Showing posts with label கீதன் கவிதைகள்!!!. Show all posts
Showing posts with label கீதன் கவிதைகள்!!!. Show all posts

26 October 2015

அப்பாச்சி ....!!

"என்னுடைய முகநூல் வாட்ஸ்அப் கவிதைகள்!! 


"
அப்பத்தா  
ஆச்சிகளை

முதியோர் இல்லத்தில் 

சேர்த்துவிட்டு 

"அப்பாச்சிகளை "

ஷோரூம்களில் 

தேடிக்கொண்டிருக்கிறோம் ...!!


"நீ கிடைக்க.

வெள்ளைப்பிள்ளையாருக்கு

108தேங்காய்  உடைத்தேன்

எதிரே ..

ஏன் வந்தாய் 

1008தேங்காயாய் அல்லவா 

சிதறிப்போனேன் ,.!!


"கம்பங்கூழ் குடிச்சு 

உயிர வளர்த்தவங்க ..

நுங்கு குடிச்சு 

தெம்பு வளர்த்தவங்க ..

சாராயம் குடிச்சு 

சண்ட வளர்த்தவங்க..

டாஸ்மாக்ல குடிச்சு 

இப்ப அரச வளர்க்கிறாங்க ...!!
"தவறி விழுந்தோ.

தன்னால் விழுந்தோ


நல்ல விதைகளை 


முளைக்க  விடவதேயில்லை 

நாம் ...!!


நன்றி! நாளைக்கு 4Gகவிதைகள் வரும் 

06 October 2015

கால் கிலோ கவிதைகள் ..!
""உன் ...
குலத்தெய்வத்திற்கு.,.

குத்துவிளக்கேற்றி ..

கும்பிட்டுவந்தேன் ...!


"அன்றாடம் அபிஷேகம் செய்துவந்தேன் ...

அமாவாசையன்று ...

அக்னிசட்டி ஏந்தினேன் ....!


"அய்யனாரும் நானும் ...

அண்ணன் தம்பிகளானேம் ...!


"அசுர சக்திகளை...

அழிக்கின்றாராம் அய்யனார் .,

உன் அண்ணன்கள் சக்தியை ..

யார் ஒழிப்பது ,?

 "நான் சாமியாராகும் ..

தருணத்தில் ....

சம்மதம் என்கிறாய் ...!


""குலம் மாறக்கூடாது குத்தமாகிவிடும்?

குறுக்கே நுழைகிறார் .,

உன் முரட்டு அப்பா .,!


"அய்யனாரோ...

ஆனந்தமாய் சிரிக்கிறார் ...!      


உன் மதியையும் .,

என் விதியையும் ...

என்னவென்று சொல்லட்டும் ..!!

        
நன்றி! இவை 2006ல் நண்பர்களேடு உதவியால் புத்தகங்களாக்கி  நண்பர்களாக பிரித்துக் கொண்டேம்!

பல விசயங்கள. புதிதாக எழுத நினைத்தாலும் கணினி இல்லாததால் கைபேசியில் எழுத. கடுப்பாகிறது!

எந்த திரட்டியிலும் இணைக்கவும் இல்லை? எனவே 

தொடர்ந்து ஊக்கபடுத்தும் உள்ளங்களுக்கு  நன்றி நன்றி!!! 

27 September 2015

கால் கிலோ கவிதைகள்"ஆராத்தி காண்பிக்கிறாய். ..

அம்மனுக்கு ...

சந்தன சிலைகள் 

எப்போது 

தட்டேந்தி 

ஆராத்தி எடுக்க ..

கற்றுக் கொண்டன ..

ஆச்சரியம் தாளாமல் 

அம்மனே..

பெருமூச்சு விடுகின்றாள் ...!!


நன்றி !! 

18 September 2015

பண்பாடு படும்பாடு!!!!


"புலி விரட்டியப் பரம்பரை நாங்க ...

புறநானூறு  புகட்டிய தமிழன் தாங்க ...

தமிழ் வளர்த்து லாபமில்லை ...இங்கு

சாதி வளர எந்த தடையுமில்லை ...

மேலைநாட்டு கல்வி பாரு ...

அது மேலானவர்..பணத்தீவுதானே ...

வறியவர் வாக்கை கேளு .அவர்...

மண் சுமக்கும் கதை எழுது ....

குனிவதற்கு இலக்கணம் வகுத்தோம் ..

கூன்குருடாய் அவதரிக்க மறுத் தோம் ...

மீசைகவி கண்ட மாந்தரொல்லாம் ....

மூச்சுமுட்ட குடிக்கிறது பாரினிலே...

தலைநிமிர்ந்து நில்லடா? பல தலைமுறை -சொல்லிவிட்டோம் ....

தள்ளாடாமல் நில்லடா? என்பதை நம் -தலைவிதியாக்கிவிட்டோம் ..!

மறத்தமிழன் மரித்துவிட்டான் ....

மதுத் தமிழனாய் பிறந்துவிட்டான் ..!

படித்தவன் பரதேசம் போ...

பாமரன் இறந்து போ...

விவசாயி வீணாகிப் போ...

விடிவுகாலம் இல்லையதை மறந்து போ..!

தமிழ் வாழ "முற்றமிழ் "வேண்டும் ...

தரணி சிறக்க நற்றமிழன் வேண்டும் ..!!இப்படைப்பு "வலைபதிவர் சந்திப்பு 2015 மற்றும் தமிழ்இணைய கல்வி கழகம் நடத்தும் "மின்தமிழ் இலக்கிய போட்டிகள்"களுக்காக நான் எழுதிய சொந்த படைப்பாகும்!

வகை (4) புதுக்கவிதை போட்டி!
முன்னேறிய உலகில் பண்பாட்டின் தேவைகள்!
இதற்குமுன் எங்கும் வெளியானதல்ல என்றும் முடிவுகள் வெளியாகும்வரை  வேறெங்கும்  வெளிவராது என்றும் உறுதியளிக்கின்றேன்!

-கரூர்பூபகீதன் -


12 September 2015

எங்க ஊருக்கு வராதிங்க!! 3


""பஞ்சு சுமந்த ....

   பருத்தி காடு ....

   இப்ப ....

   பந்து அடிக்கிற....

   மைதானமாச்சுங்க....!!


    ""வயிறு முட்ட...
       
       தண்ணி குடிச்ச வயக்காடு...

        இப்ப....

        மசக்ககாரியாட்டம் ...

        வாடி வதங்குதங்க ...!!


        "கற்பம் தாங்கிய...

         கம்பு காடு ....

          இப்ப ,..

        தரிசாச்சுங்க ....!


      "கருது சுமந்த களம் ...

       இப்ப...

      கான்கிரிட் வீடாச்சுங்க ....!!


      "சோளம் தின்ன...

       குருவி கூட்டமல்லாம் ...

       இப்ப...

       முழிபிதுங்கி ஓடிருச்சுங்க ...!!


         


     "நெல்லு கட்டு சுமக்க....

     கூடின கூட்டம் ...

    இப்ப....

    கூப்பன் கடையில 

   கூடுதுங்க ...!!


   ""அரிசி பருப்பு ...

    விளவிச்சவனுக்கு ....

    அரசு கொடுத்த பரிசு ...

    "அய்யோனு சொல்லகூட...

     ஆளில்லாத அவலம் தாங்க .,!!

  
      "நீங்க இங்க வாழ வரவேணாம் ..

      எப்படி வாழறேம்னு பாக்க வாங்க ....!!
    

06 September 2015

கால் கிலோ கவிதைகள்!!!

"""நீ...

   பாவம் என்று சொன்ன ....

  பச்சக்கிளியை...

  பாசத்துடன் ....

 வளர்த்துவந்தேன் .,..!

"அது ..."

 உன்னைப் போலவே...

 பிடிக்கவில்லை....

 என்பதையே...

 பிடிவாதமாய் ....

சொல்லிக் கொண்டிருக்கிறது ....!!!

"""உனை பார்த்த பிறகு ....

    என்னை ....

    நானே ....

    கேள்வி கேட்பதுண்டு....

   ""நீ யார் ""

    அதையே தான். ..

    நீயும் கேட்கிறாய்.,..

   ""நீ யார் ""


நன்றி!! நன்றி!!