Showing posts with label என் கிராமத்து கதைகள். Show all posts
Showing posts with label என் கிராமத்து கதைகள். Show all posts

07 November 2015

வீர "சிங்கம் "வராரு ..2"வீரசிங்கம்  புல்லட்டில் வந்து இறங்கியதும் சக வாத்தியார்களும் மொத்த மாணவர் கூட்டமும் திரும்பி பார்த்தார்கள் (வீரசிங்கம் என் சித்தப்பா  இவரை பற்றி சொல்ல பல வீரகதைகள் இருக்கு பிறகு சொல்கிறேன், ஒரு வார்த்தையில் சொன்னால் சுத்துபட்டி ஊர்களுக்கு இவரின் வீரம் பற்றி தெரியும்)

எவன்டா "என் புள்ளய அடிச்சது என்றவாறு புல்லட்டிலிருந்து இறங்கினார்!

சகவாத்தியார்களில் ஒருவர் "ஏ ங்க என்ன வேனும் "என்றார் 

வீரசிங்கத்திற்கு கோபம் அடங்கமால் மறுபடியும் (இவரும் புல் போதையில்தான் இருப்பார்) எவன்டா கால் அமுக்க சொன்னா மயிராண்டி என்றார் 

"அதற்குள் சீனிவாசன் வாத்தியாரே "ஏன் நாந்தான் "என்றார் வீரசிங்கத்தை பற்றி தெரியாமல் 

"நாந்தான் "என்று சொல்லிமுடிப்பதற்குள் "பட்டார் பட்டார் "என்று வாத்தியாரின் இரு கண்ணமும் சிவந்து ரத்தம் வருமளவுக்கு அடித்து உதைத்தார் 

சகவாத்தியார் யாரும் தடுக்கவும் வரவில்லை. புடிக்கவும் வரவில்லை 

புள்ளைகளுக்கு சொல்லித்தர வர்றியா உன் பு...அமுக்க வர்றியா என்று வாத்தியாருக்கு இரு கண்ணமும் ஒரு கிலோ வீங்குமளவுக்கு அடி 

"ஒழுங்கு மருவாதியா பாடம் சொல்லிக்கொடி இல்லனா என்ன பண்ணுவேனு எனக்கு தெரியாது என்றார் 

யோய் நீ என்னய்யா பண்ணுவ "என்று வீராப்புடன் வந்த தலைமை ஆசிரியர் சீறினார் 

"சும்மா இருடா மயிராண்டி இதான் நீ பாத்துக்கிற லட்சணமா?
எவன்கிட்ட சொல்வ நீ யார வேனும்னாலும் கூட்டிகிட்டுவாடா அதுவறைக்கும் நான் இங்க இருக்கேன் "என்றார் வீரசிங்கம் 

அடிவாங்கிய வாத்தியார் மயக்கம் வந்து விழ பள்ளிக்கூடம் பரபரப்பானது 

இதற்குள் விசயம் தெரிந்து உள்ளூர்காரர்களும் வந்துவிட 

இவரும் விசயம் சொல்ல 

எல்லோரும் "ஆமாப்பா "இந்த வாத்தியாரு தினம் போதையில் வர்றதவர்றத
பாத்திருக்கன் என்றார்கள் 

பலவித சச்சரவுக்கு பிறகு தலைமை ஆசிரியர் வந்து சரிப்பா "இது நடக்காம. இனிமே பாத்துக்கறன் என்றார் 

ஒருவழியாக பிரச்சனை முடிந்து வீடுவந்து சேர்ந்தோம்!

அடுத்த நாள் அந்த வாத்தியார் வரவில்லை! நாங்கள் 8வகுப்பு முடித்து வரும்வரைக்கு ஆண் வாத்தியார் யாருமே அந்த பள்ளிக்கூடத்திற்கு வரவில்லை 

வீரசிங்கம் இருந்தவரை யாரும் வாலாட்ட முடியாது 

சிறுநீரக பாதிப்பால் தன் 45வயதில் இறந்தார்!

அவர் இறந்து இன்றுடன் 15ஆண்டுகள் முடிந்துவிட்டன

அவர்மகன் வேலுச்சாமியும் யாரும் எதிர்பாராமல் தன் 28வயதில் இறந்துவிட்டான்! 

இவர் இறந்த பிறகு இன்று எங்க ஊரில் நடக்காத காரியம் எல்லாம் நடக்கிறது 

அதே வீரத்துடன் சொர்க்கத்திலுயோ நரகத்திலியோ இருப்பாரே என்னவோ!


இங்கு நான் எழுதியிருப்பது முழுக்க உண்மை! அவரை பற்றி நிரைய கதைகளை நேரம்கிடைக்கும் போது உங்களிடம் பகிர்வேன் நன்றி! 


06 November 2015

வீர "சிங்கம் "வராரு"எங்க ஊரிலிருந்து ஒன்றறை கி மீ தூரம் உள்ள பக்கத்து ஊரில் ஊ.ஓ.ந.நி.பள்ளிகூடத்தில்தான் படித்தேன்! என்னுடன்  பலரும் எங்க ஊரிலிருந்து படித்துவந்தோம்!

பள்ளிக்கூடம் இரண்டு கட்டடத்துடன்தான் இயங்கிவந்து! ஒரு கட்டம் காமராசர் காலத்து கட்டடம் !இன்னென்று பஞ்சாயத்து தலைவரின் முயற்சியால் நிதி வசுல் மூலம் கட்டியது 

இந்த கட்டடம் என்பதும் சுற்றிலும் சுவருடன்  கதவு சன்னல் ஏதுமில்லை தரைக்கும் மணல்தான் 

பக்கத்து ஊரிலிருந்து சீனிவாசன் என்ற ஆசிரியர்தான் மூன்றாம் வகுப்பு வாத்தியார்! நானும் எங்க ஊர் என் வயது பசங்களும் அடக்கம் 

சீனிவாசன் வாத்தியார் ஒல்லியான உடம்புடன் நெடு நெடு உயரத்துடன் நல்ல சிகப்பாவும் இருப்பார்! களையான முகத்தில் கண்கள் மட்டும் மிளகாய் பழமாதிரி செக்கசெவேல்னு இருக்கும் 


காலையில் வகுப்புக்கு வரும்போதே புல் சாராய மப்புடன் வருவார்! பள்ளி முடிந்து வீடு  போகும்  போதுகூட போதை கண்களில் மிச்சமிருக்கும்!

வகுப்புக்கள் தொடங்கியதும் ஒரு அரைமணி நேரம் பாடம்நடத்துவார் !அவர் போதையில் நடத்துவது எங்களுக்கு ஒன்றும் புரியாது அல்லது விளங்காது!


போதை தலைக்கு ஏறியதும் "டேய் படிங்கடா "என்று சொல்லிவிட்டு மேசைமீது தலைவைத்து குறட்டை விடுவார்!

அதற்குப்பிறகு நாங்களும் மணற்தரையில் பாண்டி கிச்சுதாம்பலா அப்படினு பல விளையாட்ட புழுதி பறக்க விளையாடுவோம்!

அப்பபப்ப தலைய தூக்கிபாத்து "டேய் சத்தம் போட்டு தொலையாம இருங்கடா "என்பார் 

மதிய உணவுக்கு பின் இதே கதைதான் 

ஆனால் அவர் தூங்கும் சமயம் நாங்க அவர் காலை பிடித்துவிட வேண்டும்!

மதியம்  சாப்பிட்டதும் எங்களுக்கும் தூக்கம் வந்துவிடும்!

தினம் தொடரும் இந்த கால் பிடிக்க ஒரவர் பின் ஒருவராக சுழற்சி முறையில் எங்களுக்கு பணி ஒதுக்குவார்!

அப்படித்தான் அன்று எனக்கும் எங்க ஊர்காரன் வேலுசாமிக்கும் கால் பிடிக்கும் பணி வந்தது !

வாத்தியார் வசதியாக மேசைக்கடியில் காலை நீட்டி மேசைமேல் தலைவைத்து தூங்க 

நானும் வேலுச்சாமியும் காலை அமுக்கிகொண்டிருந்தோம் 

அமுக்க அமுக்க எங்களுக்கும் துக்கம்வந்து தூங்கிப்போனோம் 

என்னைவிட வேலுச்சாமி பயங்கர கருப்பாக இருப்பான் சரியான முரடன் வேறு!

நாங்க ஒரு நொடி கால அமுக்கலனா கூட வாத்தியார்  காலை உதறி ஞாபகப்படுத்துவார் 

மீண்டும் அமுக்க வேண்டும் மீண்டும் தூக்கம் மீண்டும் கால் உதறல்!

நான் எப்படியோ  தூக்கத்த கட்டுபடுத்தி அமுக்கிகொண்டிருந்தேன்!

வேலுச்சாமி தூங்கி தூங்கி விழுந்தான் 
நானும் "அடேய் தூங்காதடா "என்று சொன்னேன்!

என் பேச்சையும் மீறி தூங்க. தூக்கம் கலைந்த வாத்தியாருக்கு கோபம் வர 

வேலுச்சாமியை ஓங்கி நெஞ்சில் ஒரு உதை விட்டார்!

தூக்க கலக்கத்தில் எகிறி விழுந்த அவன் பெரும் அழுகையுடனும் சீறும் சினத்துடனும் வாத்தியாரை பார்த்து 

"ஏன்டா உதைச்ச. பு மவனே "என கத்த மற்ற வாத்தியார்களும் வந்தார்கள் 

வேலுச்சாமி அழுகையுடன் "இப்ப பாருடா "என்றவன் பையை தூக்கி கொண்டு ஓட்டம் பிடித்தான் தன் அப்பா வீரசிங்கத்திடம் சொல்ல 

வீரசிங்கம் புல்லட்டில் வந்து இறங்கினார் 

மொத்த பள்ளிக்கூடமும் கலகலத்து பார்த்தன 

என்ன நடந்தது தெரியுமா!
நன்றி மீதிய நாளைக்கு சொல்றேன்!!