"கண்டம் விட்டு கண்டம் தாக்குற ஏவுகனை முதல் மனிதனை அழிக்கும் அத்தனை விசயங்களையும் கண்டுபிடித்துவிட்டோம்! அத்தியாவச பொருட்களான இந்த வெங்காயம் பருப்பு போன்றவைகள் விலையோற்றத்திற்கு என்ன காரணம் என்று யாராவது கண்டுப்பிடித்தார்களா? ராக்கெட்டை விட விலை உயர்வுக்கு எது? யார் காரணம்! பற்றாக்குறை இறக்குமதி செய்யவேண்டும் என்கிறார்கள்! பணக்காரர்கள் பாவம் ஏழைகள் என்கிறார்கள்! ஒவ்வொரு சமயத்திலும் மட்டும் ஏன் விலை ஏறவேண்டும்? துண்டு துக்கடா கட்சிகள் எல்லாம் பல நிறுவனங்கள் வியாபரிகளிடம் தேர்தல் நிதியாக லட்சலட்சமாக வாங்கினால் நன்கொடை கொடுத்தவன் எப்போது விட்ட காசை பிடிப்பான்! இப்படித்தான் பிடிப்பான்! இதுதான் உண்மையான காரணமாகவும் இருக்கும்! அடுத்த தேர்தல் வரப்போகிறதே?? காசு தரவேண்டுமே! அதற்குள் இன்னும் என்னவெல்லாம் விலையேறப்போகிறதோ?
இன்னும் ஆறுமாத காலத்திற்குள் அவஸ்தைபட போவது தினக்குலிக்கு போகிறவர்கள்தான்! மற்றவர்கள் கஸ்டப்படுவது போல நடிப்பார்கள்!!!
அரசியலை மிஞ்சி நம்ப நடிகர்கள் அடிதடி கலாட்டா எல்லாம் செய்து ஒரு வழியாக பாண்டவர் அணி சங்கத்தை பிடித்துவிட்டது! இந்த அணியின் முக்கிய லட்சியம் நடிகர்சங்க கட்டிடம் கட்டுவதான்! அதற்கு நிதி வசுல் செய்யவேண்டுமாம்! ஏங்கடா ஒரு படத்துக்கு ஆயிரம் இரண்டாயிரமா சம்பளம் வாங்குறிங்க! உங்க நடிப்பு திறமைக்குத்தான் நாப்பது அம்பது கோடி வாங்குறிங்களே! ஆளுக்கு ஒரு லட்சம் போட்டாவே ஆசியாவிலேயே பெரிய கட்டிடமா கட்டிலாம் ????ஊரான் காசுனா அம்புட்டு எளப்பமா??
""தி ஒ விளக்கம் :இன்று நம் உலகித்திற்கு மிக தேவையானது புத்திசாலிதனம் இல்லை! அது நம்மிடம் அதிகமாகவே உள்ளது! உலகத்தில் இல்லாமல் இருப்பது நல்ல தூய்மையான மனம்தான்! தூய்மையான மனம் இந்த உலகத்தில் அழிக்கபட்டுவிட்டது! குழந்தைகள் மனதை போல தூய மனங்கள் வேண்டும்! அது நம்மிடம்தான் உள்ளது! நம்மனம் குழந்தையின் மனதைப் போல சுத்தமாக இருந்தால் இந்த உலகம் பூஞ்சோலையாக இருக்கும்!!
தி ஒ தகவல். :இணையதளத்தில் உள்ள 4ஆயிரத்து 500கோடி பக்க தகவல்களை அச்சடிக்கவேண்டுமானால் 13ஆயிரத்து 600கோடி பேப்பர்கள் வேண்டுமாம்!
விக்கிபீடியாவில் உள்ள 4கோடியே 72லட்சத்து 91ஆயிரம் பக்கங்களை அச்சாக்கவேண்டுமானால்
7கோடியே 8லட்சத்து 59ஆயிரத்து 865பேப்பர்கள் வேண்டுமாம் !இதற்காக அமேசான் காட்டில 1கோடியே 60லட்சம் மரங்களை வெட்ட வேண்டும்!
"ஆக இதில் கிடைக்காத தகவல் என்னன்னா!? நம்ம சொந்த கதை நெந்த கதை தான் எழுதவேண்டும்
அதிவுமில்லாமல் இதில் உள்ள தகவல்களை வைத்து எழுதி பிரபலமடைய அதிர்ஷ்டமும் வேண்டும் போல!!
"தி ஒ சிந்தனை :ஒரு தரம் வந்தால் அது கனவு! இரு தரம் வந்தால் அது ஆசை! பல தரம் வந்தால் அது லட்சியம்!! இப்படி தம் கலாம் அய்யா சொல்லியிருக்கார் !
இன்னிக்கு வேல கம்மி அதான் நேரத்துலயே எழுத்திட்டேன்!!
நன்றி!! !
கனவு இலட்சியம் அடைய வாழ்த்துவோம் சகோ[[[[
ReplyDeleteவாங்க சகோ! கண்டிப்பாய் வாழ்த்துவோம் சகோ!
Deleteவெங்காயத்தால் ஆட்சி பறிபோன வரலாறு இந்தியாவில் மட்டுமே என்று படித்த ஞாபகம்[[[ஆனாலும் விலைநிர்னயநிலையம் சில அமைபுக்குக்களிடம் தானே!
ReplyDeleteஅதுதான் உண்மை சகோ! அந்த அமைப்புகள் பண்ணும் பித்தலாட்டமே இந்த விலையோற்ற கூத்து!!
Deleteநடிகர் சங்க அரசியல் நான் அறியேன் பாஸ் என் சோலியே ஆயிரம் இருக்கு சினிமா மோகம் கலைந்து பல ஆண்டாச்சு[[[
ReplyDeleteஎனக்கும் இந்த நடிகர்கள் மோகம் இல்லை சகோ! ஆனா அவங்க பண்ற அலப்பறை தாங்க முடியல???
Deleteநண்பரே இதற்கெல்லாம் மூலகாரணம் மக்க(ல்)ள்தான் இவங்கே என்றைக்கு இலவசத்தை தூக்கி வீசுறாங்களோ... அன்றைக்குத்தான் நாடு உருப்படும்
ReplyDeleteவாங்க ஜி! அப்படி தூக்கி வீசுறதையும் இலவசம்னு நினைச்சுக்குவாங்க! இதற்கு மூலை இல்லாததே காரணம் ஜி!
Deleteஅருமை பூபகீதன்
ReplyDeleteமிக்க நன்றி அய்யா!
Deleteஅருமை
ReplyDeleteமிக்க நன்றி நண்பரே!
Deleteஎப்பவும் எதுவும் வரலைன்னா.....?????
ReplyDeleteஎதுவும் பதுக்கவும் முடியாது, நடிக்கவும் முடியாது நண்பரே!!!
Deleteஎப்பவும் எதுவும் வரலைன்னா.....?????
ReplyDeleteஅருமையான பதிவு பூபகிதன். எனது வலைப்பூவுக்கு வருகை தந்தமைக்கு நன்றி.எனது வலைப்பூவில் இணைந்து தொடர்ந்து கருத்துக்களை சொல்லுங்கள்.
ReplyDeleteதங்களின் முதல் வருகைக்கு என் நன்றிகள்! கண்டிப்பாக இனிஉங்கள் தளம் வருவேன் அம்மா! நன்றி
Deleteநேரத்தில் எழுதி விட்டாலும் -
ReplyDeleteநியாயமாக எழுதி இருக்கின்றீர்கள்..
வாழ்க நலம்!..
வருக அய்யா! தங்களின் இனிமையான வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி!
Delete