"வீரசிங்கம் புல்லட்டில் வந்து இறங்கியதும் சக வாத்தியார்களும் மொத்த மாணவர் கூட்டமும் திரும்பி பார்த்தார்கள் (வீரசிங்கம் என் சித்தப்பா இவரை பற்றி சொல்ல பல வீரகதைகள் இருக்கு பிறகு சொல்கிறேன், ஒரு வார்த்தையில் சொன்னால் சுத்துபட்டி ஊர்களுக்கு இவரின் வீரம் பற்றி தெரியும்)
எவன்டா "என் புள்ளய அடிச்சது என்றவாறு புல்லட்டிலிருந்து இறங்கினார்!
சகவாத்தியார்களில் ஒருவர் "ஏ ங்க என்ன வேனும் "என்றார்
வீரசிங்கத்திற்கு கோபம் அடங்கமால் மறுபடியும் (இவரும் புல் போதையில்தான் இருப்பார்) எவன்டா கால் அமுக்க சொன்னா மயிராண்டி என்றார்
"அதற்குள் சீனிவாசன் வாத்தியாரே "ஏன் நாந்தான் "என்றார் வீரசிங்கத்தை பற்றி தெரியாமல்
"நாந்தான் "என்று சொல்லிமுடிப்பதற்குள் "பட்டார் பட்டார் "என்று வாத்தியாரின் இரு கண்ணமும் சிவந்து ரத்தம் வருமளவுக்கு அடித்து உதைத்தார்
சகவாத்தியார் யாரும் தடுக்கவும் வரவில்லை. புடிக்கவும் வரவில்லை
புள்ளைகளுக்கு சொல்லித்தர வர்றியா உன் பு...அமுக்க வர்றியா என்று வாத்தியாருக்கு இரு கண்ணமும் ஒரு கிலோ வீங்குமளவுக்கு அடி
"ஒழுங்கு மருவாதியா பாடம் சொல்லிக்கொடி இல்லனா என்ன பண்ணுவேனு எனக்கு தெரியாது என்றார்
யோய் நீ என்னய்யா பண்ணுவ "என்று வீராப்புடன் வந்த தலைமை ஆசிரியர் சீறினார்
"சும்மா இருடா மயிராண்டி இதான் நீ பாத்துக்கிற லட்சணமா?
எவன்கிட்ட சொல்வ நீ யார வேனும்னாலும் கூட்டிகிட்டுவாடா அதுவறைக்கும் நான் இங்க இருக்கேன் "என்றார் வீரசிங்கம்
அடிவாங்கிய வாத்தியார் மயக்கம் வந்து விழ பள்ளிக்கூடம் பரபரப்பானது
இதற்குள் விசயம் தெரிந்து உள்ளூர்காரர்களும் வந்துவிட
இவரும் விசயம் சொல்ல
எல்லோரும் "ஆமாப்பா "இந்த வாத்தியாரு தினம் போதையில் வர்றதவர்றத
பாத்திருக்கன் என்றார்கள்
பலவித சச்சரவுக்கு பிறகு தலைமை ஆசிரியர் வந்து சரிப்பா "இது நடக்காம. இனிமே பாத்துக்கறன் என்றார்
ஒருவழியாக பிரச்சனை முடிந்து வீடுவந்து சேர்ந்தோம்!
அடுத்த நாள் அந்த வாத்தியார் வரவில்லை! நாங்கள் 8வகுப்பு முடித்து வரும்வரைக்கு ஆண் வாத்தியார் யாருமே அந்த பள்ளிக்கூடத்திற்கு வரவில்லை
வீரசிங்கம் இருந்தவரை யாரும் வாலாட்ட முடியாது
சிறுநீரக பாதிப்பால் தன் 45வயதில் இறந்தார்!
அவர் இறந்து இன்றுடன் 15ஆண்டுகள் முடிந்துவிட்டன
அவர்மகன் வேலுச்சாமியும் யாரும் எதிர்பாராமல் தன் 28வயதில் இறந்துவிட்டான்!
இவர் இறந்த பிறகு இன்று எங்க ஊரில் நடக்காத காரியம் எல்லாம் நடக்கிறது
அதே வீரத்துடன் சொர்க்கத்திலுயோ நரகத்திலியோ இருப்பாரே என்னவோ!
இங்கு நான் எழுதியிருப்பது முழுக்க உண்மை! அவரை பற்றி நிரைய கதைகளை நேரம்கிடைக்கும் போது உங்களிடம் பகிர்வேன் நன்றி!