click to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own text

08 September 2015

இதுவரை செய்தது? செய்யாதது? எப்பவுமே செய்யாதது?????

"நம்ம குடும்பத்துல இதுவரை எனக்கு என்ன செஞ்சு கிழிச்சனு 
கேட்பது வழக்கம்தானே!!

நம்மள ஆள்றவங்கட்ட கேக்க உரிமை
இருக்குதானே? வாங்க கேட்போம்!?!

""இதுவரை செய்தது ""
 தமிழ்நாட்டின் ஒவ்வொரு "சந்து பொந்து 
இண்டு இடுக்கு மூலை முடக்கு "இப்படி எல்லாவற்றிலும் 
தாராளமாக "தண்ணீர் கடையை "திறந்தது??
 என் சீர்மிகு ஆட்சியில் எந்த இடத்திலும் எப்படி வேண்டுமானாலும் உருண்டு கிடக்கலாம்? என்று "குடி மகனுக்கு 
சுதந்திரம் கொடுத்தது??? 
 கௌரவமானவனை  குடிக்கவைத்து நடு ரோட்டில் தெருவில் சாக்கடையில் புரளவைத்து நாலு பேர் காறி துப்பி 
பாராட்டியது ??
   "இவர்கள் தான் நாட்டின் "கண்கள் " என்றவர்களையும் 
மதுவுக்கு பழக்கப்படித்தி எல்லோர் கண்களையும் குதுகலப்படித்தியது??? 

"நம்ம காசிலியே நமக்கு மிக்ஸி, கிரைன்டர், டீவி னு கொடுத்து மக்களை எல்லாம் புல்லறிக்க வைத்தது??

"ஒவ்வொரு அமைச்சரையும், கோடி கணக்கில் கொள்ளையடிக்கவிட்டு "கமிஷன் தராததாலயொ? சரியாக குனியாததாலோ? "உனக்கு மக்கள் பணத்தை சரியா ?களவாட தெரியல "னு அடிக்கடி அமைச்சர்களை மாற்றியது?? 

"இதுவரை செய்யாதது ""


விவசாயத்தையும் விவசாயிகளையும்
ஏறடுத்து பார்க்காதது 
"படித்த இளைஞர்களுக்கு வேலை அது உன்பாடு "என்று உதாசினப்படுத்தியது??
தினக்கூலிக்கும் வரியவர்களையும் ஆண்டுகணக்காக அப்படியே வைத்திருப்பது???
"எந்த அரசு அதிகாரியையும் மக்களை தேடி சென்று சேவை செய்துவிடாதிர்கள்? என்று பயம்காட்டியது??


நன்றி இன்னும் இந்த பட்டியல் நீளும் நாளை சந்திப்போம்!! ஏதும் தவறு இருப்பின் சுட்டிகாட்டி ஊக்கப்படுத்துங்கள்! நன்றி 

12 comments:

  1. வெட்கப்பட வேண்டிய உண்மைகள்...

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் வலைசித்தர் அண்ணா!!வெட்கப்பட வேண்டியவர்களுக்கு இது உண்மையாக தெரியாது போல!! நன்றி அண்ணா!!

      Delete
  2. நீளும் பட்டியல்! நீங்கள் தொடருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க அய்யா!! இந்த பட்டியல் நீ........ண்டுகொண்டேதான் இருக்கும் நாம் எதையும் கண்டுகொள்ளாமல் இருந்தால்? நன்றி அய்யா!!

      Delete
  3. பட்டியல் நீளும் என்று சொல்கின்றீர்களே நண்பரே முடிவே வராதே....

    நண்பரே தங்களது பதிவு எனது டேஷ்போர்டுக்கு வருவதில்லையே ஏன் ?

    ReplyDelete
    Replies
    1. வாங்க நண்பரே!! எதற்கும் ஒரு முடிவு உண்டு? ஆனால் இதற்கு முடிவு ......

      ஏன் என்று எனக்கும் சரியாக தொழில்நுட்பம் தெரியாது நண்பரே!!! கூடிய விரைவில் சரிசெய்துவிடுகிறேன் நன்றி!!!

      Delete
  4. இது போன்ற செயல்களுக்கு முடிவில்லை தான்.
    நல்லதொரு ஆக்கம் சகோ. வாழ்த்துக்கள் .

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோ! வந்தமைக்கும் வாழ்த்தியமைக்கும் நன்றிகள் பல!!

      Delete
  5. அருமை......தொடருங்கள்..நண்பரே

    ReplyDelete
    Replies
    1. வருக! நண்பரே! நன்றிகள் பல!

      Delete
  6. அருமை......தொடருங்கள்..நண்பரே

    ReplyDelete
    Replies
    1. வருக! நண்பரே! நன்றிகள் பல!!

      Delete

உங்கள் எண்ணத்தை இப்படியும் சொல்லலாம்,

தொடர்புக்கு : susibala1986@gmail.com