""பஞ்சு சுமந்த ....
பருத்தி காடு ....
இப்ப ....
பந்து அடிக்கிற....
மைதானமாச்சுங்க....!!
""வயிறு முட்ட...
தண்ணி குடிச்ச வயக்காடு...
இப்ப....
மசக்ககாரியாட்டம் ...
வாடி வதங்குதங்க ...!!
"கற்பம் தாங்கிய...
கம்பு காடு ....
இப்ப ,..
தரிசாச்சுங்க ....!
"கருது சுமந்த களம் ...
இப்ப...
கான்கிரிட் வீடாச்சுங்க ....!!
"சோளம் தின்ன...
குருவி கூட்டமல்லாம் ...
இப்ப...
முழிபிதுங்கி ஓடிருச்சுங்க ...!!
"நெல்லு கட்டு சுமக்க....
கூடின கூட்டம் ...
இப்ப....
கூப்பன் கடையில
கூடுதுங்க ...!!
""அரிசி பருப்பு ...
விளவிச்சவனுக்கு ....
அரசு கொடுத்த பரிசு ...
"அய்யோனு சொல்லகூட...
ஆளில்லாத அவலம் தாங்க .,!!
"நீங்க இங்க வாழ வரவேணாம் ..
எப்படி வாழறேம்னு பாக்க வாங்க ....!!