""பால் தட்டுப்பாடு ஏற்படும் -செய்தி
"மாடுக என்னிக்கும் அடம்பிடிச்சதே இல்லங்க!
"இந்த மனுஷ பயதான் அடம்பிடிக்கிறான் !
""நகை போடாமல் இருப்பதே மேல் (Male )
"எப்பவும் போட்டுகிட்டே இருப்பது பீமேல் (Female)
"வெளங்காதவனுங்க வெங்காயத்துக்கு போராடினாங்க!
இந்த பருப்பு உளுந்து உங்க கண்ணுக்கு தெரியலையா??
"பருவ மழையை நம்பி பத்துலட்சம் ஏக்கர் -செய்தி
"மீதி ஏழு கோடி என்பது லட்சம்பேரு பல "தண்ணிய நம்பி "
"கண்ணுக்கு மை வச்சா பெண்ணுக்கு அழகு
"விரல்ல மை வச்சா தமிழ் நாட்டுக்கே அழிவு
"சுங்க சாவடியில நிக்கிறதால டீசல் வீணாகுதாம்??
நான் கேக்குறேன் எதுக்குயா? அங்க நிப்பாட்டுறிங்க!
வீட்டூல இடமில்லயா ?
தீவாளி வர்ற நேரத்துலதான் டீசல் வீணானது தெரிஞ்சதா??
எப்படியோ பதுக்கி வச்ச சரக்க கொள்ளையா சம்பாதிச்சுடலாம்!!
"மனித வளம் நிறைந்தது தமிழகம் -அமைச்சர்
"உண்மைதானுங்க, சிறிசு பெரிசு "னு எல்லோரும் குடிச்சு உங்களை நல்லா வளமா வச்சிருக்கோம்ல?
கைக்குழந்தையுடன் பிச்சை எடுக்கிறார்கள் ?
நாம யாரு கண்ணு தெரியாதவனுக்கு காலணா தரமாட்டோம் ,இதுல கைக்குழந்தைக்கு கப்பலா தருவோம்??
"புலி "க்கு வரியில்லையாம்?
வரிகுதிரை பார்த்திருக்கேன்?
இந்த வரிப்புலி பார்த்துரிக்கீங்களா??
பார்த்த சொல்லுங்க!!
கடுப்பாகி கன்னா பின்னானு எழுதிட்டேன்
நன்றி!!