என்னுடைய "நோக்கியா " வை ரொம்ப நேரமாக நோக்கிகொன்டிருந்தான் என் நண்பன் கோவிந்தன்!
(ஸ்மார்ட், ஸ்டச், வராத காலம்)
ஆள் அழகாக இருப்பான்,, (ஆமா
எந்த நடிகர் சாயலில் இருப்பானு
கேட்ககூடாது)
ஏன்டா ரொம்ப நேரமா? என்னத்தடா செய்யுற? என்றேன்
இல்ல மச்சி, யாரோ புது நம்பர்
வருது அட்டன் பன்றதுக்குள்ள
மிஸ்டுகால் ஆயிடுது இப்ப.
வரட்டும் ஒரே அழுத்து ,,,,
என்றான்
பாத்துடா? அது என் செல்லு
உடைச்சுடாத! என்றேன்
சரி, சரி மச்,,,,,,, கால் பட்டனை அழுத்தி காதில் வைத்து
ஹலோ யாருங்க பேசறது என்றான்
கிட்டதட்ட 2 மணிநேரம் கழித்து
இமயமலையை ஏறிய களைப்புடன் வந்தான்
ஆனால் அவன் முகத்தில்
100சூர்யா பல்பு வெளிச்சம்
இருந்தது!
என்னடா? விசயம் என்றேன்
மச்சி அது ராங்க் கால் இல்ல
என் வாழ்வ மாத்த வந்த. தெய்வ கால் என்றான்? ஆமாம் மச்சி ஒரு
பெண்ணு பேசினா? வாய்ஸ் சூப்பரா இருந்துச்சு அது இது என்று
பேசி கொண்டே போனான்
சரிசரி என்றேன் (எனக்கும் சிறிது எரிச்சல் வந்துச்சு)
அதன்பிறகு வந்த நாட்கள் அவனுக்கு வசந்த நாட்கள்தான்
நோக்கியாவே கதி என்று இருந்தான் மணிக்கணக்கா பேசினான் இரவு பகல் பாராமல்
பேசினான் அவன் அவனை
மநறந்து பேசும்போது எப்படி ஊர், உலகம், வேலை, சாப்பாடு தூக்கம்
நண்பன், எல்லாம் ஞாபகம் இருக்கும்!
ஆக எல்லாமே மறந்துதான் பேசினான் சமயத்தில் மறைந்தும் பேசினான்!
என்னமோ பன்னிட்டு போகட்டும்
என்று நானும் விட்டுவிட்டேன்
(நட்புக்கு இதான் அழகா??)
அந்த வாரம் புது நோக்கியா வாங்கி அவளுக்கு கெடுத்தான்!
எனக்குதான் 2000 ருபாய் நஷ்டம்
(நண்பனுக்கு இதைகூட செய்யவேணாமா?)
"டேய் இதெல்லாம் வேணாம்டா?
இது உனக்கு சரியா வராது,?
என்றேன்
ம்ஹீம் என் அறிவுறைகள் அவனுக்கு கொசு போல அடித்து கன்னத்தில் தேய்த்தான்
(இப்பொழுது நான் யாருக்கும்
அட்வைஸ் பன்றது இல்ல)
அடுத்த வாரம் புது காஞ்சிபுரம் பட்டு சாரி எடுத்து கொடுத்தான்
(மறுபடியும் எனக்கு 1500. நஷ்டம்
டேய், ஓவரா போய்ட்டு இருக்க பாத்துக்க அவ்வளவுதான் சொல்வேன் என்றேன்!
விடு மச்சி நான் பாத்துகறேன்
என்று சிரித்தவன் ,,, நான் கல்யாணம் பண்னினா அவளை மட்டும்தான் பன்னுவேன் இத யாராலும் தடுக்க முடியாது
என்று சீரியஸ்யாகவும் பேசினான்
ம்ம்,,, உன் தலையெழுத்த யார் மாற்ற முடியும்? என்றேன்
அதுக்கு அடுத்த வாரமும்
அவளுடன் ஊர் சுற்றி
உணவகம் சுற்றி, தியேட்டர் சுற்றி
போட்டோ எடுத்து கொண்டு
வந்தான்
அவனுடன் ஒப்பிடும்போது
அவள் சுமார் அழகுதான் நான் இதை அவனிடம் சொல்லவில்லை?
சொன்னால் (காதலுக்கு சாதி, மதம்,
அந்தஸ்து, கண் காது, மூக்கு, வாய் எதும் தேவையில்லை மனசு மட்டும்
போதும் என்று நீண்ட,,,,,,,, பிரசங்கம் சொய்வான்)
அன்று முழுவதும் அவள்
புராணத்தை திரும்ப, திரும்ப புலம்பினான் மேலும், மேலும் என்னை புல்லறிக்க வைத்தான்
ஃபுல்லும் அடிக்க (சரக்கு)
வைத்தான்
""சாரியில் சாமங்கி பூ மாதிரி இருக்கா? சுடிதார்ல சூரியகாந்தி பூ மாதிரி இருக்கா? தாவணியில. தாமரை பூ மாதிரி இருக்கா??
அய்யே என்னத்த சொல்றது
போ மச்சி "" என்று என் போதயை இறக்கினான்
ட்ரஸ் இல்லாம இருந்தா எப்படி
இருப்பா?? என்று கேட்க நினைப்பதற்குள் நான் மயங்கி
சரிந்தேன்
அவளும் என்னைத்தான்
கட்டிக்குவேனு சொல்றா மச்சி என்பது என் காதில் அரைகுரையாக விழுந்தது
இனி அவளால் இவன் தினம் தினம்
புல்லடித்து மட்டையாவான்
என்பது எங்கள் இருவருக்குமே
அப்போது தெரியாது!!
வேலை விசயமாக விதி எங்களை பிரித்தது!
ஆறு மாதம் கழித்து தான் அவனை பார்க்க முடிந்தது?
ஆள் இளைத்திருந்தான், மிகத்தில்
ஒரு வார முடி இருந்தது அவன் தலைக்கு பின்புறம் இப்பொழுது அந்த ஒளிவட்டம் கானவில்லை
கண்கள் இரண்டும் சிவப்பு
ஜீரோ வாட்ஸ் பல்பு போல
எரிந்தது சரக்கு வாசம்
மூக்கை துளைத்தது! பார்க்கவே
பரிதாபமாக இருந்தான்
என்ன மச்சி ஆச்சு? ஏன் இப்படி
இருக்கற? என்றேன்
அவ்வளவுதான்! "ஒ " என்று அழ
ஆரம்பிச்சுட்டான்
அழுது பார்க்காத அவனை
அந்த அழுகை என்னை
என்னவோ .செய்தது!!
நன்றி மீதி அடுத்த பதிவில்
(இவை என் கற்பனையே)
நன்றி
ReplyDeleteசுவையாக நகர்த்தி உள்ளீர்கள்
ReplyDeleteதொடருங்கள்