அரிதாக பயன்படுத்தகூடிய (அப்படித்தான் சொன்னாங்க) இந்த 110 விதியை கடந்த 4ஆண்டுகளில் 115தரம் பயன்படுத்தியாச்சு, ஆட்சி முடிய ஓராண்டு உள்ள நிலையில் நடக்கின்ற சட்டசபையில் இன்னும் என்வெல்லாம் சொல்லலாம்னு சும்மா சும்மனாச்சுக்கும் பார்க்கலாமா??????
*யாரும் வேலைக்கு போகாதிங்க, உங்க வீடுதேடி மாதம் 1லட்சம் ரூபாய் வரும்!
*பலவித விபத்துகளில் உயிரிழப்பவர்களுக்கு இழப்பீடு வழங்கும் முறையை மாற்றி , விபத்திற்கு காரணமானவர்கள்
உயிரிழந்தவர்களுக்கு மாதமாதம் 1000ருபாய் தரவேண்டும்!!!
*பஸ் பிடித்து பள்ளி செல்ல பல மாணவ மாணவிகள் சிரமப்படுவதால் , இனி அவர்கள் ஊருக்கே ஆசிரியர் சென்று சொல்லிதரவேண்டும்!!
*பஸ் மறியல், வன்முறை, தீவைப்பு, கற்பழிப்பு, போராட்டம் போன்ற குற்ற செயல்களில் ஈடுபடாதவர்களுக்கு மாதந்தோரும் 5000ஊக்கத் தொகை வழங்கப்படும்!!
*கற்பழிப்பு குற்றங்களை தடுக்கும் பொருட்டு அவர்களுக்கு அரசு செலவில் திருமணம் நடத்தி வைக்கப்படும்!!
*மழை இல்லாததால் கர்நாடகம் தண்ணீர் சரியாக தராததால் இனி விவசாய நிலங்களில் அப்பார்மெண்ட் ஷாப்பிங் மால் போபோன்றவைகளைபோன்றவைகளை அரசே அமைத்து விவசாயிகளுக்கு வாடகை முலம் அவர்கள் வருமை ஒழிக்கப்படும்!!!
*30ஆயிரம் டாஸ்மாக் வருமானம் எதிர்கடசிகளின் கண்ணை உருத்துவதால் இனி எனது அரசு 30ருபாய்கு பீரும், 25ருபாய்க்கு குவாட்டரும் வழங்கும் சைடிஸ் அனைத்தும் இலவசம்!!!
*அடுத்த ஆண்டு தேர்தலுக்கு முன்னேட்டமாக சுமார் 300நபர்களுக்கு சரியாக குனிவதற்கும் காலில் விழுவதற்கும் பயிற்சி அளிக்க நிதி அளிக்கப்படும்!!
*என் கருத்திற்கு எதிராக, எனக்கு எதிராக அறிக்கைப்போர் அக்கப்போர் கொடுப்பவர்களை அடுத்த மாநிலத்திற்கு கடத்தப்படும்!!!
ஆ,,, ஊ,,, னா வழக்கு போட்டு அரசையும் நீதிபதிகளையும் கிறுகிறுக்க வைப்பவர்களை ,,, சிறையில் தள்ளி சில காலம் கவுன்சிலிங் கொடுக்கப்படும்
அய்யோ இது நடந்த நல்லாயிருக்கும்னு நினைக்கிறிங்களா??
கண்டிப்பா நடக்கும்
அதுக்கு என்ன செய்யனும்னா ?
வயிறு முட்ட சாப்பிட்டு மல்லாக்க படுத்து கண்ண மூடி பாருங்க
கலர்கலராக கனவு வரும் அதில இதுவும் வந்தாலும் வரலாம்
நன்றி!!! இது என் கருத்துதான்! எப்படியிருந்தாலும் உங்க கருத்தையும் சொல்லுங்க!!!
வயிறு முட்ட சாப்பிட்டு மல்லாக்க படுத்து கண்ண மூடி படுத்து இருக்கிறவங்களுக்கு கலர்கலராக கனவு வரும் சரி...... பசிக்குக்கூட கஞ்சி இல்லாதவுக என்ன செய்யுறது.....????
ReplyDeleteஅன்புள்ள நண்பரே ஒவ்வொருவரும் அவரவர் தகுதி வசதி வாய்பு க்கு ஏற்றவாறு கனவு கான்பதில்லையா?? ஏன் கஞ்சி இல்லாதவர்களும் நல்ல சாப்பாடு, நல்ல துணிகள் , இன்னும் இது போல பலவற்றிக்கு கனவு கானலாம் அல்லவா?? எளியவர்களிடம் ஓட்டு வாங்கி வளமையானவர்களை உருவாக்கும் இந்த அரசு தானே யாவற்றிக்கும் காரணம், எத்தனை 10, 5 ஆண்டுகள் திட்டங்கள் வந்தும் என்ன பயன்,???
Deleteதவறாக ஏதும் கூறியிருந்தால் தயவுகுர்ந்து மன்னிக்கவும்!!
தாங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!!
அன்புடன் கரூர்பூபகீதன் நன்றி!!
This comment has been removed by the author.
ReplyDelete