"அறிவு வளர்ந்திட ...
ஆங்கிலம் படிக்கணுமோ..
அவன் குடும்பம் தழைத்திட..
அயல்தேசம் போகணுமோ...!
"அரைகுறை நாயகிக்கு...
அள்ளித்தரும் மனசு ...
அய்யா என்பவனை ...
அருவருப்பாய் பார்க்கும் பல தினுசு ..!
"பிணம் கூட ஏங்கிடுமே...
காலணா காசுக்கு...நம்.,
பிரதமரும் சொன்னாருங்க...
நூத்திபத்து கோடி பேருக்கு ...
"குறிதாக்கும் ஏவுகணை....
நுட்பம் போதுமய்யா..
கைதாகும் மீனவனுக்கு ...
கருனணயில்லையா...!
"நீ முந்தி நான் முந்தி ..
மனப் பிரச்சனையோ...
பண்பாடு வளர்ந்திடுமா ...
பதில் கூறு புதுதலைமுறையே..!
"பட்டம் படிப்பு போதும்மா தம்பி..
சமுக ஒற்றுமை..
சமுக நல்லிணக்கம்..
சமுக பண்பாடு ..
மாறிடுமோ உன்னை நம்பி ..!!
இப்படைப்பு வலைப்பதிவர் திருவிழா 2015--தமிழ் இனணய கல்வி கழகம் நடத்தும்
"மின் தமிழ் இலக்கிய போட்டி "களுக்காக எழுதப்பட்டது!
வகை (4) புதுக்கவிதை போட்டிகள் :முன்னேறும் உலகில் பண்பாட்டின் தேவைகள்! இவை என் சொந்த படைப்புதான் என்றும் வேறு எங்கும் வெளியானதல்ல என்றும் முடிவுகள் வெளியாகும் வரை வேறெங்கும் வெளியாகாது எனவும் உறுதியளிக்கின்றேன்!
சிந்திக்க வேண்டிய பண்பாடு.வாழ்த்துக்கள் போட்டியில் வெற்றி வாகைசூட.
ReplyDeleteவருக சகோ! வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றுகள் சகோ!?
Deleteஎதுவும் மாறாது எல்லாம் ஆமாசாமி போடும் கூட்டம் அரசியலில்))(
ReplyDeleteஇன்னும் எத்தனை தலைமுறைகளுக்கு ஆமாம்சாமி போடுவது தெரியவில்லை சகோ! நன்றி
Deleteஉலக்த்தோடு ஒட்ட ஒழுகல் கல்லார்.....!
ReplyDeleteஉண்மைதான் ஐயா!
ReplyDeleteவருகைக்கு மிக்க நன்றி!!! !
என்று மாறுமோ?
ReplyDeleteதலைப்பும் படமும் சிந்திக்க வைக்கிறது. வாழ்த்துக்கள் சகோ.
வருக சகோ! வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் பல
Deleteநன்றி...
ReplyDeleteநம் தளத்தில் இணைத்தாகி விட்டது...
இணைப்பு : http://bloggersmeet2015.blogspot.com/p/contest-articles.html
புதுக்கோட்டை விழாக்குழு சார்பாக...
அன்புடன் திண்டுக்கல் தனபாலன்
மிக்க மகிழ்ச்சி அண்ணா!
Deleteவாழ்த்துக்கள்! போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!
ReplyDeleteவருக நண்பரே! தங்கள் இனிய வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றிகள் பல
Deleteவகை (4) புதுக்கவிதை போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!!
ReplyDeleteவருக இனிய நண்பரே! தங்கள் அன்பு வாழ்த்திற்கு நன்றிகள் பல
Deleteவகை (4) புதுக்கவிதை போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!!
ReplyDeleteநன்று ! வாழ்த்துக்கள் !
ReplyDeleteவருக! தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் பல
Delete>> அரைகுறை நாயகிக்கு...
ReplyDeleteஅள்ளித் தரும் மனசு ...
அய்யா என்பவனை ...
அருவருப்பாய் பார்க்கும் பலதினுசு !<<
சாட்டையடி.. மின்னலாகத் தெறிக்கின்றன - கவிதை வரிகள்..
வெற்றி பெறுதற்கு நல்வாழ்த்துகள்..
வாருங்கள் அன்பின் அய்யா!! தங்கள் சாட்டையடி கருத்துகளுக்கு மனமார்ந்த நன்றிகள் பல
ReplyDelete