click to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own text

31 August 2015

நிமிரத் தெரியாதவர்கள்!!!



      ""தடுக்கி விழுந்தேன் ....

        விழுந்த இடம் .....

        பள்ளமோ, பாதாளமோ அல்ல...

        உ(ங்கள்)ன்  மதுகுழி (டாஸ்மாக்)!!!?


        ""அடக்கு முறைக்கு ....

          அடிபணிய மாட்டோம் ...

          என்ற நாட்டில் ....

          அவரிடம் மட்டும் ....

           குட்( Good) வாங்க....

           குனிந்துகொண்டே...

           இருக்கிறார்கள் ,...

           இவர்கள்!!!!!



சின்ன கேள்வி :::தமிழ்நாட்டில் ஒரு நாளைக்கு சுமார் 24 கிலோ மீட்டர் நடந்து நடந்து சம்பாரித்து தருபவர்கள் யார்???? தெரியுமா???


சின்ன தகவல் ::தற்போது ப்ரிட்ஜ் வாங்க நினைக்கறவங்க வாங்காதிங்க!!
ஏன்னா அடுத்த தேர்தலுக்கு ப்ரிட்ஜ் தரலாம்னு யோசிக்கிறங்களாம்?! (ஐ ஜாலி! ஜாலி)

நன்றி! !நிறைகுறைகளை சுட்டிகாட்டுங்கள் நன்றி!?! 

30 August 2015

கால் கிலோ கவிதைகள்!!


      ""உன் ....

       மின்சார விழிகள் ...

       திறவாவதால் ....

      அணுசக்திக்கு ...

      ஆசைப்படுகிறது ...

     இந்தியா ,...!!""




   ""என்னைப் பற்றி ...

     எல்லோரிடமும் ...

     எதையாவது. ...

     எந்நேரமும் ....

     சொல்லிக் கொண்டிரு ...

    "ஏனென்றால்????

   சில சமயங்களில் ...

   நீ..யார் என்பதை,.

    நானும்.,

   நான் யார் என்பதை .,

   நீயும்

   மறந்துவிடுவோம்,...!!""


நன்றி இவை 2005நான் கிறுக்கிய தொகுப்பிலிருந்து மறுபதிவு!! உங்கள் கருத்துகளையும் கூறுங்கள் நன்றி!! 

29 August 2015

கால் கிலோ கவிதைகள்!!

  "ஆத்தங்கர ஓரம் ,
   
    அந்தி சாயும் நேரம்,

   ஒத்தயில. போறவளே .....

   ஒத்த நொடி நில்லே ....."!!


    உம்முகம்  பாத்த ,.....

    கம்பங்காடு தல சாய்க்கும் .....

     உம்   நிறம் பாத்த ......

      சூரியகாந்தி பூ சிவக்கும் ,......!!


       காடு உழும் அய்யனுக்கும் .....

      கழை வாரும் ஆத்தாளுக்கும் .,...

      கஞ்சி கொண்டு  போறியே .....

     எம் பசி  போக்க .....

    எப்ப வருவ ....,!!


     ""பாவட சரசரக்க   ஓடாத ..,

       பருத்தி காடு பாவமடி .,...

      பச்ச புல்லும் நோகுமடி ...""



    ""பருத்தி சீலக்கி பவுசு....

     உன்னால வந்ததடி மவுசு ....""


      ""நீ ஆடு மோய்க் போறியா.,...

        அப்படித்தான்  நினைக்குது ஊரு ....

         எம் மனச மோய்ப்பது

          யாருக்காவது தெரியுமானு பாரு.,...



        ""உனை பாக்கலன .....

         கரும்பு காடு காயுமடி .,..

         கடல செடி கருகுமடி ,....""


        ""எதித்த வீட்டு சிறுக்கி. ....

        எனை பாத்தானு .,...

        கருக்கருவால. தீட்டி ....

         சண்டக்கி போன....கருவாச்சி!! ""


        ""தை பொங்கலன....

         தை தைனு குதிப்ப ....

         மாட்டுக்கு முத. சோறு ,...

         மனிஷனுக்கு மறு சோறு

         ஓரவஞ்சன செய்யாத ....

         பாசக்காரி நீ ..,!!""

     

        ""சலிக்காம வேல இருந்தாலும் ..,..

          சல்லீச செய்வ .,....

         எப்படினு கேட்ட .,...

         மனசுல மச்சான் இருக்கானு ....

        மதர்ப்ப திரியுவ ,....!!""


          ஆத்தங்கர அம்மன்கிட்ட ....

          அப்படி என்ன பேசுவ ,...

            ஒட்டு கேட்டாலும் ,...

           ஒண்னுந் புரியாது எனக்கு ....!!""


          நான் காலேஜ் படிச்சிருந்தும் ....

          கவர்மெண்டு வேலயிருந்தும்

         நாகரிகம்  தொரியாதவனு ....

        தள்ளிவச்சது எந்தவறுடி .,.,!!

 
        ""உன் விவசாய பாசத்திக்கும் ....

         வெள்ளாமை பெருமைக்கும் ,...

         முன் ,....

        என் கவுரவம் கால் தூசடி ,...!!!!!

நன்றி இவை கால் கிலோ கவிதைகள் எனும் நான் எழுதிய. பதிப்பின் மறு பதிவு  எழுதிய ஆண்டு 2005
உங்கள் கருத்துகளை சொல்லுங்கள் நன்றி?!!!!

        

28 August 2015

நாம் எதில் முதலிடம்????

    *யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட் 
    
    *மோகன் ப்ருவரிஸ் லிமிடெட்

      *சிவா டிஸ்டிஸ்லரிஸ் லிமிடெட் 

      *எம்.பி டிஸ்டிஸ்லரிஸ் லிமிடெட் 

      *சதர்ன் அக்ரிபுரேன் இன்டஸ்ரிஸ் லிமிடெட் 

      *மிடாஸ் கோல்டன் டிஸ்டிஸ்லர்ஸ் பி லிமிடெட் 

      *எலைட் டிஸ்டிஸ்லர்ஸ் லிமிடெட் 

      *எஸ் என் ஜே டிஸ்டிஸ்லர்ஸ் லிமிடெட் 
   
      *கல்ஸ் டிஸ்டிஸ்லர்ஸ் லிமிடெட் 

       *கோல்டன் வாட்ஸ் பி லிமிடெட் 

       *இம்பீரியல்  ஸ்பிரிஸ் அன்டு ஒயின் பி லிமிடெட் 

       *சென்னை ப்ருவரிஸ்  பி லிமிடெட்

        *அப்போலோ டிஸ்டிஸ்லர்ஸ் பி லிமிடெட் 





இவையொல்லாம்  படித்து திறமை இருந்தும் 

MA. MBA ME BE படித்த லட்சகணக்கானவர்களுக்கு வாரி வழங்கும் வேலைவாய்ப்பு கம்பெனியல்ல 



அல்லும் பகலும் பாடுபட்டு சேமித்த பணத்தை 

அடியேடு கொள்ளையடிக்கும் மது ஆலைகள்!!


தமிழ்நாடு தொழில் தொடங்க. சிறந்த மாநிலமாம் 

இருக்காத பின்னே! 6கோடி மக்களுக்கு மது ஊத்தி 

கொடுக்க 15கம்பெனிகள் 


பாலுட்டும் தாய்மார்பகளுக்கு தனியறை 

கட்டிகொடுத்தது போல.?? குடித்து நடு ரோட்டில் 

வீழ்ந்துகிடக்கும் ஒட்டுபோட்டவனுக்கும் 

ஏதாவது கட்டிகொகட்டிகொடுங்க!!!




நன்றி இவை என் கருத்துகளே!! உங்கள் கருத்தையும் மறக்காம சொல்லிட்டுப்போங்க!!!! 

26 August 2015

பெரிய வெங்காயம்

சரியோ, தப்போ, எதற்கும் போராட்டம் வேண்டும் ,
போராட வேண்டும் என்கிற சீரிய
சில்லறைத்தனமான சிந்தனைகள்
மக்கள் மனதில் வந்திருச்சு!
அந்த போராட்டத்தால நல்லது நடக்கிறது என்றால் முழுக்க முழுக்க இல்லையொன்றுதான்
சொல்லமுடியும்!

இந்த பிரச்சினைக்கு ஏன் இவர்கள் இன்னும்போராட்டம்
ஆர்பாட்டம் பண்னவில்லை என்று எதிர்பார்க்கவும் ஆரம்பித்துவிட்டோம்!?

80ருபாய்க்கு பெரிய வெங்காயம் விலை
ஏறிவிட்டதால் சில உருப்படாத கட்சிகள்
அய்யோ!குய்யோ என்று கத்துகிறார்கள்

இவர்களிடம் ஒரு கேள்வி  பல விவசாயிகள் தான் விளைவித்த பொருட்களுக்கு அரசு சரியான விலை தருகிறதா??

பல சமயங்களில் விலை இல்லை என்று
தக்காளி  போன்ற பொருட்களை வீதியில் சாக்டையில்  வீசிகிறார்கள் ஏன்????
அப்போது இவர்கள் கத்தவில்லை போராடவில்லை???

2ருபாய் பொருளுக்கு இரண்டு மணி நேரம்
பேரம் பேசுபவர்கள் தானே நாம்! ! அல்லும் பகலும் பாடுபட்ட விவசாயிக்கு எப்படி லாபம் தரலாம் என்று நினைப்பவர்கள் இங்கு
எத்தனை!!!

அதிலும் இடைத்தரகர்கள்தான் இடையில்
புகுந்து கொள்ளையடிக்கிறார்கள்

அதுவே நகை கடையில் 100ருபாய் குறைந்தால் துள்ளி குதிப்பதும் 1000ருபாய் ஏறினால் கவலைப்படுவதுதானே நம் சமுக
பழக்கம்


1968ஆம் ஆண்டு ஒரு மூட்டை நெல்லின்
விலை 40ரூபாய், தங்கத்தின் விலை 120ருபாய்
3மூட்டை நெல்லை விற்றால் 1பவுன் தங்கம்
எடுக்கலாம் ?  ஆனால் இப்போதைய நிலைமை என்ன???


அதே நெல்லு 1200ருபாய் ! தங்கத்தின் விலை 20000ஆயிரத்திற்கும் அதிகம்!


எப்படி இந்த ஏற்றதாழ்வு உன்டாச்சு?
எல்லாம் நம் அரசாங்கம்தான் !  அரிசி பருப்பு காய்கறி விவசாயத்தில் ஆர்வம் இல்லாமல்
அழகு சாதனப் பொருட்களுக்கு  முக்கியத்துவம் கொடுத்த காரணம்தான் இது!! தமிழ்நாட்டில் அரிசி கடைகள் 500
இருந்தால், தங்க கடைகள் 5000 இருக்கும்


தங்கம் இறக்குமதி செய்ய அவ்வளவு கட்டுபாடுகள் இல்லை! ஆனால் இங்கு விவசாயம் செய்ய ஏகப்பட்ட கட்டுப்பாடுகள்
சொல்லப்போனால் விவசாயம் மெல்ல,, மெல்ல
அழிந்து வருகிறது!!  அடுக்குமாடி வீடுகள்
பெருகி வருகிறது?

உண்ணும் பொருளுக்கு விலை குறைவாகவும்? ஆழகு ஆபரணத்திற்கு
விலை அதிகமாகவும் இருந்தால் ஏன்????
"வறுமைகோடு உண்டாகது???

இந்த முரன்பாடுகளை ஆராயமல்
வறுமையும் ஒழிக்க முடியாது??  இந்தியாவின் வளத்தையும் அதிகரிக்க முடியாது!!!!

நன்றி இவை என் கருத்துகளே உங்கள் கருத்துகளையும் கூறலாம் நன்றி!!! 

25 August 2015

only 110

அரிதாக பயன்படுத்தகூடிய (அப்படித்தான் சொன்னாங்க)  இந்த 110 விதியை கடந்த 4ஆண்டுகளில் 115தரம் பயன்படுத்தியாச்சு, ஆட்சி முடிய ஓராண்டு உள்ள நிலையில்  நடக்கின்ற சட்டசபையில் இன்னும் என்வெல்லாம் சொல்லலாம்னு சும்மா சும்மனாச்சுக்கும் பார்க்கலாமா??????



*யாரும் வேலைக்கு போகாதிங்க, உங்க வீடுதேடி மாதம் 1லட்சம் ரூபாய் வரும்!

*பலவித விபத்துகளில் உயிரிழப்பவர்களுக்கு இழப்பீடு வழங்கும் முறையை மாற்றி , விபத்திற்கு காரணமானவர்கள்  
உயிரிழந்தவர்களுக்கு மாதமாதம் 1000ருபாய் தரவேண்டும்!!! 






*பஸ் பிடித்து பள்ளி செல்ல பல மாணவ மாணவிகள்  சிரமப்படுவதால் , இனி அவர்கள் ஊருக்கே  ஆசிரியர் சென்று சொல்லிதரவேண்டும்!!


*பஸ் மறியல்,  வன்முறை, தீவைப்பு, கற்பழிப்பு, போராட்டம் போன்ற குற்ற செயல்களில் ஈடுபடாதவர்களுக்கு  மாதந்தோரும் 5000ஊக்கத் தொகை வழங்கப்படும்!!


*கற்பழிப்பு குற்றங்களை தடுக்கும் பொருட்டு அவர்களுக்கு அரசு செலவில் திருமணம் நடத்தி வைக்கப்படும்!!

*மழை இல்லாததால் கர்நாடகம் தண்ணீர் சரியாக தராததால் இனி விவசாய நிலங்களில் அப்பார்மெண்ட் ஷாப்பிங் மால் போபோன்றவைகளைபோன்றவைகளை அரசே அமைத்து விவசாயிகளுக்கு வாடகை முலம் அவர்கள் வருமை ஒழிக்கப்படும்!!!


*30ஆயிரம் டாஸ்மாக் வருமானம் எதிர்கடசிகளின் கண்ணை உருத்துவதால் இனி எனது அரசு 30ருபாய்கு பீரும், 25ருபாய்க்கு குவாட்டரும் வழங்கும் சைடிஸ் அனைத்தும் இலவசம்!!!


*அடுத்த ஆண்டு தேர்தலுக்கு முன்னேட்டமாக சுமார் 300நபர்களுக்கு சரியாக குனிவதற்கும் காலில் விழுவதற்கும் பயிற்சி அளிக்க நிதி அளிக்கப்படும்!!


*என் கருத்திற்கு எதிராக,  எனக்கு எதிராக அறிக்கைப்போர் அக்கப்போர் கொடுப்பவர்களை அடுத்த மாநிலத்திற்கு கடத்தப்படும்!!!

 

ஆ,,, ஊ,,,  னா வழக்கு போட்டு அரசையும் நீதிபதிகளையும்  கிறுகிறுக்க வைப்பவர்களை ,,, சிறையில் தள்ளி சில காலம் கவுன்சிலிங்  கொடுக்கப்படும் 


அய்யோ இது நடந்த நல்லாயிருக்கும்னு நினைக்கிறிங்களா??  

கண்டிப்பா நடக்கும் 
அதுக்கு என்ன செய்யனும்னா ?

வயிறு முட்ட சாப்பிட்டு மல்லாக்க படுத்து கண்ண மூடி பாருங்க 
கலர்கலராக கனவு வரும் அதில இதுவும் வந்தாலும் வரலாம் 




நன்றி!!!  இது என் கருத்துதான்!  எப்படியிருந்தாலும் உங்க கருத்தையும் சொல்லுங்க!!! 

24 August 2015

வாஸ்கோடகாமா!! !!

*    இந்தியாவை 
       கண்டுப்பிடித்த சமயத்தில் 
      நீ (ங்கள்) யிருப்பது,
       (ஜெ,  க ,ரா, வி , தி, வை,)
      தெரிந்திருந்தால்,
       வந்த வழியே,,,,
        திரும்பிறுப்பான்?
         வாஸ்கோடகாமா !!!!?




     *கீழ்கண்டவற்றிக்கு தமிழர்கள் தேவை!!
        ஓட்டு போடுவதற்கு,
         குடித்து குடும்பத்தை அழிப்பதற்கு,
       மது ஆலை முதலாளிகளை 
        வாழ வைப்பதற்கு,,
        பேனர் கட்டுவதற்கு,
         60டிகிரியில் குனிவதற்கு ,
         வாழ்க கோஷம் போடுவதற்கு!!!!! 




      *

20 August 2015

இவையும் கவிதைதான்

*அவர் கும்பிடும் 
சாமி "யைத்தான் நானும் 
கும்பிடுகிறேன்,
மொதலாளி மட்டும்
மேலும் மேலும் 
பணக்காரராக!!!
நான் மட்டும் 
கூலிக்காரனாக!!!!!



*ஐயர் வரும்வரை 
அமாவாசை காத்திருப்பதில்லை 
இப்போது,
கடவுள் காத்திருக்கிறார்
கதவுகள் திறப்பதற்கு!!!


*இன்று 
எந்த கடவுளுக்கும் 
அதிகாரமில்லை?
அறங்காவலர்
முடிவே இறுதியானது!!?


18 August 2015

எங்க ஊருக்கு வராதிங்க

*80வீடுகளே உள்ள. குக்கிராமம்
மக்களோ வெறும் நானுறு,
கட்சிகளோ? முப்பது
கடைகன்னி இல்ல
கால்தடுக்கும் கவர்மெண்டு
ரோடு, ,
கபடி பம்பரம் விளையாடும்
நெல்வயல்காடு
குடிக்கம் தண்ணீக்கு
குங்ப்பூ தெரிந்திருக்கவேனும்,
ஆடுமாடுகளோ ஆயிரமிருக்கும்
பள்ளிகூடம் பாதி, மாடு மோய்க்
பாதினு வாழ்க் ஓடும்

படிச்சு கவர்மென்டு வேலக்கி
போவமாட்டோம்னு நாலு எழுத்து
தெரிஞ்சா பேதும்!

நிதி இல்லனு சர்க்கார் பஸ் வராது?
மக்கள் பத்தாதுனு 7கிலோமீட்டர்ல
சர்க்கார் ஆஸ்பத்திரி!

பண்பாடு மாறாத பாமர மக்கள்
அப்ப சாராயத்த குடிச்சு மூனு
சீட்டு ஆடுனுவங்க
இப்ப டாஸ்மாக்ல குடிச்சு
தாயம் ஆடுறாங்க!

தீவாளி பொங்களவிட மாரியாயி
நோன்புக்கு மவுசு அதிகம்

கெட்டாலும் பட்ணம் போககூடாதுனு பெரியவங்க இருக்க

கெத்தா இருக்க பட்ணம்
போனாங்க இளைஞர் கூட்டம்

வானம்பாத்த பூமிதான்
பச்சய கண்டு பாதி வருசமாச்சு

கலப்ப புடுச்சு உழுத காலம்
மறந்துபோச்சு

விவசாயம் மறந்து விதிப்படி
வாழ்க்கனு ஆய்டுச்சு

ஓட்டு போடறது மட்டும்தான்

கவர்மெண்ட்டும் கண்டுகாது
நாங்களும் கண்டுக்கமாட்டேம்


மெத்தத்துல வரபட்டிக்காடு
அழிஞ்சு போற இனத்துல

தாராளமா எங்களையும்சேத்துகிங்க


நீங்க இங்க வாழ வரவேணாம்
எப்படி வாழ்றேம்னு பாக்க வாங்க