click to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own text
Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

05 October 2015

ம் ....என்னத்த சொல்ல ...?!



""பால் தட்டுப்பாடு ஏற்படும் -செய்தி 

"மாடுக என்னிக்கும் அடம்பிடிச்சதே இல்லங்க!

"இந்த மனுஷ  பயதான் அடம்பிடிக்கிறான் !


""நகை  போடாமல் இருப்பதே மேல் (Male )

"எப்பவும் போட்டுகிட்டே இருப்பது பீமேல் (Female)


"வெளங்காதவனுங்க வெங்காயத்துக்கு போராடினாங்க!
இந்த பருப்பு உளுந்து உங்க கண்ணுக்கு தெரியலையா??


   "பருவ மழையை நம்பி பத்துலட்சம் ஏக்கர் -செய்தி 

   "மீதி  ஏழு கோடி என்பது லட்சம்பேரு பல "தண்ணிய நம்பி "

   
"கண்ணுக்கு மை வச்சா பெண்ணுக்கு அழகு 

"விரல்ல மை வச்சா தமிழ் நாட்டுக்கே அழிவு 


"சுங்க சாவடியில நிக்கிறதால டீசல் வீணாகுதாம்??

நான் கேக்குறேன் எதுக்குயா? அங்க நிப்பாட்டுறிங்க!
வீட்டூல இடமில்லயா ?

தீவாளி வர்ற நேரத்துலதான்  டீசல் வீணானது தெரிஞ்சதா?? 

எப்படியோ பதுக்கி வச்ச சரக்க கொள்ளையா சம்பாதிச்சுடலாம்!!


"மனித வளம் நிறைந்தது தமிழகம் -அமைச்சர்

"உண்மைதானுங்க, சிறிசு பெரிசு "னு எல்லோரும் குடிச்சு  உங்களை நல்லா வளமா வச்சிருக்கோம்ல?


கைக்குழந்தையுடன் பிச்சை எடுக்கிறார்கள் ?

நாம யாரு கண்ணு தெரியாதவனுக்கு காலணா தரமாட்டோம் ,இதுல கைக்குழந்தைக்கு கப்பலா தருவோம்??


"புலி "க்கு வரியில்லையாம்?

வரிகுதிரை பார்த்திருக்கேன்?
இந்த வரிப்புலி பார்த்துரிக்கீங்களா??

பார்த்த சொல்லுங்க!!


கடுப்பாகி கன்னா பின்னானு எழுதிட்டேன்
நன்றி!! 

26 September 2015

இதனால் தெரிவப்பது என்னவெனில்..........?!



""அன்பு தாய்மார்களே!  ஓவர் குடிகாரர்களே! ஆசை எதிர்கட்சி எதிரிகளே! அக்கப்போர் தரும் அரசியல்வாதிகளே!!

      உங்களுக்கெல்லாம் தெரிவிப்பது என்னவெனில் 
நீங்க ஆவலா எதிர்ப்பார்த்த "மது ஒழிப்பை ஒருபோதும் என்னாலும் சரி எந்த காலமானாலும் சரி ஒழிக்க முடியாது??

     உலகம் முழுவதும் மதுக்கடைகள் இருக்கும் போது நான் மதுகடையை மூடுவேன் என்று எதிர்பார்க்கலாமா?

    போராடுபவர்கள் முதலில் இந்தியாவில் இருக்கும் மதுக்கடைகளை ஒழிக்க சொல்லுங்கள் பிறகு நானும் ஒழித்துவிடுகிறேன்!!

    சில எதிர்கட்சிகள் மதுவை ஒழிப்பதாக பகல்கனவு காண்கிறார்கள்! அது நடக்குமா?

  அன்பு குடிகாரர்களே "நீங்கள் பகல் இரவு என்று எந்த நேரமும் மப்பும் மந்தாரமாக கனவு கன்டால்தான் "என் வளர்ச்சியையும் இந்தியாவின் வளர்ச்சியையும் முன்னேற்ற முடியும் என்பதை நினைவில் கொள்க!!

      தமிழ்நாட்டில் நீங்கள் ஆண்டுக்கு குடிக்கும்அளவ வெறும்  85  மிலிட்டர்தான்! பக்கத்து மாநிலங்களை பாருங்கள் 100 110. என்று வளர்ச்சியடைகிறார்கள் !!

     நாம் எல்லா துறைகளிலும் வளர்ச்சியடைந்து இதில் மட்டும் வளரவில்லை என்றால் எதிர்கால வரலாறு புவியியல் குவியியல், எல்லாம் மன்னிக்குமா ??

    ஓவராக குடிப்பவர்களை "அன்பால் "திருத்துங்கள்! அது எப்படி என தெரியவில்லை என்றால் "என் அமைச்சர் பெருமக்களை பார்த்து நடந்து கொள்ளுங்கள்! 

      தாய்மார்கள் யாரும் வருத்தமடையாதிர்கள்
எல்லா துறைகளில் நீங்கள் சாதனை படைத்தாலும் மதுகுடிக்கும் துறையில் சற்று பின்தங்கி உள்ளீர்கள் என்பதை உணருங்கள்!

    உங்களை உங்கள் குறைகளை கேட்பதற்காக ஒருவர் ஊர் ஊராக சுற்றிவருகிறார்! இது போல
இன்னும் எத்தனை பேர் சுற்றிவந்தாலும்? மதுவையும் என்னையையும் விட்டுவிடாதிர்கள்!!

    உங்களை காக்கும் சக்தி கடவுளுக்கு அடுத்த படி முதல் படி என எல்லா படியும் என்னிடம் மட்டுமே உள்ளது!!



எல்லாம் கற்பனையே!! ஆனால் நடப்பது உண்மையே நன்றி!!