"இன்று திருமணங்கள் சொக்கத்துல நிச்சயக்கப்படுதா? இல்லையானு எனக்கு தெரியாது! ஆனால் ஆண்ராய்டு போனால நிச்சயக்கப்படுதுனு ஆணித்தரமா என்னால் சொல்லமுடியும்!
இதுவும் நேற்று நடந்த சம்பவம்தான்!
"என் வீட்டருகில் இருக்கும் ஒரு குடும்பத்தில் நடந்தது! 18வயது நிரம்பாத அந்த பெண் அவர்கள் வீட்டில் தங்கி ஒரு பாலிடெக்னிக்கலில் முதல் வருடம் படித்து கொண்டிருந்தாள்! இந்த பெண் ஆறுமாதமாக இவர்கள் வீட்டில் இருப்பதுகூட எனக்கு தெரியாது! அவ்வளவு அடக்கமான பெண்ணாம்! அவர்கள் வீட்டில் இந்த பெண்ணுக்கு என்ன காரணமோ, மாப்பிள்ளை பார்த்துவிட்டார்களாம்! கூடவே காஸ்டிலி செல்லும் மாப்பிள்ளைகாரன் வாங்கி தர எந்நேரமும் பேச்சு பேச்சுதான் !விடிய விடிய போசினாலும் இவர்கள் கண்டுகொண்டதாக தெரியவில்லை! ஒருவேளை "உரிமையானவுடன்தானே பேசுறா என்று விட்டுவிட்டார்கள்! இதற்கிடையில் மாப்பிள்ளை வீட்டில் உடனே திருமணத்தை நடத்த வேண்டும் என்றதும் பெண் வீட்டுக்குகாரக்களுக்கு சந்தேகம் வந்து "உங்க சம்பந்தமே வேணாம் என்றிருக்கிறார்கள்! இந்த விசயத்தை இந்த பெண்ணிடம் சொல்ல எதையும் வெளிக்காட்டாமல் "அப்படியா ரெம்ப சந்தோசம் "என்றவள்? அந்த செல்லை கிழே போட்டு உடைத்துவிட்டாள்! என் பக்கத்துவீட்டுகாரர்கள் அந்த பெண்ணை உச்சிமுகர்ந்தார்கள் "ரெம்ப நல்லவளா இருக்கா "என்று என் மனைவிகூட சொல்லி புல்லறிக்க வைத்தாள்!
நேற்றுதான் யாரும் எதிர்பார்க்காத திருப்பம் நடந்துச்சு!
ஊருக்கு போயிட்டு வர்றேனு போனவா நேரா மாப்பிள்ளை வீட்டுக்கு போயிட்டாளாம்
படிக்கிற பெண்ணுக்கு திருமணம் நடத்தவேண்டும் என்று யார் செய்த தவறு
படித்து முன்னேற வேண்டும் என்று இன்றைய பெரும்பாலான பெண்கள் இருப்பதில்லை!
திருமணம்செய்து பிள்ளைகள் பெருவதே பலர் சாதனையாக நினைக்கிறார்கள் என்பதுதான் உண்மை!
"மாப்பிள்ளை பார்த்து பெற்றவர்கள் தவறுதானே!
அதிலும் செல் தந்து பேச சொன்னது முட்டாள்தனம்! அதைவிட கண்டிக்காமல் இருந்தது பெரும் தவறு!
எல்லா தவறுகளையும் பெற்றவர்கள் செய்தாலும் இந்த வயதில் திருமணத்திற்கு என்ன அவசரம் என்று அந்த பெண்ணுக்கு யாரும் சொல்லவில்லை!
18வயதிலேயே திருமண ஆசையை வளர்த்தது யார்! சினிமா சமுக தளங்களுக்கும் இதில் பங்கு உண்டு!
அறியாத வயதில் தெரியாமல் செய்யும் செயல்கள் என்னமாதிரி விளைவுகளை ஏற்படுத்தும்!!
"ஆண்ராய்டும் அவமானத்தை தரும்
அழிவையும் தரும்
நம்மிடமிருக்கும் சில்லறைத்தனமான சிந்தனைகளில் இதுவும் உண்டு!!!
நன்றி!!!
இப்போதெல்லாம் திருமணத்துக்கு முன்பே மணிக்கணக்கில் செல்லில் பேசுவதும்,ஒரே ஊராக இருந்தால் நேரில் பார்ப்பதும் ,சுற்றுவதும் சாதாரணமாகி விட்டன.
ReplyDeleteஅருமையான கருத்து
ReplyDeleteபெண் 22 அகவையும் ஆண் 25 அகவையும் வந்த பின் மணம் முடிக்கலாமே!
சிறுபிள்ளைத் திருமணம் பெண்ணுக்கே பாதிப்பைத் தரும்.
வேதனைதான் நண்பரே
ReplyDeleteகண்கெற்ற பிறகு நமஸ்காரம் போ அறிவில்லாமல் செய்தால் வேதனைதான் மிஞ்சும் நண்பரே!!
Deleteதிருமணங்கள்.ஆண்ராய்டு போனால நிச்சயக்கப்படுவது இந்தீ..யாவின் வளர்ச்சி நண்பரெ....
ReplyDeleteஆமாம் நண்பரே! அதித வளர்ச்சியின் அழிவுப்பாதைக்குத்தான் அழைத்துச்செல்லும்!
Deleteதிருமணங்கள்.ஆண்ராய்டு போனால நிச்சயக்கப்படுவது இந்தீ..யாவின் வளர்ச்சி நண்பரெ....
ReplyDeleteஎதற்காக திருமணம் நிறுத்தப் பட்டது?புரியலே :)
ReplyDeleteஎதற்காக திருமணம் நிறுத்தப் பட்டது?புரியலே :)
ReplyDeleteதொலைபேசியின் வருகை இன்றைய வளர்ச்சியின் இன்னொரு பரிமானம் அதனால் வரும் காதலும் புதுமையே ஆனாலும் சாதுவான பெண் இப்படி தேடிப்போகும் நிலைக்கு காதல் கண்ணை மறைக்கு என்பதா?,
ReplyDeleteகலாச்சாரம் இன்னும் சீர்கெடும் நண்பரே அது உறுதி
ReplyDeleteஉறுதியாகவும் கலாச்சாரம் கொட்டுத்தான் உள்ளது ஜி! மிக்க நன்றி!!
Deleteஉங்கள் தளத்தில் இணைந்தாலும் தங்களின் பதிவு எனது dashboardil தெரிவதில்லை ஏன் ? விபரம் கூறுங்கள்.
ReplyDeleteஇப்படித்தான் பெற்றவர்களே பிள்ளைகளை சீரழித்து விடுகின்றார்கள்!
ReplyDelete