""அந்த கப்பலும் பாத்ததில்ல ...
கடலும் பாத்ததில்ல ....
ஏரோபிளான் பாத்ததில்ல ...
வானம் பாத்த மனுச நாங்க!!! ""
""ஆள்ற மவராசி யாருனு ...
கேட்டதுல்ல...
அவ ராசியோ என்னமோ...
அஞ்சு வருசம் மழையுமில்ல ...!!
""எத்தினி காசுல திட்டம் ...
அது சேரல எங்கள மட்டும் ....
வெவசாயத்துக்கு ஒரு ஆபிசராம் ,...
எம்பது வயசாச்சு எனக்கு ,...
வெளங்காத பயல பாத்தில்ல நானும் ...!!!
""இங்க மழ பேஞ்சா ....
மனசு குளிரும் வவுறு நெறையும்!!
பட்டணத்துல்ல கொசு வரும்னு ...
புலம்பிறிங்க ....
இந்த அநியாத்த என்ன சொல்ல..
""வச்ச வெள்ளாம வீடு வராம ...
ஒருநாளும் ,..
வக்கனய தின்னதில்ல...
நிம்மதிய நித்திரயுமில்ல...!!
""கும்மி அடிச்ச ...
குமரிக எல்லாம் ...
கூடி கூடி சீரியல் பேசுதிங்க ....
ஆடு மேய்ச்ச ...
பயலுக எல்லாம் ....
ஆண்ராய்டு கேக்குதிங்க ...!!
விஞ்ஞான வளர்ச்சி ...
வெவசாயத்துக்கு வீழ்ச்சி ,!!
""மூனு போகம் விளஞ்சதல்லாம்
இப்ப முள்ளுகாடா ஆய்டுச்சு ,...
வேல கேட்க எங்க விதியாச்சு!!!
""நீங்க இங்க வாழ வரவேணாம் ,
எப்படி வாழ்றேம்னு பாக்க வாங்க!!!
நன்றி!! உங்கள் கருத்துகளை கூறுங்கள் நன்றி! !!