""அன்பு தாய்மார்களே! ஓவர் குடிகாரர்களே! ஆசை எதிர்கட்சி எதிரிகளே! அக்கப்போர் தரும் அரசியல்வாதிகளே!!
உங்களுக்கெல்லாம் தெரிவிப்பது என்னவெனில்
நீங்க ஆவலா எதிர்ப்பார்த்த "மது ஒழிப்பை ஒருபோதும் என்னாலும் சரி எந்த காலமானாலும் சரி ஒழிக்க முடியாது??
உலகம் முழுவதும் மதுக்கடைகள் இருக்கும் போது நான் மதுகடையை மூடுவேன் என்று எதிர்பார்க்கலாமா?
போராடுபவர்கள் முதலில் இந்தியாவில் இருக்கும் மதுக்கடைகளை ஒழிக்க சொல்லுங்கள் பிறகு நானும் ஒழித்துவிடுகிறேன்!!
சில எதிர்கட்சிகள் மதுவை ஒழிப்பதாக பகல்கனவு காண்கிறார்கள்! அது நடக்குமா?
அன்பு குடிகாரர்களே "நீங்கள் பகல் இரவு என்று எந்த நேரமும் மப்பும் மந்தாரமாக கனவு கன்டால்தான் "என் வளர்ச்சியையும் இந்தியாவின் வளர்ச்சியையும் முன்னேற்ற முடியும் என்பதை நினைவில் கொள்க!!
தமிழ்நாட்டில் நீங்கள் ஆண்டுக்கு குடிக்கும்அளவ வெறும் 85 மிலிட்டர்தான்! பக்கத்து மாநிலங்களை பாருங்கள் 100 110. என்று வளர்ச்சியடைகிறார்கள் !!
நாம் எல்லா துறைகளிலும் வளர்ச்சியடைந்து இதில் மட்டும் வளரவில்லை என்றால் எதிர்கால வரலாறு புவியியல் குவியியல், எல்லாம் மன்னிக்குமா ??
ஓவராக குடிப்பவர்களை "அன்பால் "திருத்துங்கள்! அது எப்படி என தெரியவில்லை என்றால் "என் அமைச்சர் பெருமக்களை பார்த்து நடந்து கொள்ளுங்கள்!
தாய்மார்கள் யாரும் வருத்தமடையாதிர்கள்
எல்லா துறைகளில் நீங்கள் சாதனை படைத்தாலும் மதுகுடிக்கும் துறையில் சற்று பின்தங்கி உள்ளீர்கள் என்பதை உணருங்கள்!
உங்களை உங்கள் குறைகளை கேட்பதற்காக ஒருவர் ஊர் ஊராக சுற்றிவருகிறார்! இது போல
இன்னும் எத்தனை பேர் சுற்றிவந்தாலும்? மதுவையும் என்னையையும் விட்டுவிடாதிர்கள்!!
உங்களை காக்கும் சக்தி கடவுளுக்கு அடுத்த படி முதல் படி என எல்லா படியும் என்னிடம் மட்டுமே உள்ளது!!
எல்லாம் கற்பனையே!! ஆனால் நடப்பது உண்மையே நன்றி!!
குடிச்சுப்பழகணும்!படிச்சுப் படிச்சு சொல்லுறாங்க பாழுங்கள்ளை நீக்கிப் பாலைக் குடிச்சுப் பழகணும்!(கலைவாணரின் பாட்டு)
ReplyDeleteவருமானம் தரும் ஒன்றை அரசு விலக்குமா?
This comment has been removed by the author.
Deleteகற்பனை இல்லை..எல்லாம் உண்மையே.. நண்பரே.....
ReplyDeleteகற்பனை இல்லை..எல்லாம் உண்மையே.. நண்பரே.....
ReplyDeleteஆமாம் நண்பரே! நன்றி
Deleteஹாஹாஹா மிகவும் ரசித்தேன் நண்பரே..
ReplyDeleteவாங்க நண்பரே! தங்கள் ரசனைக்கு நன்றிகள் பல!
Delete