click to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own text

08 October 2015

அண்ணே ஒரு டீ ...! 2

"(புதுசா வர்றவங்க முன்னால போய் சூடா ஒரு டீ குடிச்சிட்டு வந்துடுங்க! )




"கடைகார ஓனரிடம் தெரியலணா? என்று துள்ளி குதித்து ஓடியவன் நேராக வகுப்புக்குள் நுழைந்தான்!

ஏற்கனவே வகுப்பில் மாணவர் கூட்டம் காச் மூச் என்று கத்திமாணவிகளை வம்பளத்தி கொண்டிருந்தார்கள்!

"கிருஷ் உள்ளே நுழைய  சட்டென்று கூச்சல் நின்று ஒருசேர இவனை திரும்பி பார்த்தார்கள்!


அவள் ஒருத்தியை தவிர .?அவள் சுவாதிகா, சுறுக்கமாக சுவா !

(உங்களுக்கு  பிடித்த சினிமா நாயகிகளை  மனசுக்குள் ஓட்டிப்பாருங்கள் அதில் 75% சுவாதிகா இருப்பாள் )


அவள் பார்க்கிறாளா? என்று இவனும் பார்த்துக்கொண்டே அவன் இருக்கையை அடைந்தான்! 


பிறகு புரபஷர் வந்தார், இதை படித்ததான் நீங்கள் கைநிறைய சம்பாதிக்க முடியும், என்று பல தியரிகளை மிசின் போல துப்பிவிட்டு வெளியேற?


கசங்கிய டிஸ்யூ பேப்பர் போல மாணவ மாணவியர் வெளி வந்தனர் 

கனவுகளை சுமந்த கண்களில் பசியின் தாக்கம் தெரிய பலர் கேண்டினை நோக்கியும் சிலர் மரத்தடி நிழலை நோக்கியும் பசியாற சென்றனர்!

தூரத்தில் போகும் சுவா "வை நோக்கி தப தப வென்று கிருஷ் ஓடினான்!

ஹாய் சுவா? கெஞ்சம் நில்லேன் "

அவள் நின்று திரும்பி பார்த்து முறைத்து?

உனக்கு எத்தனதரம் சொல்றது என் பெயரை சொல்லி கூப்படாதேன்னு?

இவன் சிரித்து? கூப்படறதக்குதானேமா பெத்தவங்க பெருமையா பெயர் வச்சிருக்காங்க "?

ஆமா ?ஆனா நீ கூப்படறதக்கு இல்லே?

பின்ன யார் கூப்பிடனும்??

அது உனக்கெதுக்கு ஆனா? நீ கூப்பிட வேணாம்?
என்றவள் இவன் பதிலுக்கு காத்திராமல் நடக்க ஆரம்பிக்க,

ஏய் சுவா நில்லு ?

அவள் நிக்காமல் நடக்க 

சரியான கூர் இல்லாத பிள்ளையா  நீ???

அவள் ஒருநொடி  நிதானித்து நின்று திரும்பி அதே கோபத்துடன்? இடுப்பில் கைவைத்து 

உனக்கு யார் சொன்னா??

இவன் சிரித்து வேற யார் உங்க அப்பாதான், இல்ல இல்ல என் எதிர்கால மாமனார்,! என்றான்!


அதே நேரம் டீக்கடையில் டீகடை ஓனரும் அந்த நான்கு மாணவர்களும் ஒன்றாக கூடி சங்கேத பாஷையில் பேசிக்கொண்டார்கள் 

அவர்கள் அப்படி என்ன பேசியிருப்பார்கள்!?

-தொ-ட -ரு -ம்!


நன்றி !இந்த டீயில் எது குறை என்று கூறினால் நாளை சூடாக எழுதுவேன்! நன்றி!! 
"

5 comments:

  1. // கசங்கிய டிஸ்யூ பேப்பர் போல மாணவ மாணவியர் வெளி வந்தனர் //
    கலக்கிட்டீங்க!
    ஓட்டுக் கேட்க வேண்டியதுதான்!


    ReplyDelete
  2. தொடரில் அதையும் தாங்களே சொன்னால்..தெரிஞ்சிக்கலாம் நண்பரே

    ReplyDelete
  3. தொடரில் அதையும் தாங்களே சொன்னால்..தெரிஞ்சிக்கலாம் நண்பரே

    ReplyDelete
  4. அருமை தொடர்கிறேன் நண்பரே... சுவாதிகா... ஸுவாஹா ஆகிவிடாமல் கொண்டு போங்க நண்பரே...

    நண்பரே தவறாக நினைக்கா விட்டால் 1 சொல்கிறேன் அதாவது பேசிக்கொள்ளுவது போல் வசனம் வந்தால் மையத்தில் வரக்கூடாது அதாவது இதன் முந்தைய பாகம் மா3யாக வரவேண்டும்

    இந்த மா3 எழுதுவது கட்டுரைகளுக்கே சிறப்பு...

    தவறெனில் மன்னி்க்க...

    ReplyDelete
  5. அருமையான கதையோட்டம் கூர் வார்த்தை இரசித்தேன்.

    ReplyDelete

உங்கள் எண்ணத்தை இப்படியும் சொல்லலாம்,

தொடர்புக்கு : susibala1986@gmail.com