"என்னுடைய முகநூல் வாட்ஸ்அப் கவிதைகள்!!
"
அப்பத்தா
ஆச்சிகளை
முதியோர் இல்லத்தில்
சேர்த்துவிட்டு
"அப்பாச்சிகளை "
ஷோரூம்களில்
தேடிக்கொண்டிருக்கிறோம் ...!!
"நீ கிடைக்க.
வெள்ளைப்பிள்ளையாருக்கு
108தேங்காய் உடைத்தேன்
எதிரே ..
ஏன் வந்தாய்
1008தேங்காயாய் அல்லவா
சிதறிப்போனேன் ,.!!
"கம்பங்கூழ் குடிச்சு
உயிர வளர்த்தவங்க ..
நுங்கு குடிச்சு
தெம்பு வளர்த்தவங்க ..
சாராயம் குடிச்சு
சண்ட வளர்த்தவங்க..
டாஸ்மாக்ல குடிச்சு
இப்ப அரச வளர்க்கிறாங்க ...!!
"தவறி விழுந்தோ.
தன்னால் விழுந்தோ
நல்ல விதைகளை
முளைக்க விடவதேயில்லை
நாம் ...!!
நன்றி! நாளைக்கு 4Gகவிதைகள் வரும்
// டாஸ்மாக்ல குடிச்சு
ReplyDeleteஇப்ப அரச வளர்க்கிறாங்க ...!!//
சூப்பர்!
அனைத்தும் அருமை
வாங்க அய்யா! தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!!!
Deleteஆஹா அனைத்தும் அருமை,
ReplyDeleteவாழ்த்துக்கள்.
வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி சகோ!
Deleteமுதல் கவிதை வேதனையுடன் ரசித்தேன் நண்பரே... வாழ்த்துகள்
ReplyDeleteவாங்க ஜி! நிஜத்தில் பார்த்தால் ரசிக்கமுடியாது! வேதனையாகத்தான் இருக்கும்! மிக்க நன்றி !!
Deleteகவிதை அணைத்தும் மிக அருமை பூபகீதன்.
ReplyDeleteவருக அம்மா! தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!!
Delete108 தேங்காய் உடைத்தவன் 1008 தேங்காய உடைந்தது மட்டும் ..எப்படி என்று தெரியவில்லை நண்பரே....
ReplyDeleteஆமாம் நண்பரே! அவள் வந்ததும் அப்படி உடைந்து சிதறிவிட்டானாம்! சிறது தேங்காய் பாருங்கள் அது போல மிக்க நன்று!!!
Delete108 தேங்காய் உடைத்தவன் 1008 தேங்காய உடைந்தது மட்டும் ..எப்படி என்று தெரியவில்லை நண்பரே....
ReplyDeleteஅனைத்தையும் ரசித்தேன்.
ReplyDeleteதங்களின் முதல் வருகைக்கும் ரசித்தமைக்கும் மிக்க நன்றி நண்பரே!!!!
Deleteஅருமையான கவிதைகள்! இப்ப நுங்கு எல்லாம் அடுத்த தலைமுறைக்கு கூகிலில் தேடித்தான் காட்டணம்[[[[
ReplyDeleteவாங்க சகோ! 100%இது உண்மைதான் சகோ! வேற வழியும் இல்ல! மிக்க நன்றி
Deleteகாட்டனும்[[
ReplyDeleteகண்டிப்பாய் காட்டவேண்டிய சூழ்நிலைக்கு வந்திடுவோம் சகோ!
Deleteஅடுத்த கவிதை ரசிக்க ஆவலுடன்.
ReplyDeleteஇன்னும் ஒருமணி நேரத்தில் வந்துவிடும் நண்பரே! ரசிக்க காத்திருப்பதற்கு மிக்க நன்றிகள்!
Deleteஅருமையான வரிகள்! வாழ்த்துக்கள்!
ReplyDelete