"எங்க ஊரிலிருந்து ஒன்றறை கி மீ தூரம் உள்ள பக்கத்து ஊரில் ஊ.ஓ.ந.நி.பள்ளிகூடத்தில்தான் படித்தேன்! என்னுடன் பலரும் எங்க ஊரிலிருந்து படித்துவந்தோம்!
பள்ளிக்கூடம் இரண்டு கட்டடத்துடன்தான் இயங்கிவந்து! ஒரு கட்டம் காமராசர் காலத்து கட்டடம் !இன்னென்று பஞ்சாயத்து தலைவரின் முயற்சியால் நிதி வசுல் மூலம் கட்டியது
இந்த கட்டடம் என்பதும் சுற்றிலும் சுவருடன் கதவு சன்னல் ஏதுமில்லை தரைக்கும் மணல்தான்
பக்கத்து ஊரிலிருந்து சீனிவாசன் என்ற ஆசிரியர்தான் மூன்றாம் வகுப்பு வாத்தியார்! நானும் எங்க ஊர் என் வயது பசங்களும் அடக்கம்
சீனிவாசன் வாத்தியார் ஒல்லியான உடம்புடன் நெடு நெடு உயரத்துடன் நல்ல சிகப்பாவும் இருப்பார்! களையான முகத்தில் கண்கள் மட்டும் மிளகாய் பழமாதிரி செக்கசெவேல்னு இருக்கும்
காலையில் வகுப்புக்கு வரும்போதே புல் சாராய மப்புடன் வருவார்! பள்ளி முடிந்து வீடு போகும் போதுகூட போதை கண்களில் மிச்சமிருக்கும்!
வகுப்புக்கள் தொடங்கியதும் ஒரு அரைமணி நேரம் பாடம்நடத்துவார் !அவர் போதையில் நடத்துவது எங்களுக்கு ஒன்றும் புரியாது அல்லது விளங்காது!
போதை தலைக்கு ஏறியதும் "டேய் படிங்கடா "என்று சொல்லிவிட்டு மேசைமீது தலைவைத்து குறட்டை விடுவார்!
அதற்குப்பிறகு நாங்களும் மணற்தரையில் பாண்டி கிச்சுதாம்பலா அப்படினு பல விளையாட்ட புழுதி பறக்க விளையாடுவோம்!
அப்பபப்ப தலைய தூக்கிபாத்து "டேய் சத்தம் போட்டு தொலையாம இருங்கடா "என்பார்
மதிய உணவுக்கு பின் இதே கதைதான்
ஆனால் அவர் தூங்கும் சமயம் நாங்க அவர் காலை பிடித்துவிட வேண்டும்!
மதியம் சாப்பிட்டதும் எங்களுக்கும் தூக்கம் வந்துவிடும்!
தினம் தொடரும் இந்த கால் பிடிக்க ஒரவர் பின் ஒருவராக சுழற்சி முறையில் எங்களுக்கு பணி ஒதுக்குவார்!
அப்படித்தான் அன்று எனக்கும் எங்க ஊர்காரன் வேலுசாமிக்கும் கால் பிடிக்கும் பணி வந்தது !
வாத்தியார் வசதியாக மேசைக்கடியில் காலை நீட்டி மேசைமேல் தலைவைத்து தூங்க
நானும் வேலுச்சாமியும் காலை அமுக்கிகொண்டிருந்தோம்
அமுக்க அமுக்க எங்களுக்கும் துக்கம்வந்து தூங்கிப்போனோம்
என்னைவிட வேலுச்சாமி பயங்கர கருப்பாக இருப்பான் சரியான முரடன் வேறு!
நாங்க ஒரு நொடி கால அமுக்கலனா கூட வாத்தியார் காலை உதறி ஞாபகப்படுத்துவார்
மீண்டும் அமுக்க வேண்டும் மீண்டும் தூக்கம் மீண்டும் கால் உதறல்!
நான் எப்படியோ தூக்கத்த கட்டுபடுத்தி அமுக்கிகொண்டிருந்தேன்!
வேலுச்சாமி தூங்கி தூங்கி விழுந்தான்
நானும் "அடேய் தூங்காதடா "என்று சொன்னேன்!
என் பேச்சையும் மீறி தூங்க. தூக்கம் கலைந்த வாத்தியாருக்கு கோபம் வர
வேலுச்சாமியை ஓங்கி நெஞ்சில் ஒரு உதை விட்டார்!
தூக்க கலக்கத்தில் எகிறி விழுந்த அவன் பெரும் அழுகையுடனும் சீறும் சினத்துடனும் வாத்தியாரை பார்த்து
"ஏன்டா உதைச்ச. பு மவனே "என கத்த மற்ற வாத்தியார்களும் வந்தார்கள்
வேலுச்சாமி அழுகையுடன் "இப்ப பாருடா "என்றவன் பையை தூக்கி கொண்டு ஓட்டம் பிடித்தான் தன் அப்பா வீரசிங்கத்திடம் சொல்ல
வீரசிங்கம் புல்லட்டில் வந்து இறங்கினார்
மொத்த பள்ளிக்கூடமும் கலகலத்து பார்த்தன
என்ன நடந்தது தெரியுமா!
நன்றி மீதிய நாளைக்கு சொல்றேன்!!
மீதி நாளைக்கா
ReplyDeleteகாத்திருக்கிறேன் நண்பரே
நாளைக்கா.....????சரி.....நண்பரே....
ReplyDeleteநாளைக்கா.....????சரி.....நண்பரே....
ReplyDeleteபுஸ் வாணமோ!
ReplyDeleteநாளையும் வருவேன் ...
ReplyDeleteஇப்படியும் சில வாத்தியார்கள்.
ReplyDelete