"ஏர் புடுச்ச கையெல்லாம் ..
ஏசி ரூம் "க்கு ஏங்குதிங்க ..
பஞ்சம் பிழைக்கும் பாமரனுக்கு. .
பைபர் கேபிள் எதுக்குங்க ..!
"களத்து மேடு கவலை மறக்க ...
கண்டகண்ட "சீரியல் "பேசுறாங்க ..
கழைகெத்தியும் கருக்கருவாளும் .
கண்காட்சிய ஆக்கிட்டாங்க ...!
"சீமத்தண்ணு ஊத்தற நாளு ...
திருவிழா கூட்டம்தாங்க ..
அடுப்பு விறகுக்கும்..
அஞ்சு வருசம் மழையில்லங்க ..!
"கைநாட்டுக்காரன் காடு கரையில ..
"கம்பெனி வேண்டாங்க ...
கால் வயித்து கஞ்சிக்கும் ...
கையோந்த வைக்காதிங்க ...!!
"அஞ்சு மாச சிசுவும்
"ஆண்ராய்டு "ல விளையாடுதங்க..
அறிவு வளருமா..
அநியாயம் பண்ணாதிங்க ...!
"உண்மை பண்பாடு -அது
உழவன் உள்ளத்தில் கண்டு ..
உலகறிந்த வலைப்பதிவர் -மாநாட்டில் ..
உரைத்துச் சொல்லுங்க நின்று ..!!!
இப்படைப்பு வலைப்பதிவர் திருவிழா 2015 -தமிழ் இணைய கல்விகல்வி கழகம் இணைந்து "மின்தமிழ் இலக்கிய போட்டிகள் 2015 க்காக எழுதப்பட்டது!
வகை (4) புதுகவிதை போட்டிகள்! வளர்ந்து வரும் உலகில் பண்பாட்டின் தேவை!
இவை என் சொந்த படைப்புதான் என்றும் இதற்கு முன் எங்கும் வெளியானதல்ல என்றும் முடிவுகள் வெளிவரும்வரை வேறெங்கும் வெளிவராது என்றும் உறுதியளிக்கின்றேன்
-கரூர்பூபகீதன் -
வணக்கம்
ReplyDeleteஅருமையான ஆக்கம்
வெற்றிபெற வாழ்த்துக்கள்
வருக! சகோ! தங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் பல!!!
Deleteதாங்கள் வெற்றி பெற வாழ்த்துகள் !நண்பரே..........
ReplyDeleteதாங்கள் வெற்றி பெற வாழ்த்துகள் !நண்பரே..........
ReplyDeleteவருக! நண்பரே! தங்கள் வாக்கு பலிக்கட்டும் நன்றிகள் பல
Deleteஉண்மை;கவிதை அருமை.வெற்றி பெற வாழ்த்துக்ள்
ReplyDeleteவருக அய்யா! இனிய வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் பல
Deleteகழைகெத்தியும் கருக்கருவாளும் .
ReplyDeleteகண்காட்சிய ஆக்கிட்டாங்க ...!
மிகவும் ரசித்தேன் வேதனையோடு நண்பரே... வெற்றி பெற எமது வாழ்த்துகள்
வருக நண்பரே! கண்காட்சிய ஆனதில் யாருக்கும் வருத்தமில்லை! உழவனை தவிர! நன்றிகள் பல
Deleteகழைகெத்தியும் கருக்கருவாளும் .
ReplyDeleteகண்காட்சிய ஆக்கிட்டாங்க ...!
மிகவும் ரசித்தேன் வேதனையோடு நண்பரே... வெற்றி பெற எமது வாழ்த்துகள்
நண்பரே தங்கள் வாழ்த்திற்கு நன்றிகள் பல
Deleteகழைகெத்தியும் கருக்கருவாளும் .
ReplyDeleteகண்காட்சிய ஆக்கிட்டாங்க ...!
வேதனையை சொல்லிய வரிகள் சிறப்பு. வாழ்த்துகள் சகோ.
வருக சகோ! தங்கள் கருத்தை பகிர்ந்தமைக்கும் வாழ்த்துயமைக்கும் நன்றிகள் பல!!
ReplyDeleteகவிதை அருமை வெற்றி உமக்கே .
ReplyDeleteவருக சகோ! வாழ்த்திற்கு மிக்க நன்றிகள் பல
Delete// கழைகெத்தியும் கருக்கருவாளும் .
ReplyDeleteகண்காட்சிய ஆக்கிட்டாங்க ...!//
//
"கைநாட்டுக்காரன் காடு கரையில ..
"கம்பெனி வேண்டாங்க ...
கால் வயித்து கஞ்சிக்கும் ...
கையோந்த வக்காதிங்க ...!!//
உழவிற்கு நாம் செய்யும் கேட்டின் வேதனை!
அருமை சகோ, வெற்றிபெற வாழ்த்துகள்
வருக. சகோ! தங்கள் இனிய வருகைக்கும் பிடித்த வரிகளை பகிர்ந்ததற்கும் வாழ்த்தியமைகுகும் நன்றிகள் பல!!
Deleteசிறப்பா இருக்கு! வாழ்த்துக்கள்!
ReplyDeleteவருக நண்பரே! தங்கள் வருகைக்கும் சிறப்பு வாழ்த்திற்கும் நன்றிகள் பல
Delete>> கைநாட்டுக்காரன் காடு கரையில
ReplyDeleteகம்பெனி வேண்டாங்க..
கால் வயித்து கஞ்சிக்கும்
கையேந்த வைக்காதிங்க!..
மனம் கனக்கின்றது.. விவசாயம் அழிந்து போனால்?... விபரீதம் தான்!..
வெற்றி பெற வேண்டும்.. வாழ்க நலம்..
வாருங்கள் அய்யா! தங்கள் வருகைக்கு மிக்க மகிழ்ச்சி!! நான் விவசாயி என்பதால கனத்துதான் போகிறது இருந்தும் என்ன செய்ய!!! நன்றி அய்யா தங்களின் வாழ்த்திற்கு
ReplyDelete