவர் -மாநாட்டில் ..

உரைத்துச் சொல்லுங்க நின்று ..!!!


இப்படைப்பு வலைப்பதிவர் திருவிழா 2015 -தமிழ் இணைய கல்விகல்வி கழகம் இணைந்து "மின்தமிழ் இலக்கிய போட்டிகள் 2015 க்காக எழுதப்பட்டது!

வகை (4) புதுகவிதை போட்டிகள்! வளர்ந்து வரும் உலகில் பண்பாட்டின் தேவை!
இவை என் சொந்த படைப்புதான் என்றும் இதற்கு முன் எங்கும் வெளியானதல்ல என்றும் முடிவுகள் வெளிவரும்வரை வேறெங்கும் வெளிவராது என்றும் உறுதியளிக்கின்றேன் 

-கரூர்பூபகீதன் -





18 September 2015

பண்பாடு படும்பாடு!!!!






"புலி விரட்டியப் பரம்பரை நாங்க ...

புறநானூறு  புகட்டிய தமிழன் தாங்க ...

தமிழ் வளர்த்து லாபமில்லை ...இங்கு

சாதி வளர எந்த தடையுமில்லை ...

மேலைநாட்டு கல்வி பாரு ...

அது மேலானவர்..பணத்தீவுதானே ...

வறியவர் வாக்கை கேளு .அவர்...

மண் சுமக்கும் கதை எழுது ....

குனிவதற்கு இலக்கணம் வகுத்தோம் ..

கூன்குருடாய் அவதரிக்க மறுத் தோம் ...

மீசைகவி கண்ட மாந்தரொல்லாம் ....

மூச்சுமுட்ட குடிக்கிறது பாரினிலே...

தலைநிமிர்ந்து நில்லடா? பல தலைமுறை -சொல்லிவிட்டோம் ....

தள்ளாடாமல் நில்லடா? என்பதை நம் -தலைவிதியாக்கிவிட்டோம் ..!

மறத்தமிழன் மரித்துவிட்டான் ....

மதுத் தமிழனாய் பிறந்துவிட்டான் ..!

படித்தவன் பரதேசம் போ...

பாமரன் இறந்து போ...

விவசாயி வீணாகிப் போ...

விடிவுகாலம் இல்லையதை மறந்து போ..!

தமிழ் வாழ "முற்றமிழ் "வேண்டும் ...

தரணி சிறக்க நற்றமிழன் வேண்டும் ..!!



இப்படைப்பு "வலைபதிவர் சந்திப்பு 2015 மற்றும் தமிழ்இணைய கல்வி கழகம் நடத்தும் "மின்தமிழ் இலக்கிய போட்டிகள்"களுக்காக நான் எழுதிய சொந்த படைப்பாகும்!

வகை (4) புதுக்கவிதை போட்டி!
முன்னேறிய உலகில் பண்பாட்டின் தேவைகள்!
இதற்குமுன் எங்கும் வெளியானதல்ல என்றும் முடிவுகள் வெளியாகும்வரை  வேறெங்கும்  வெளிவராது என்றும் உறுதியளிக்கின்றேன்!

-கரூர்பூபகீதன் -


17 September 2015

புள்ளி விவரப் புலிகள்!!




   "இலவசமா கொடுத்த ஆடு எவ்வளவு புல்லு திண்னது, புலுக்கை  போட்டது? மாடு எவ்வளவு பால்பால் கறந்ததுனு "புள்ளிவிவரம் சொல்லி புல்லறிக்க வைக்கும் புள்ளிவிரவ புலிகளிடம் சில "டவுட்ஸ் ""


"ஓட்டு போட்ட. தொகுதி முழுவதும் இதுவரை எத்தனை அமைச்சர்கள் சுத்திவந்திருக்காங்க??

"சம்பளத்திற்கு மேல் ஒரு பைசா சம்பாதிக்காத அரசியல்வாதிகள் அரசு அதிகாரிகள் எத்தனை பேர்????

"வருமானம் வராது என்று "சொல்லி பஸ் விடாத கிராமம், ஊர்கள் எத்தனை???

"பால் குடி மறவாத பாலகரர்களை குடிக்க வைத்து குட்டுசுவராக்கியது எத்தனை பேர்????

"ம்மா ஆட்சியில் இதுவரை எதற்கும் போராட்டம் பன்னாத? சங்கம் மன்றம் கட்சி எத்தனை???

""குளங்களிலும் விவசாய நிலங்களிலும் அனுமதி அளித்த அப்பார்ட்மெண்ட் எத்தனை???

""மக்கள் பணத்தில் லஞ்சம் வாங்காமல் கொள்ளையடிக்காமல் "தொந்தியை "பெருக்கியவர்கள் எத்தனை பேர்???

""சீர்மிகு ஆட்சியின் மூலம் "குடும்பம் குட்டி "என்று நிம்மதியாய் இருந்தவர்களில் நடு தெருவுக்கு வந்தவர்கள் எத்தனை பேர்???

"மக்களுக்கு "நல்லது செய்யத்தான் "நாங்கள் ஆட்சிக்கு வந்தோம்? வருவோம் "என. தொண்டு செய்ய வந்தவர்கள் எத்தனை பேர்????

"அமைச்சர்களை மட்டும் அடிக்கடி மாற்றிய 
 நீங்கள் அன்றாடம் வேலைக்கு போவர்களை மாற்ற நினைத்த நாட்கள் இருக்கிறதா??? 

""இதுவரை எத்தனை கோடி லிட்டர் கூலிங் பீர் விற்று"குடிமகன்கள் "வயிற்றில் பீரை வார்த்தீர்கள்????

"ஒவ்வொரு அமைச்சரும் "குனிந்த நாட்கள் எத்தனை???

"மேதகு "குமாரசாமி "எதில் சறுக்கினார்???


நன்றிங்க! !அம்புட்டுதாங்க !!!

16 September 2015

கவர்மெண்ட் தண்ணீயும் கர்நாடக தண்ணீயும்!!!!

      "மழை இல்லாததால் ஒரு சொட்டு தண்ணீரை கூட திறக்கமுடியாது? அப்படி திறந்தால் விவசாயிகள் தற்கொலை அதிகமாகும் -கர்நாடக முதல்வர் செய்தி "


"மழை இல்லாததால் என்னாலும் ஒரு கடையை கூட மூட முடியாது  அப்படி மூடினால் பல குடிமகன்கள் பைத்தியமாகவும் சாவு என்னிக்கையும் அதிகமாகும் -தமிழக முதல்வர் வருத்தம் 


"தண்ணீக்காக நாங்க உங்க இரண்டு பேர்கிட்டயும் இன்னும் எத்தனை காலத்துக்கு "கையோந்துவது??? ""இதான் நாங்கள் வாங்கி  வந்த வரமா?? கையோந்துவதான் வளர்ச்சியா?? -பாமர மக்களின் அவலம்



"இதுவரை 24கோடியே 86லட்சம் இலவச ஆடுகள் மக்களுக்கு கொடுத்திருக்காங்களாம்! அதுக 56லட்சம் குட்டிகள் ஈன்றுக்கிறதாம்! மொத்த செலவு 778கோடியாம்!  அப்படினு ஒ.பி எஸ் புள்ளி விவரம் சொல்லியிறுக்கிறார்!!!! 

"28ஆயிரம் கோடிகொடுத்த டாஸ்மாக்கால் இதுவரை எத்தனை குடும்பம் தாலியறுத்தது, பைத்தியமானது ,பரதேசம் போனது, என்என்ற புள்ளிவிவரம் இருந்தால்? அதையும் "அம்மாவின் ஆணைக்கினங்க "ஒப்பிவிங்கள் பார்க்கலாம்!!! 
"இந்தியா முழுவதும் ஒரு நாள் கோலகலமாக கொண்டாப்படும் விநாயக சதுர்த்திக்கு 20000கோடி செலவு ஆகிறதாம் "!

"அன்பு கணபதியே உங்களை கரைப்பதற்கு கூடதண்ணீர் இல்லாமல் திண்டாடுகிறோம்! 
வருணபகவானை நம்பியிறுக்கும் எம் விவசாய மக்களுகாக மழை பொழிய அருள் புரிய கூடாதா???
கவர்மெண்ட் கடைகள் தண்ணீரில் அடித்து கொண்டு போகவும் அருள்புரியுங்கள் !


நன்றி!! ஊக்கப்படுத்தும் உள்ளங்களுக்கு நன்றி!

12 September 2015

எங்க ஊருக்கு வராதிங்க!! 3


""பஞ்சு சுமந்த ....

   பருத்தி காடு ....

   இப்ப ....

   பந்து அடிக்கிற....

   மைதானமாச்சுங்க....!!


    ""வயிறு முட்ட...
       
       தண்ணி குடிச்ச வயக்காடு...

        இப்ப....

        மசக்ககாரியாட்டம் ...

        வாடி வதங்குதங்க ...!!


        "கற்பம் தாங்கிய...

         கம்பு காடு ....

          இப்ப ,..

        தரிசாச்சுங்க ....!


      "கருது சுமந்த களம் ...

       இப்ப...

      கான்கிரிட் வீடாச்சுங்க ....!!


      "சோளம் தின்ன...

       குருவி கூட்டமல்லாம் ...

       இப்ப...

       முழிபிதுங்கி ஓடிருச்சுங்க ...!!


         


     "நெல்லு கட்டு சுமக்க....

     கூடின கூட்டம் ...

    இப்ப....

    கூப்பன் கடையில 

   கூடுதுங்க ...!!


   ""அரிசி பருப்பு ...

    விளவிச்சவனுக்கு ....

    அரசு கொடுத்த பரிசு ...

    "அய்யோனு சொல்லகூட...

     ஆளில்லாத அவலம் தாங்க .,!!

  
      "நீங்க இங்க வாழ வரவேணாம் ..

      எப்படி வாழறேம்னு பாக்க வாங்க ....!!
    

11 September 2015

குனிந்த கவிதை

         "உனக்கும்....

          எனக்கும் ....

         சிலை வைப்பது உறுதி.,...


          "நீயிறுக்கும்போது ....

           நான்....

          இறந்த பிறகு ,....!!




    ""இந்த வருடம் ....

     நோபல் பரிசு ....

     நாமிருவருக்கும் தானாம்,...!!



      "உனக்கு .,,..

       காக்க வைத்ததற்கும்...

      எனக்கு ....

       காத்து கொண்டிருப்பதற்கும் ....!!



நன்றி !ச்சும்னாச்சுக்கும் எழுதினேன்! நல்லா இருந்தா ஊக்கப்படுத்துங்கள் நன்றி!!!! 

10 September 2015

இதுவரை செய்தது? செய்யாதது? எப்பவுமே செய்யாதது!!? பகுதி 2

   ""இதன் முன் பகுதி( 8.9.15 )ல் இருக்குதுங்க! அதையும் ஒரு எட்டு பார்த்துட்டு வந்திடுங்க!!!


""எப்பவுமே செய்யாதது """

      "ஏம்பா ஏற்கனவே "அவங்களுக்கும் நமக்கும் எல்லை தகராறு இருக்கு!! எத்தனைவாட்டி சொன்னாலும் அவங்களும் சரி நீங்களும் சரி கேட்க மாட்டேங்கிறிங்க!! உங்க பிரச்சினைக்காக இதுவரை 200கடிதம் எழுதியாச்சு! நான் கடிதம் எழுத சமயம் பிரதமரு வெளுநாடு போயிடறாரு! இதுக்குமேல நான் என்ன பன்றது சொல்லுங்க!!!! 

"சுப்ரிம் கோர்ட்டு தீர்ப்பு சொல்லியாச்சு? அது அரசிதலிலும் வந்தாச்சு! இந்த கர்நாடகாரன் எம் பேச்சை கேட்கமாட்டேங்கிறான்?? இதுக்கு ஒரே வழி தமிழ்நாட்டுலயும் கர்நாடகவிலிம் நான், நான் மட்டுமே  "முதலமைச்சர "வந்ததான் சரியாயிருக்கும்? என்ன அடுத்த தரம் நீங்கள் செய்வீர்களா?? செய்வீர்களா??? 
 "ஏங்கம்மா உங்களுக்காக எத்தனை திட்டம்மா கொண்டுவர்றது?? அது சரி உங்க தலையில "குலி வேலைக்கும் செங்கல் சுமக்கிற 
வேலைக்கும் போயிதான் பொழைக்குனும்னு
எழுதியிருந்தா? நான் எப்படிம்மா மாத்தறது???? 
"ஏங்கய்யா இன்னம் இந்த மாட்டுவண்டியில விவசாயம் செய்யிறிங்க!! சரியான கூர் இல்லாத ஆள இருப்பிங்க போபோல!!! உங்களுக்காகத்தானே லட்சம் கோடியில மாநாடு நடத்தி பெரிய பெரிய முதலாளிகள் ஆசைபடுறாங்க!! மாட்டுவண்டிய மாத்துங்க!உங்க வசதிக்கு தகுந்தாபோல. நல்ல காரையோ பைக்கோ வாங்கிகிங்க!! என்ன நம்பி வந்திருக்காங்க இல்ல !!!உங்களைய நான் ஓட்டு போபோட மட்டும்தான் நம்புவேன்??  எல்லாத்துக்கும் என்னையே நம்பினா நான் என்ன பன்னட்டும்!!!!


"எல்லா திட்டங்களையும் எதிர்ப்பவர்கள் நாங்கல்ல!
எந்த திட்டமும் எங்களுக்கு வருவதில்லை என்று ஏமாறுபவர்கள் நாங்கள் !!

புது மொழி!!!! குடிகாரன் பேச்சு விடிஞ்சா போபோச்சு!!
குனிஞ்சவங்களின் பேச்சு அது கூட்டத்கூட்டத்தோடு போபோச்சு 





நன்றி ஏதும் குற்ற குறைகள் இருந்தால் மன்னித்து ஊக்கப்படுத்துஙுகள்! நன்றி!!!! 

08 September 2015

இதுவரை செய்தது? செய்யாதது? எப்பவுமே செய்யாதது?????

"நம்ம குடும்பத்துல இதுவரை எனக்கு என்ன செஞ்சு கிழிச்சனு 
கேட்பது வழக்கம்தானே!!

நம்மள ஆள்றவங்கட்ட கேக்க உரிமை
இருக்குதானே? வாங்க கேட்போம்!?!

""இதுவரை செய்தது ""
 தமிழ்நாட்டின் ஒவ்வொரு "சந்து பொந்து 
இண்டு இடுக்கு மூலை முடக்கு "இப்படி எல்லாவற்றிலும் 
தாராளமாக "தண்ணீர் கடையை "திறந்தது??
 என் சீர்மிகு ஆட்சியில் எந்த இடத்திலும் எப்படி வேண்டுமானாலும் உருண்டு கிடக்கலாம்? என்று "குடி மகனுக்கு 
சுதந்திரம் கொடுத்தது??? 
 கௌரவமானவனை  குடிக்கவைத்து நடு ரோட்டில் தெருவில் சாக்கடையில் புரளவைத்து நாலு பேர் காறி துப்பி 
பாராட்டியது ??
   "இவர்கள் தான் நாட்டின் "கண்கள் " என்றவர்களையும் 
மதுவுக்கு பழக்கப்படித்தி எல்லோர் கண்களையும் குதுகலப்படித்தியது??? 

"நம்ம காசிலியே நமக்கு மிக்ஸி, கிரைன்டர், டீவி னு கொடுத்து மக்களை எல்லாம் புல்லறிக்க வைத்தது??

"ஒவ்வொரு அமைச்சரையும், கோடி கணக்கில் கொள்ளையடிக்கவிட்டு "கமிஷன் தராததாலயொ? சரியாக குனியாததாலோ? "உனக்கு மக்கள் பணத்தை சரியா ?களவாட தெரியல "னு அடிக்கடி அமைச்சர்களை மாற்றியது?? 

"இதுவரை செய்யாதது ""


விவசாயத்தையும் விவசாயிகளையும்
ஏறடுத்து பார்க்காதது 
"படித்த இளைஞர்களுக்கு வேலை அது உன்பாடு "என்று உதாசினப்படுத்தியது??
தினக்கூலிக்கும் வரியவர்களையும் ஆண்டுகணக்காக அப்படியே வைத்திருப்பது???
"எந்த அரசு அதிகாரியையும் மக்களை தேடி சென்று சேவை செய்துவிடாதிர்கள்? என்று பயம்காட்டியது??


நன்றி இன்னும் இந்த பட்டியல் நீளும் நாளை சந்திப்போம்!! ஏதும் தவறு இருப்பின் சுட்டிகாட்டி ஊக்கப்படுத்துங்கள்! நன்றி 

07 September 2015

உங்க ஆள்காட்டி விரல் யாருக்கு??? பகுதி 2

"உங்கள் ஆள்காட்டி விரல் யாருக்கு பகுதி ஒன்றை (5 :09 :15) அன்று பார்க்கவும் நன்றி!!! 

"இவர் கட்சி ஆரம்பித்த புதிதில் "துளியூண்டு எதிர்பார்பு இருந்தது!
முதலில் "மக்களுடன் கூட்டனி "என்றார்! பிறகு கடவுடன் கூட்டனி என்றார்! வழக்கமாக "இலகட்சியில் இனைந்தார்! சட்டசபைக்கு போக அடம்பிடிக்கிறார் !சினிமாவில் நடிப்பது போல! நாக்கை துருத்தி கண்ணை உருட்டுவதாலும்? தமிழ்நாடே இவரைபார்த்து நகைக்கிறது! இவரைபற்றி மீடியாக்களில் மீம்ஸ் வராத நாட்களே இல்லை!! இவர்தான் உங்க சாய்ஸ் எனில்?  மதுவை ஒழிக்க மனித சங்கிலி நடத்தினார்! பிறகு மது படிபடியாகத்தான் ஒழிக்க வேன்டும் என்றார்! பிறகு 21வயசுக்கு கீழ் இருப்பவர்களுக்கு மது விற்பனையை ஒழிக்கவேன்டும் என்கிறார்!! இவர் என்னா பேசுகிறார் என்று அவர்க்கும் சரி நமக்கும் சரி இதுவரை புரிந்ததில்லை?? உங்க முடிவு என்ன?? 

நான் முதலமைச்சர் ஆனதும் முதல் கையொழுத்து "மதுவை ஒழிப்பதற்குதான் போடுவேன் "என்று இன்று வரையிலும் வெறும் கையொழுத்தை மட்டுமே பழகி பழகி வருகிறார்! சினிமாவில் எந்த பிடிக்காத கெட்ட காட்சி வைத்தாலும் முதல் எதிர்ப்பு இவராகத்தான் இருக்கும்! மதுவை ஒழிக்கறதுனு வீராப்புடன் சொல்லியிருப்பதால் மனது இளகி இவருக்குதான் உங்க சாய்ஸ் எனில் "அந்தோ பரிதாபம்!! மதுவை ஒழிக்கிறாரே இல்லையோ? தமிழ்நாடு முழுவதும் சாதியை வளத்துவிடுவார் என்பதையும் கவனித்தில் வைங்க!
அப்ப உங்க முடிவு ???

இன்னும் நம்மை ஆள்றதுக்கு நிறைய முதல்வர்கள் ரெடியா இருக்காங்க??
நம்ம விதி இவங்கள நம்பியிருக்கற மாதிரிதானே இருக்கு!! எல்லொரும் மதுவை ஒழிக்கத்தான்  வராங்களாம்!!

இவங்க என்ன ஒழிக்கறது! தன்னால நாங்களே குடிச்சு குடிச்சு ஒழிஞ்சிடுவோம்? இல்லனா பைத்தியமாகிடுவோம் 



நன்றி இது எனக்கு தெரிந்த கருத்துதான் ஏதும் குற்றகுறைகள் இருந்தா சொல்லுங்க நன்றி

06 September 2015

கால் கிலோ கவிதைகள்!!!





"""நீ...

   பாவம் என்று சொன்ன ....

  பச்சக்கிளியை...

  பாசத்துடன் ....

 வளர்த்துவந்தேன் .,..!

"அது ..."

 உன்னைப் போலவே...

 பிடிக்கவில்லை....

 என்பதையே...

 பிடிவாதமாய் ....

சொல்லிக் கொண்டிருக்கிறது ....!!!





"""உனை பார்த்த பிறகு ....

    என்னை ....

    நானே ....

    கேள்வி கேட்பதுண்டு....

   ""நீ யார் ""

    அதையே தான். ..

    நீயும் கேட்கிறாய்.,..

   ""நீ யார் ""


நன்றி!! நன்றி!! 

05 September 2015

உங்க ஆள்காட்டி விரல் யாருக்கு!!!!

நாம? ஆவலா எதிர்பார்க்கும் தேர்தல் அடுத்த வருடம் வரப்போகுது!!
இப்பவே ஆளாளுக்கு நான்தான் ஆட்சியை பிடிச்சு மதுவ ஒழிக்க போறதா?? பல முதல்வர் வேட்பாளர்கள் வரிசை கட்டி வராங்க!!!

உங்க சாய்ஸ், யாருனு பார்க்கலாம்!!! வாங்க!!
 "குடிமக்களை கொல்வது "மட்டுமே என் லட்சியம், கொள்கை, மூச்சு "னு சிறப்பா ஆட்சி செய்து வரும் இவர்தான் உங்கள் முதல் சாய்ஸ் எனில் "உங்களையும் சரி? குடி "மக்களையும் சரி? யாரும் காப்பாத்தமுடியாது?? (ஏன்னா? அதுக்குள்ள பாதி பேர் குடிச்சே செத்துடுவாங்க) "குடி "குனி "இதான் இவங்களின் தாரகமந்திரம்! குடிமக்களை விட குனிபவர்களைத்தான் இவருக்கு அதிகம் பிடிக்கும்!!! இவங்க 3 விசயம்தான் அதிகமா செய்வாங்க!!  1 "குடிமக்களுக்காக கடிதம் எழுதறது!! விவசாயத்திற்கு தண்ணீர் திறக்க செய்வது!! விளங்காம போறதுக்கு தண்ணீர் கடையை திறப்பது!!! 


"வீல் சேர்ல நகர்றாரு, இதான் கடைசி தேர்தலு "னு "பெரியவங்க, வயசானவங்க, யாராச்சும் பரிதாபபட்டு ? இவர்தான் உங்க அடுத்த சாய்ஸ்? எனில் அந்த முன்னூத்தி முப்பத்தாறு தேவர்களும் வந்து கால பிடிச்சு கதறினாலும் "தமிழ்நாட்டை காப்பாத்த முடியாது?? இவர் வச்சிருக்க "துளியூண்டு "சொத்த வச்சு கன்னியாகுமரிக்கும் காஷ்மீருக்கும் ? அஞ்சு பஸ் ஒண்ணா போறப்போ
ல? சும்மா பளபள "னு தார் ""ரோடு போடலாம்?? ஏற்கனவே தென்தமிழ்நாட்டை ஒரு தமையனுக்கும் வடதமிழ்நாட்டை ஒரு தமையனுக்கும் பிரிச்சு கொள்ளையடிக்க சொல்லிட்டாரு?? அதுமட்டுமா ஆட்சியில இருக்கறப்பத்தான் 3;4 படத்துக்கு கதை வசனம்  எழுதி!,அந்த மக்கு படத்தையும் ஆட்சிமுடியவரைக்கும் ஹஸ்புல்லா "ஓட்டுவாரு!!! மது ஒழிப்புனு சொல்லியிருக்கார்??? முதலில் அவர் கொள்ளையடிப்பதை நிறுத்தனும்! என் விரலை வெட்டினாலும் இவருக்கு ஒட்டு இல்ல?? அப்ப நீங்க?????



இன்னும் அடுத்த முதல்வர்கள் பற்றிய பதிவு நாளை வரும்!!! நன்றி பதிவு பிடிச்சிருந்தா என்மேல பாவப்பட்டு கருத்து சொல்லிட்டு போங்க!!!!!!

04 September 2015

எங்க ஊருக்கு வராதிங்க!!!



""அந்த கப்பலும் பாத்ததில்ல ...

 கடலும் பாத்ததில்ல ....

 ஏரோபிளான் பாத்ததில்ல ...

 வானம் பாத்த மனுச நாங்க!!! ""


""ஆள்ற மவராசி யாருனு ...

கேட்டதுல்ல...

அவ ராசியோ  என்னமோ...

அஞ்சு வருசம் மழையுமில்ல ...!!



""எத்தினி காசுல திட்டம் ...

அது சேரல எங்கள மட்டும் ....

வெவசாயத்துக்கு ஒரு ஆபிசராம் ,...

எம்பது வயசாச்சு எனக்கு ,...

வெளங்காத பயல பாத்தில்ல நானும் ...!!!



""இங்க மழ பேஞ்சா ....

  மனசு குளிரும் வவுறு நெறையும்!!

பட்டணத்துல்ல கொசு  வரும்னு ...

புலம்பிறிங்க ....

இந்த அநியாத்த என்ன சொல்ல..




""வச்ச வெள்ளாம வீடு வராம ...

ஒருநாளும் ,..

வக்கனய தின்னதில்ல...

நிம்மதிய நித்திரயுமில்ல...!!


""கும்மி அடிச்ச ...

குமரிக எல்லாம் ...

கூடி கூடி சீரியல் பேசுதிங்க ....

ஆடு மேய்ச்ச ...

பயலுக எல்லாம் ....

ஆண்ராய்டு கேக்குதிங்க ...!!


விஞ்ஞான வளர்ச்சி ...
வெவசாயத்துக்கு வீழ்ச்சி ,!!

""மூனு போகம் விளஞ்சதல்லாம்

இப்ப முள்ளுகாடா ஆய்டுச்சு ,...

வேல கேட்க எங்க விதியாச்சு!!!


""நீங்க இங்க வாழ வரவேணாம் ,

எப்படி வாழ்றேம்னு பாக்க வாங்க!!!

நன்றி!! உங்கள் கருத்துகளை கூறுங்கள் நன்றி! !!

03 September 2015

இவர்களிடம் இந்தியாவை ஒப்படைத்தால்???

*இளைஞர்களிடம் இந்தியாவை
ஒப்படைத்தால்???
முதலில் எந்த அரசியல்வாதிகளும் ஒப்படைக்க தயாரில்லை என்பதுதான் உண்மை! இரண்டாவது எந்த இளைஞர்க்கும் அரசியலில் குதிக்கவும் விருப்பமில்லை என்பதும, உண்மை!!


எனக்கு இந்தியாவின் மற்ற மாநில இளைஞர்களை பற்றி தெரியாததால் நம் தமிழ்நாட்டு இளைஞர்களிடம் ஆட்சியை ஒப்படைத்தால் என்னாகும் என்பதே இந்த பதிவு!!


நம் இளைஞர்களுக்கு எத்தனையோ !திறமையிருந்தும் !எத்தனை பெரிய பதவிகளில் பணிபுரிந்தாலும்? எத்தனை நாடுகளிலும் பரவி இருந்தாலும்! இந்த
அரசியலில் இல்லாமல் இருப்பது ஏன்???


நாம் கற்காலத்தில் பிறந்து பிறகு பல காலங்களை கடந்து தற்போது "டாஸ்மாக் "
காலத்தில் மயங்கி விழுந்து வாழ்ந்து வருகிறோம் t
படிக்காத பல இளைஞர்கள் தன் குடும்பம் குட்டி, எல்லாம் 
துறந்து டாஷ்மாக்கே "கதி என்று இருக்கிறார்கள்!! படித்தவர்களும் இதில் விதிவிலக்கல்ல!!


30வயதுக்குள் இருப்பவர்கள் தான் இளைஞர்கள் என்று இந்தியாவில் வறைமுறை இருக்கிறது!! ஆனால் 25 வருசமா ஆண்ட இந்த கட்சியில் இவர் மட்டும் 55, 60 வயசுவரைக்கும் இளைஞர்அணி செயலாளராக  இருக்கும் கூத்தை என்ன சொல்வது??? இதில் இளைஞர் அதிகம் கொண்ட கட்சி என்று பீத்திகிறார்கள் 
படித்து பல பட்டம் வாங்கிய. இளைஞர்களுக்கு உருப்படியாக வேலைவாய்ப்பை தருகிறதா?? இந்த அரசு!! ஆரம்ப பள்ளியில் சாதி சான்றிதல் வாங்வதில் இருந்து சுடுகாட்டில் பிணத்தை எறிப்பது வரை லஞ்சம்!! இளைஞர்களுக்கு முன்னுதாரமாக இருக்கவேன்டிய இந்த கிழட்டு சிங்கம் புலி ஆடு அரசியல்தலைவர்கள் படு கிறுக்குதனமாக நடந்து நாறுகிறார்கள்!?


அடுத்து தமிழ்நாட்டில் எந்த கோவிலும் இல்லை!! அதில் சாமியும் இல்லை என்பது போல ' ""இவர் ஒருவர் மட்டுந்தான் குலசாமி  சோதனைகளை தீர்க்க கடவுள்! ஏழைகளின் கண்ணீர் துடைக்கும் "கர்சீப் "எனும் சில்லறைத்தனமான சிந்தனையில், குனிந்து கும்பிடி போட்டு தரையில் உருண்டு அக்னி சட்டி எடுத்து?? கூனி குறுகி அழுது புலம்பி வரும் இவர்களை வைத்து கொண்டு இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இவர்களை திருத்தவேமுடியாது!!! 
உப்பு சப்பில்லாத விசயத்திற்கு எல்லாம் போராடும் நாம் இளைஞர்களிடம் ஆட்சியை ஒப்படைங்கள் என்று என்றாவது போராடியிறுக்குமா ???

இல்லை என்பதுதான் நிதர்சன உண்மை!! இளைஞர்களிடம் மட்டும்தான் ஆட்சியை ஒப்படைத்தால்தான்?

தமிழ்நாடு டாப் ஆக ஆகும்! அரசியலும் அழகாகும!!  இந்தியாவும் வல்லரசாகும்!!!


நன்றி! இவை எனக்கு தெரிந்த கருத்துக்கள்தான் ஏதும் நிறை குறைகள் இருந்தால் சுட்டிகாட்டுங்கள் நன்றி!!!