"மேல் காணும் படத்தில் உள்ளதுபோல் பரிமாறப்படும் உணவுப் பதார்த்தங்களை ஒருவரால் மீதம் வைக்காமல் சாப்பிடமுடியுமா? ஒருவர் எவ்வளவு பசியில் இருந்தாலும் உண்ணமுடியாது என்பதே உண்மை! அவ்வாறு மீதமாகும், அல்லது வீணாகும் உணவுப் பொருட்களினால் உண்டாகும் விபரீதம் பற்றி உங்களுக்கு தெரியுமா?
நம் ஆடம்பர ஆசையாலும், அலட்சியத்தாலும் உலகம் முழுவதும் ஆண்டுக்கு 10 இலட்சம் டன் சமைத்த உணவுப்பொருட்கள் குப்பையில்
கொட்டப்படுவதாக ஐநா சபையின் புள்ளிவிவரம்
அதிர்ச்சியளிக்கிறது!
ஒரு வேளை உணவுக்கூட , சரியாக கிடைக்காமல் அவதிப்படுபவர்கள் உலகம் முழுவதும் 140கோடி பேர்
சர்வதேச வறுமைக்கோட்டிற்கு கீழ் வசிப்பதாகவும் ஒரு புள்ளிவிவரம் அறிவிக்கிறது!
நாம் ஒவ்வொரும் ஒரு கைப்பிடி அளவு உணவினை சேமித்தால், பசி காரணமாக இறக்கும் 5வயதுக்குப்பட்ட சுமார் 90இலட்சம் குழந்தைகளை காப்பாற்றிவிடலாம்!
"தனிஒரு வனுக்கு உணவிலை எனில்
ஜகத்தினை அழித்திடுவோம் "-என்று உணவு கிடைக்காமல் வறுமையில் வாடுபவனை கண்டு பாரதி கவிஞன் பாடிய பாடல் இது! ஆனால்
இன்று மீதமாகும் உணவுப் பொருட்களால்தான் ஜகத்தினை அழித்துவருகிறோம், என்பதுதான் முகத்தில் அறையும் உண்மை.
1947ம் ஆண்டிண் உலக மக்கள் தொகை 300மில்லியன்கள்! இன்று 1210மில்லியன்கள்.
ஒருபுறம் பசியால் வாடுவதும் மறுபறம் விளைந்த தானியங்களும் காய்கறிகளும் டன் கணக்கில் யாருக்கும் பயன்படாமல் வீணாகின்றன! சமைக்கும்
உணவில் 3ல்ஒரு பங்கு குப்பைகளில் கொட்டப்படுகின்றன!
அவ்வாறு வீணாகும் உணவுப் பொருட்களினால் உண்டாகும் மீத்தேன் வாயுதான் பருவநிலை மாற்றத்திற்கு மிக மிக முக்கிய தீங்கு விளைவிக்கிறது!
காற்றில் கரியமில வாயு அதிகரித்து பசுமை விளைவில் மாற்றம் ஏற்படுவதால் பூமிக்கு அருகில் உள்ள வளிமண்டலம் வெப்பமடைவதே புவி வெப்பமாதல் என்கிறார்கள்!!
வீணாக்கும் உணவுப் பொருளாலும் ,காய்கறி பழங்கள் போன்ற பொருட்கள்
அழுகுவதாலும் ,காற்றில் நைட்ரஜன் ஆக்ஸைடு அதிகரிக்கும்!
வீடுகளில் பயன்படுத்தும் குளிர்சாதனப் பெட்டியிலிருந்து வெளிவரும் "குளோரோ ஃப்ளோரோ கார்பன் "என்ற வாயுவும் வளிமண்டலத்தை அதிகம் பாதிக்கின்றன.
வளிமண்டலத்தை அதிகம் பாதிக்கும் போது அமில மழை உண்டாக்க காரணமாகின்றன .
வெப்ப காற்றின் பருவநிலை மாற்றத்தினால் பலவிதமான நோய்கள் வரும்!
மீத்தேன் ,கரியமில வாயு நைட்ரஜன் ஆக்ஸைடு, ஆகியன ஒன்றாக இணையும் போது ஏற்படும் வேதிவினையின் காரணமாக பவளப்பாறைகள் நிறம் அழிந்துவிடும், அடிக்கடி வறட்சி உண்டாகும், காடுகளில் தீவிபத்து ஏற்படும், பனிப்பொழிவு உண்டாகும்!
மீத்தேன் அளவு அதிகமாக கடல் மட்டம் உயர்ந்து கடலோரப் பகுதிகளில் வெள்ளம் ஏற்படும்!
வாகனங்களால் ஏற்படும் பாதிப்பை காட்டிலும் விவசாயப் பொருட்களாலும் வீணாகும் உணவுப் பொருட்களாலும் உண்டாகும் மீத்தேன் வாயுவினால் ஏற்படும் பாதிப்பு மிக அதிகமாகும்.
மனிதனின் உணவுத்தேவையை பூர்த்திசெய்ய தினமும் பல்லாயிரக்கணக்கான தாவரங்களும் உயிரனங்களும் அழிக்கப்படுகிறது!
அதன் கழிவுகளை முறையாக பாதுகாப்பாக மறுசுழற்சி செய்ய முறையான வழிகள் ஏதுமில்லை
பருவநிலை மாற்றத்தினால் பல சிற்றுயிர்கள் முதல் மனிதன் வரை அதன் உணவுச் சங்கிலியில் மிதமிஞ்சிய மாற்றம் உண்டாகும்
100கிராம் பட்டு நூல் தயாரிக்க 1500பட்டுப்புழுக்கள் அழிக்கப்படுகின்றன.
நம் பணத்செருக்கின் பலனாக பல்வேறு விசேசங்களில் ஒருவர் சாப்பிடுவதற்கு ஐந்தாயிரம் செலவு செய்கிறோம்!அளவுக்கு அதிகமான உணவுப்பொருட்களை அறியாமையால் வீணடிக்கிறோம்!
அன்றைய காலங்களில் வருடம் மும்மாரி மழை பொழிந்து விவசாயிகளும் செழித்து வளர்ந்து வந்தார்கள்! இன்று பருவநிலை மாற்றத்தாலும் சுற்றுச்சூழல்,சீர் கேட்டாலும் வானம் பார்க்கும் சூழ்நிலையை உருவாக்கிவிட்டோம்,என்பதை நாம் அறிய வேண்டாமா?
இன்றைய நவீன யுகத்தில் , அசுர வளர்ச்சியில் "பழையசோற்றை பார்க்காத ,உண்ணாத "புதுத்தலைமுறைகளை அல்லவா உறுவாக்கிவருகிறோம்!
நாம் வீணாக்கும் ஒவ்வொரு உணவுப் பருக்கைக்குப் பின்னாலும் இந்த உலகம் பருவநிலை மாற்றத்தாலும் சுற்றுச்சூழலாலும் கொஞ்சம், கொஞ்சமாக அழிந்து வருகிறது, அழித்துவருகிறோம் என்பதை அறிந்து கொள்வோம்!
"உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத் தோரோ -என்பது சாத்தனார் வாக்கு,
உணவுக் கொடுக்கும் இந்த உலகுக்கு நம்மால் முடிந்த அளவு உயிர் கொடுப்போம் வாருங்கள்!
அளவாக சமைத்து மிதமாக உண்டு வளமாகமிருப்போம்!
(
படங்கள் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டவை)
இப்படைப்பு வலைப்பதிவர் சந்திப்பு தமிழ் இணைய கல்விக்கழகம் நடத்தும் மின்தமிழ் இலக்கிய போட்டிகளுக்காகவே எழுதப்பட்டது
வகை (2) சுற்றுச்சூழல்
இப்படைப்பு என் சொந்த படைப்புதான் என்றும் வேறு எங்கும் வெளியானதல்ல என்றும் முடிவுகள் வரும்வரை வெளியாகாது என்றும் உறுதியளிக்கிறேன்
அருமையான படைப்பு நண்பரே
ReplyDeleteவெற்றி பெற வாழ்த்துக்கள்
வருக! அருமை அய்யா! தங்களின் வாழ்த்திற்கும் வருகைக்கும் மிக்க நன்றிகள் பல
Deleteஅருமை நண்பரே படிக்கும் போதே குற்ற உணர்வு எனக்கும் சிறிதளவு வந்தது நல்லதொரு விடயத்தை முன் வைத்த இந்தப்பதிவு போட்டியில் வெற்றி பெறும் 80 எமது திண்ணமான எண்ணம் வாழ்த்துகள்.
ReplyDeleteவருக நண்பரே! உண்மைதான் நாம் ஒவ்வொருவரும் உணவின் மேன்மையை அறியவேண்டும்! தங்களின் இனிய வருகைக்கும் இனிய. வாழ்த்திறகும் மிக்க நன்றிகள் பல
Deleteஇணைப்பிற்கு மிக்க நன்றி அண்ணா!
ReplyDeleteபலர் பட்டினியாக இருக்கையில் சிலர் உணவை வீணாக்குவது குற்றம் அதன் மூலம் சுற்றுச்சூழலைக் கெடுப்பது அதை விடக் குற்றம்
ReplyDeleteவாழ்த்துகள் பூபகீதன்
வருக! அய்யா தாங்கள் சொன்னது மிக மிக அவசியமான அப்பட்டமான உண்மைகள்! வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றிகள் பல
Deleteசிந்திக்க வைக்கும் விடயம் சிறப்பான ஆதார குறிப்புக்கள். போட்டியில் வெற்றி மாலை வந்து சேர வாழ்த்துக்கள்.
ReplyDeleteவருக சகோ! இனிய வருகைக்கும் தங்களின் இனிய வாழ்த்திற்கும் நண்றிகள் பல
Deleteவலையில் தங்களின் மின்னஞ்சல் முகவரியை அல்லது தொடர்பு என எதையாவது பகிர்ந்தால் இன்னும் நேசக்கரம் நீட்டுவார்கள் வலையில் தொடர! இது என் ஆலோசனை மட்டுமே இதையும் படித்த பின் நீக்கினால் மகிழ்ச்சி!
ReplyDeleteவருக சகோ! தாங்கள் கூறிய ஆலோசனைகளை அடுத்த நிமிடமே செய்துவிட்டேன்! இதற்கு மிக மிக நன்றிகள் பல
Deleteபடித்தபின் எதற்காக அழிக்கவேண்டும் புரியவில்லை சகோ!
படைப்புகள் வந்து சேர இறுதி நாள் இன்றோடு முடிவடைகிறது... விரைந்து செயல்படுவீர்... போட்டியை ஊக்கப்படுத்தும் ஒரு பட்டியல்... காண்க... கருத்துரையிடுக... பகிர்க...
ReplyDeleteஇணைப்பு : → http://bloggersmeet2015.blogspot.com/2015/09/blog-post_30.html ←
நன்றி...
புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக...
அன்புடன் திண்டுக்கல் தனபாலன்
http://dindiguldhanabalan.blogspot.com
வருக அண்ணா! சிறப்பான பட்டியல் கண்டேன்! வாய்ப்பு கொடுத்த தமிழுக்கும் ஊக்கப்படுத்திய தங்களுக்கும் நன்றிகள் பல
Deleteஅறிவி-யல் சதானங்கள் எல்லாம் சாதரன மக்களுக்கு பயன்படுவதே இல்லை ...நண்பரே.......
ReplyDeleteஅறிவி-யல் சதானங்கள் எல்லாம் சாதரன மக்களுக்கு பயன்படுவதே இல்லை ...நண்பரே.......
ReplyDeleteஉண்மைதான் நண்பரே! கண்டுப்பிடிப்பவர்கள் எல்லாம் சாதரனமாணவர்கள் இல்லை! வருகைக்கு மிக்க நன்றி!!!
Delete"நாம் வீணாக்கும் ஒவ்வொரு உணவுப் பருக்கைக்குப் பின்னாலும் இந்த உலகம் பருவநிலை மாற்றத்தாலும் சுற்றுச்சூழலாலும் கொஞ்சம், கொஞ்சமாக அழிந்து வருகிறது, அழித்துவருகிறோம் என்பதை அறிந்து கொள்வோம்!" என்ற கருத்தை வரவேற்கிறேன்.
ReplyDeleteநன்றாக அலசி உள்ளீர்கள்
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்!
வருக! அய்யா! தங்கள் இனிய வருகைக்கும் பிடித்த கருத்தை வரவேற்றதக்கும் நன்றிகள் பல
ReplyDeleteஆஹா அருமையான கட்டுரை,,,,
ReplyDeleteமனம் குற்ற உணர்வில்,,,,,, எத்துனை நாம் வீணடிக்கிறோம்,,,
நன்றிகள், வாழ்த்துக்கள்.
வருக சகோ! வீணடிக்கும்போது ஒரு நொடி யோசித்தால் ......?
Deleteஇனிய வருகைக்கும் இனிய வாழ்த்திற்கும் நன்றிகள் பல