""வணக்கம்
செய்திகள் வாசிப்பது வீணாப்போன வீரமுத்து ..
"குளத்துபாளையத்தை சேர்ந்த குனசீலன் குளத்தில் குளித்து கொண்டிருந்த போது கோமனத்தை காணவில்லையாம், அதை கண்டுபிடித்துதருபவர்களுக்கு கோமனத்தில் பாதி பரிசாக தரப்படும்
"திருச்சி கரூர் நெடுந்சாலையில், 80கிமீட்டர் வேகத்தில் எதிர் எதிர் வந்த இரு கார்கள் மோதிக்கொண்டதில், கார் மட்டும் பாப்புலர் அப்பளமானது அதில் பயனம்செய்தவர்களுக்கு ஒன்றும் ஆகவில்லை? காரணம் அது பொம்மை கார்களாம்?
"சுமதி என்பவரும் பூபதி என்பவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனராம் காதலித்த விசயம் இருவீட்டாருக்கும் தெரிந்து பயங்கர காமெடி ஆகிவிட்டதாம், இந்த அவமானம் தாங்காத காதல் சோடிகள் இருவரும் நேற்று முன்தினம் அழுதுவாறே திருமணம் செய்தார்களாம், இந்த அதிசிய சம்பவம் அப்பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது
"தூங்கிகொண்டிருந்த இன்ஸ்பெக்டரின் மகனை நான்கு கொழுத்த கொசு கடித்துவிட்டதாம், அதனை பிடிக்க எட்டு தனிப்படை அமைத்து தமிழகம் முழுவதும் தேடுதல் வேட்டையில் அதிரடி சிரிப்பு படை இறங்கியுள்ளது
"நாலறை ஆண்டுகளாக மக்களுக்கு ஓடியாடி வேலை செய்து களைத்துவிட்டதால் தமிழக முதல்வர் ரெஸ்ட் எடுக்க சென்றிருப்பதால் குனிந்த அமைச்சர்களுக்கு சில நாட்களாவது ஓய்வு கொடுக்க விரும்புவதாக அரசு செய்திகள் தெரிவிக்கிறது,
"வழக்கம்போல மழை வரும் என்று விவசாயிகள் நம்புங்கள், வழக்கம்போல ஏழைகளுக்கு தங்க விலையில் மாற்றம் இல்லை, வழக்கம்போல மீண்டும் செய்திகள்..
மீண்டும் செய்திகள் வரும் ஞாயிறு அன்று ,வணக்கம் நன்றி!!