"நாம் வெள்ளைகாரர்களிடமிருந்து சுதந்திரத்தை மட்டுமா ?வாங்கினோம், அவர்கள் விட்டுச்சென்ற கட்டடங்கள், சாலைகள், பாலங்கள் கூடவே இலவச இணைப்பாக ஆங்கிலத்தையும் பெற்று
இன்று வரை தமிழை கொஞ்சம், கொஞ்சமாக ,அழித்துக்கொண்டுவருகிறோம்! என்பதுதான் அப்பட்டமான உண்மை! கணினியை கண்டுப்பிடித்ததும் அவர்கள்தான்! அந்த கணினியில் நம் தமிழைப் , புகுத்தி அழகுபார்த்து,
வளர்ப்பதற்கு பெரும் முயற்சி எடுத்து வருகிறோம் என்பதே நிதர்சனம்!
அன்று என் பையனுக்கு ஆங்கிலமே தெரியாது? என்ற நிலை மாறி இன்று என் பையனுக்கு தமிழே தெரியாது என்ற நிலைக்கு வந்துவிட்டோம! இப்படி சொல்வதுதான் கெளரவம், பெருமை, சாதனை, என்று படித்தவர் படிக்காதவர் பாகுபாடு கிடையாது!
தமிழக அரசில் அரசு வேலையில் இருப்பவர்கள்
13 ,00000) பதிமூன்று இலட்சம் பேர்! இவர்களின் குழந்தைகள் எல்லாம் அரசு பள்ளியில்தான் படித்து வருகிறார்கள் என்று யாராவது கூறமுடியுமா? கைநிறைய சம்பளம் வாங்கும் இவர்கள் அரசு பள்ளியில் சேர்த்தால் அவர்கள் கெளரவம் என்னாவது, சமுகத்தில் அவர்கள் பெருமை என்னாவது?? 2013-14ஆண்டில் அரசு தொடக்கப்பள்ளிகள் 65.16 சதவிகிதமாகவும் தனியார் தொடக்கப்பள்ளிகள் 34.84 சதவிகிதமாகவும் அதிகரிப்பதற்கு யார் காரணம்? தற்போது அரசும் தொடக்கப்பள்ளிகளில் ஆங்கில கல்வியை கொண்டுவந்து விட்டது? எதற்காக ?எல்லா மக்களுக்கும் , தனியார் மோகம் பிடித்து ஆட்டுவதால்
தமிழ் பள்ளிகள் தரமிழந்து விடும் என்ற ஆதங்க அரசியல் காரணம்தான்! எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றால் தனியார் பள்ளிகளை அனைத்தும் தடை பண்ண வேண்டியதுதானே? மாட்டவே மாட்டார்கள்! ஒவ்வொரு தேர்தலுக்கும்கோடி கோடியாக அள்ளிதரும் அட்சய பாத்திருத்தை ஆட்சியாளர்கள் புறக்கணிப்பார்களா? மக்களும்தான் விட்டுவிடுவார்களா? பள்ளி நடத்தும் பண முதலைகள் வேடிக்கைபார்ப்பார்களா!!!
இந்த நிலையில் தமிழை எப்படி வளர்ப்பார்கள்??
இருக்கவே இருக்கிறார்கள், வறுமை கோட்டிற்கு கீழ் இருப்பவர்கள்! நம் சமுகத்தில் பணம் உள்ளவர்களுக்கு ஒரு பள்ளிக்கூடத்தையும, சாதாரணமானவர்களுக்கு ஒரு பள்ளிக்கூடத்தையும் ஏற்படுத்தி மிக சிறப்பாக "தமிழை வளர்ப்பது நாம் தான் என்பதில் பெருமைபட்டு கொள்ளலாமா???
"தமிழ் படிக்க அரசு பள்ளிகளுக்கு செல்லும் நம் மாணவர் விகிதம் 2013-14ஆண்டுகளில்
41.06சதவிகிதம் மட்டுமே! அதே தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் 58.94
சதவிகிதம்! நினைத்துப்பாருங்கள் எதில் நாம் வளர்ச்சி அடைகிறோம்??
வளர்ந்து வரும் நவீன காலத்தில் கிராமம் மட்டும் விதிவிலக்கா? இல்லை !அவர்கள் விவசாயம் பாதாளத்திற்கு போனாலும் அவர்கள் குழந்தைகள் பெரும்பாலும் தனியார் பள்ளிகளுக்குதான் அனுப்புகிறார்கள்? காரணம், எங்கள் தலைமுறைதான் காடு கரடு என்று அலைந்து திரிகிறோம்! எங்கள் பிள்ளைகளாவது நன்றாக, படித்து அரசு வேலைக்கு போகாவிட்டாலும், தனியார் நிறுவனத்திலாவது, கைநிறைய சம்பாதிக்க தனியார் கல்வியே சிறந்தது என்கிறார்கள்!
தமிழை மட்டுமே படித்தவர்களுக்கு தமிழ்நாட்டில் வேலை கிடைக்குமா?? தமிழை மட்டுமே படித்தவர்கள் வெளிநாடுகளில் வேலைக்கு செல்லமுடியுமா?இல்லை என்பதுதான் நாம் உணர வேண்டிய உண்மைகள்.
தற்சமயம்தான் கிராமப்புறங்களுக்கு இணைய வசதி ஏற்படுத்துவதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது!
கிராமப் பொருளாதாரம் உயர்ந்தால்தானே கிராம மக்கள் முன்னேறுவார்கள் .
இனிவரும் காலங்களில்தான் அவர்கள் கணினியை கற்க வேண்டும்! அதன்பிறகுதான்
கணினியில் தமிழ் வளர்ச்சியை காணமுடியும்!
அகில இந்தியா IIM.IIT போன்ற நுழைவுத் தேர்வுகளில் தமிழை மட்டும் படித்தவர்கள் எத்தனை பேர் வருடா வருடம் உள்நுழைகிறார்கள்! மிக மிக குறைந்த அளவுதான்!! சுதந்திரம் வாங்கி இத்தனை ஆண்டுகள் கடந்தும்
நம் நீதிமன்றங்களில் தமிழை வழக்கு மொழியாக்க, முடியவில்லை! நீதிபதி தமிழன்!! வழைக்கறிஞர் தமிழன்! வழக்கு தருபவன் தமிழன்! வாதாடுவதோ,தீர்ப்பு வழங்குவதோ ஆங்கிலத்தில், இதில் எவ்வளவு முரண்பாடுகள் பாருங்கள்!!
"தமிழை புது தலைமுறைகளுக்கு கற்றுத்தரும் அரசு ஆசிரியர்கள் விகிதம் 2013-14 ஆண்டுகளில் 42.91சதவிகிதம்! அதே அனைத்து பாடங்களையும் ஆங்கிலத்தில் கற்றுதரும் தனியார் ஆசிரியர்கள் விகிதம் 57.09சதவிகிதம்! எதில் நாம் அதிக வளர்ச்சியை எதிர்பார்க்கின்றோம்
இன்றைய இளைய சமுதாயம் ஆண்ராய்டு கைபேசிகளுக்கு அடிமையாகிவிட்டார்கள்!! அதில் எத்தனை பேர் தமிழில் மட்டும் "குறுஞ்செய்தி, முகநூல் செய்தி அனுப்புகிறார்கள்! கேட்டுப்பாருங்கள் தமிழில் எழுதுவது மிக கடினம் என்பார்கள்! தமிழ் வளர்த்த பல சான்றோர்களை அவர்கள் நினைவு நாளில் மட்டும் நினைத்துவிட்டு பிறகு மறந்து விடுகி றோம்!இங்கு தமிழன் தமிழில் , பேச தயங்குகிறான் என்பது அவலமல்லவா?
"இணையத்தில் எழுதுவது தமிழன், படிப்பது தமிழன் என்ற
நிலை இருக்கும் சூழலில் வலைப்பதிவர் திருவிழா "என்றில்லாமல் தமிழ்ப்பதிவர் திருவிழா என்று இருப்பின் நம் தமிழுக்கு நம்மால் முடிந்த சிறு
பெருமையாக இருக்கும்!
பல வலைப்பதிவர்கள் எழுதிவந்தாலும் அதில் எத்தனை நபர்கள் பெயரைக்கூட தாய் தமிழில் வைத்திருக்கிறார்கள்.
இங்கு பிற மொழி கலப்பில்லாமல் பேசவும் முடியாது, வாழவும் முடியாது, என்பதுதான்
உண்மை நிலவரம்!!
மூன்று வயதில் முழுக்க பிற மொழிகளை ,புகுத்தி அறிவு வளர்த்து, கைநிறைய, வருமானம் கிடைத்தவுடன், முப்பது வயதுக்கு மேல் தான், பல தமிழர்களுக்கு ,தமிழ்மொழியின் மீது பற்றும் பாசமும் ஞானமும் வருகிறதோ?எனும் ஐயம் வருகிறது.
கணினியில் தமிழ் வளர்ச்சி என்பது ஒரு புறமாக இருந்தாலும் "தரணியில் அழியும் தமிழை வளர்ப்பதே நம்
தமிழுக்கும் தமிழனுக்கும் அடுத்த தலைமுறைக்கும் செய்யும் உண்மையான பங்களிப்பாகும்!!
தமிழ் வளர்வதும் வளர்ப்பதும் நம் கைகளில்தான் உள்ளது!!
தமிழை ஊக்கப்படுத்து வோம்! தமிழனையும் ஊக்கப்படுத்து வோம்
(புள்ளி விவர ஆதாரங்கள் NUEPA 2012-14)
"இப்படைப்பு " வலைப்பதிவர் திருவிழா -தமிழ்இனணய கல்வி கழகம் நடத்தும் "மின்தமிழ் இலக்கிய போட்டிகளுக்காக எழுதப்பட்டது
வகை (1)
இவை என் சொந்த படைப்புதான் என்றும் வேறு எங்கும் வெளியானதல்ல என்றும் முடிவுகள் வெளியாகும்வரை வெளியாகாது என்றும் உறுதியளிக்கின்றேன்!!
நீங்கள் சொல்லியிருப்பதெல்லாம் உண்மைதான்
ReplyDeleteபரிசு பெற வாழ்த்துகள்
வருக! ஐயா உண்மையாக வாழ்த்தியமைக்கு மிக்க மகிழ்ச்சி! நன்றி
Deleteசிந்திக்க வேண்டிய விடயங்களை சிறப்பாக புள்ளிவிபரப் புலியாக பகிர்ந்து தமிழிலின் இன்றைய நிலையை அலசிய கட்டுரைப்பகிர்வு சிறப்பு! போட்டியில் வெற்றி வெற வாழ்த்துக்கள் சகோ!
ReplyDeleteவருக சகோ! சிறப்பாக வந்து சிறப்பித்தமைக்கு சிறப்பான நன்றிகள் பல
Deleteகட்டுரைக்கு அதிகம் நேரச்செலவை செய்து இருப்பதை பகிர்வில் அறிய முடிகின்றது! வாழ்த்துக்கள் தேடலுக்கு!
ReplyDeleteஆமாம் சகோ இரு நாட்கள் யோசித்து யோசித்து எழுதினேன்! வாழ்த்தியமைக்கு நன்றிகள் சகோ
Deleteவணக்கம் நண்பரே நல்ல அலசல் சாட்டையடிகளுடன் தமிழை வளர்க்க நினைக்கும் நம்மைப் போன்ற சிலர் இருப்பது அறிந்து மகி்ழ்கிறேன் போட்டியில் வெற்றி பெற எமது மனமார்ந்த வாழ்த்துகள்
ReplyDeleteதாங்கள் தமிழ் மண ஓட்டுப்பட்டையை இணையுங்கள் தங்களது படைப்புகள் பலருக்கும் சென்றடைய அது உதவும் நன்றி
வணக்கம் நண்பரே நல்ல அலசல் சாட்டையடிகளுடன் தமிழை வளர்க்க நினைக்கும் நம்மைப் போன்ற சிலர் இருப்பது அறிந்து மகி்ழ்கிறேன் போட்டியில் வெற்றி பெற எமது மனமார்ந்த வாழ்த்துகள்
ReplyDeleteதாங்கள் தமிழ் மண ஓட்டுப்பட்டையை இணையுங்கள் தங்களது படைப்புகள் பலருக்கும் சென்றடைய அது உதவும் நன்றி
வருக நண்பரே! தங்கள் கருத்து மிக்க கருத்துக்கள்! இனிய வருகைக்கும் மனமார்ந்த வாழ்த்திற்கும் நன்றிகள் பல! ஓட்டுப்பட்டையில் கூடிய விரைவில் இனணத்து விடுகிறேன் நன்றி நன்றி!!!
Deleteநல்ல கட்டுரை! போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் பல
Deleteமிக்க மகிழ்ச்சி அண்ணா
ReplyDeleteமின்தமிழ் இலக்கிய போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!!!
ReplyDeleteவருக நண்பரே!!
Deleteமிக்க நன்றிகள் பல
மின்தமிழ் இலக்கிய போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!!!
ReplyDeleteதலைப்பில் இருப்பது - கண்ணோட்டமா? கண்னோட்டமா? அன்பு கூர்ந்து சரிபார்க்கவும். (ஒரு கண்ணில் மூன்று சுழி, மறு கண்ணில் இரண்டு சுழி இருக்காதல்லவா?) ஆனாலும் நீங்கள் தந்த தலைப்பை அப்படியே எடுத்துப்போட்டுவிட்டார் நண்பர் தனபாலன், அவர் செய்தது சரிதானா? ஆமாம்..சரிதான். உங்கள் தலைப்பில் தலையிட நாங்கள் யார்? ஆனால் நீங்கள் தான் இதுபற்றி முடிவெடுக்க வேண்டும் கரூர் பூபகீதரே!
ReplyDeleteஅருள்கூர்ந்து மன்னிக்கவும் அய்யா! தவறை திருத்திக்கொண்டேன்! மிக்க நன்றி
ReplyDeleteபுள்ளி விவரங்களுடன் கூடிய நல்ல தகவல்கள். வாழ்த்துக்கள்.
ReplyDeleteவருக நண்பரே! தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்தியமைக்கும் நன்றிகள் பல நன்றி!
Deleteதமிழின் வளர்ச்சிக்கான தடைகள் பற்றிய தங்களின் ஆதங்கத்தினை கிராமியக் கண்ணோட்டத்தில் கொட்டியுள்ளமை அருமை. ஆக்கப்பூர்வமான செயலாக்கம் செய்திட ஒன்றிணைவோம்.
ReplyDeleteவெற்றிபெற வாழ்த்துகள்.
வணக்கம் வாருங்கள் ஐயா!! தங்களின் வருகைக்கு மிக்க மகிழ்ச்சி! உண்மையில் இது என்னுடைய ஆதங்கம்தான் ஐயா! தங்களின் வாழ்த்தை சிறம்தாழ்ந்து ஏற்றுக் கொள்கிறேன் நன்றி ஐயா!!!
Deleteநல்ல படைப்பு.
ReplyDeleteவாருங்கள் முனைவர் ஐயா!! தங்களின் இனிய வருகைக்கு முதல் நன்றிகள்!!
ReplyDeleteமரியாதைக்குரிய பூபகீதன் ஐயா,அவர்களே வணக்கம்.
ReplyDeleteதங்களது கட்டுரையில் தமிழை நம்மவர் வதைக்கும் நிலை பற்றி தெளிவாக்கியுள்ளீர். உதாரணமாக,அன்று என் பையனுக்கு ஆங்கிலமே தெரியாது? என்ற நிலை மாறி இன்று என் பையனுக்கு தமிழே தெரியாது என்ற நிலைக்கு வந்துவிட்டோம! என்ற வரி ஒன்றே போதுமானது.இன்றைய தமிழின் அவலநிலைக்கான ஆதாரம்...வாழ்த்துக்கள். இன்னும் சாதனைகள் பல புரிய வேண்டும் என ஆவலுடன் அன்பன்,
C.பரமேஸ்வரன், 9585600733
http://konguthendral.blogspot.com
சத்தியமங்கலம்,
ஈரோடு மாவட்டம் 638402
வணக்கம் வாருங்கள் மரியாதைக்கூறிய அய்யா அவர்களே! தங்களை வரவேற்ப்பதில் மிக்க மகிழ்ச்சி! இனறைய தமிழுக்கும் தமிழனையும் கண்டு வெதும்பிய வரிகள் தான் இவை! தங்கள் இனிய வருகைக்கும் இனிய வாழ்த்திற்கும் நன்றிகள் பல
DeleteNanbara arumai vaalthukal.
ReplyDeleteவாங்க நண்பரே! முதல் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் பல
Deleteஉண்மைதான் , முழுக்கத் தமிழ் கல்வி சாத்தியமா என்று தெரியவில்லை..ஆனால் தமிழ் கட்டாயம் கற்க வேண்டும் என்ற நிலைக்காவது போக வேண்டும்.. நல்ல அலசல் சகோ, வாழ்த்துகள்
ReplyDeleteவாங்க சகோ! தமிழை சாத்தியமாக்க நாம் எல்லோரும் சிறிதாவது அதன் பெருமையை உணர்ந்தால் போதும் என்பதே என் கருத்து! தங்கள் இனிய வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் பல
Delete//....பல வலைப்பதிவர்கள் எழுதிவந்தாலும் அதில் எத்தனை நபர்கள் பெயரைக்கூட தாய் தமிழில் வைத்திருக்கிறார்கள்...
ReplyDeleteஇந்த வரிதான் நேரே உள்சென்று குத்துகிறது நண்பரே. ப்ளாகர் சுயகுறிப்பை வைத்திருப்பவர்களைவிட கூகுள்+ சுயகுறிப்பை வைத்திருப்பவர்கள் ஆங்கிலத்தில் வைத்திருக்க காரணம் தமிழ்ப் பதிவர் அல்லாத நண்பர்களும் இருப்பதால்தான். பல மொழி நண்பர்களும் இருக்கும் சமூக வலையில் தம் நட்பு வட்டத்தில் அனைவருடனும் தொடர்பில் இருக்கவே ஆங்கிலத்தில் வைத்திருக்கிறார்கள் என கருதுகிறேன். இதே காரணத்திற்காகவே எனது சுயகுறிப்பில் தமிழில் நான் வலைப்பூ எழுதுவதைக் கூட ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறேன்.
என்ன கொடுமை.