"நேற்று என்னுடன் வேலைபார்க்கும் நண்பர் தன் கைபேசியில் இருந்த ஒரு விடியோ "வை காண்பித்தார்! அதை பார்க்க பார்க் அதிர்ச்சி! அதிர்ச்சி என்பதை விட இந்த மனித சமுகம் எதை நோக்கி போகிறது என்ற கேள்விதான் எழுகிறது! மனித மனம் இன்னும் நல்ல முறைகளுக்கு மாறவில்லை வக்கிற எண்ணங்களால் நிரம்பியிருக்கிறதா என்பதை நிருபிக்கும் செயல்தான் நான் வீடியோவில் பார்த்தது?
அந்த வீடியோவில் இருந்தது ....
"நகரின் முக்கிய நான்கு வழிசந்திப்பில் பலவித வாகனங்கள் வருவதும் போவதுமாக இருக்கும் நேரத்தில். திடீரென்று ஒரு பெண் கைகளை விரித்தவாறு எதிர் வரும் வாகனங்களை நிறுத்த "டேய் ...த்தா "வண்டிய நிப்பாட்டுடா "என்று மறிக்கறார் வண்டியோட்டிகளில் சில அதிர்ச்சியாகி நிப்பாட்டிவிடுகிறார்கள்! சிலர் "எது நடந்தா எனக்கென்ன என்று விரைகிறார்கள்? அந்தப்பெண்ணுக்கு பைத்தியம் பிடித்துவிட்டதா? என்று நீங்கள் நினைக்கலாம்! உண்மைதான் அறிவை மழுங்கடிக்கும் மதுவை குடித்து சீரழிந்தால் பைத்தியம்தானே! அந்த பெண் இல்லை குடும்ப தலைவி போல இருந்தாள், நிலைகொள்ளமுடியாத போதையில் என்ன செய்கிறோம் என்பதை சிறிதும் உணரமுடியாத நிலையில் இருந்தாள்! ஒவ்வொரு தடவையும் வாகனங்களை நிப்பாட்ட முயற்சிக்கும் போது கீழே விழுந்தாள்! அவள் கூட இருந்தவன் அது கணவனா? கள்வனா தெரியாது "அடியே ஏன்டி இப்படி செய்யிற "என்று தலையில் அடித்துக்கொண்டு அவளை இழுப்பதும் பிடிப்பதுமாக இருந்தான்! அவள் கட்டியிருந்த சேலை நலுவியதுகூட அவளுக்கு தெரியவில்லை! அவள்கூட இருந்தவன் எவ்வளவோ கெஞ்சியும் அவள் கேட்கவில்லை, கேட்கும் நிலைமையுலும் இல்லை! பாவாடையுடனும் ஜாக்கட்டுடனும் அவள் மறுபடியும் வண்டிகளை நிப்பாட்ட முயற்சித்தாள்! அங்கு கூடியிருந்த எந்த ஆணும் சரி பெண்ணும் சரி அவளுக்கு உதவி செய்ய முன்வரவில்லை! அவள் மார்பகம் தெரிய ஆரம்பித்ததும் நல்ல மனம் படைத்த சிலர் தத்தம் கைபேசிகளில் படம்பிடிக்க ஆரம்பித்துவிட்டார்கள்
"அப்படி பிடிக்கப்பட்ட வீடியோவைத்தான் நான் பார்த்தேன்! நண்பரும் சிறிதும் வெட்கம் மானம் சூடு சுரனை எழுதுமில்லாமல் தன் வண்டியை நிப்பாட்டி விட்டுத்தான் இதை பிடித்திருக்கிறார்?
இதைவிட ட்ராபிக்கை சரிசெய்த பெண் காவலர் எதையும் தாம் பார்க்கவில்லை என்று இருந்ததை என்ன சொல்வது என்றே தெரியில்லை
"இப்படி வக்கிர புத்தி கொண்டவர்கள், நடுசாலையில் அவர்கள் உறவுகள் நடந்துகொண்டிருந்தாலும் படம் பிடித்திருப்பார்களோ? என்னவோ?
மனித மனத்தில் ஒரு துளிகூடவா மனிதன்மை இல்லாமற்போய்விட்டது?? அந்த பெண் நிஜ வாழ்வுக்கு திரும்பினால் "நீ இப்படி நடந்துவிட்டாய் "என்றால் அவளுக்கு அது சங்கடத்தை ஏற்படுத்ததா?
தெரியாமல் செய்வது தவறு என்றால் தெரிந்தே செய்த ஈரமில்லாதவர்களை என்ன செய்வது???
இப்போதைய. சூழ்நிலையில் பிறக்கும் சிசுவுக்குதான் "போதை பழக்கம் இல்லையோ?
அதற்கும் கூடிய விரைவில் பழக்கப்படுத்திவிட்டுத்தான் மதுவை ஒழிப்பார்களா?
"இப்படிபட்ட கீழ்த்தரமான, மட்டமான, சில்லறைத்தனமான சிந்தனைகளை எப்போது நாம் உணரப்போகிறோம்!!
குறிப்பு (அந்த வீடியோவை என் கைபேசியால் இணைக்கமுடியவில்லை எப்படியும் வாஸ்அப் "பில் வரும் பாருங்கள்)
நன்றி
கொடுமை
ReplyDeleteவருக நண்பரே! அந்த பெண் நடந்துகொண்டதையா? வீடியோ எடுத்ததா?? நன்றி
Deleteஎன்ன அவலம்?
ReplyDeleteவருக அய்யா! எது நடந்தாலும் எனக்கென்ன என்பவர்களுக்கு என்ன சொல்ல!!!
Deleteகொடுமை
ReplyDeleteஆமாம் நண்பரே கொடுமையி லும் கொடுமை கேடுகொட்ட கொடுமை!!
Deleteஅண்டா சோறுக்கு ஒரு சோறு பதம் போல..மொத்த மனித சமூகத்தின் மொத்தஅவலத்துக்கு இந்த சம்பவமே சாட்சி நண்பரே...
ReplyDelete.அவள் மார்பகம் தெரிய ஆரம்பித்ததும் நல்ல மனம் படைத்த சிலர் தத்தம் கைபேசிகளில் படம்பிடிக்க ஆரம்பித்துவிட்டார்கள்
உண்மைதான் நண்பரே! ஆனால் அவலம் என்பது சில அரைவேட்காட்டு மனிதர்களுக்கு புரியவில்லை நண்பரே!!!
Deleteஅண்டா சோறுக்கு ஒரு சோறு பதம் போல..மொத்த மனித சமூகத்தின் மொத்தஅவலத்துக்கு இந்த சம்பவமே சாட்சி நண்பரே...
ReplyDelete.அவள் மார்பகம் தெரிய ஆரம்பித்ததும் நல்ல மனம் படைத்த சிலர் தத்தம் கைபேசிகளில் படம்பிடிக்க ஆரம்பித்துவிட்டார்கள்