Showing posts with label இவையும் கவிதைதான். Show all posts
Showing posts with label இவையும் கவிதைதான். Show all posts

11 September 2015

குனிந்த கவிதை

         "உனக்கும்....

          எனக்கும் ....

         சிலை வைப்பது உறுதி.,...


          "நீயிறுக்கும்போது ....

           நான்....

          இறந்த பிறகு ,....!!
    ""இந்த வருடம் ....

     நோபல் பரிசு ....

     நாமிருவருக்கும் தானாம்,...!!      "உனக்கு .,,..

       காக்க வைத்ததற்கும்...

      எனக்கு ....

       காத்து கொண்டிருப்பதற்கும் ....!!நன்றி !ச்சும்னாச்சுக்கும் எழுதினேன்! நல்லா இருந்தா ஊக்கப்படுத்துங்கள் நன்றி!!!! 

04 September 2015

எங்க ஊருக்கு வராதிங்க!!!""அந்த கப்பலும் பாத்ததில்ல ...

 கடலும் பாத்ததில்ல ....

 ஏரோபிளான் பாத்ததில்ல ...

 வானம் பாத்த மனுச நாங்க!!! ""


""ஆள்ற மவராசி யாருனு ...

கேட்டதுல்ல...

அவ ராசியோ  என்னமோ...

அஞ்சு வருசம் மழையுமில்ல ...!!""எத்தினி காசுல திட்டம் ...

அது சேரல எங்கள மட்டும் ....

வெவசாயத்துக்கு ஒரு ஆபிசராம் ,...

எம்பது வயசாச்சு எனக்கு ,...

வெளங்காத பயல பாத்தில்ல நானும் ...!!!""இங்க மழ பேஞ்சா ....

  மனசு குளிரும் வவுறு நெறையும்!!

பட்டணத்துல்ல கொசு  வரும்னு ...

புலம்பிறிங்க ....

இந்த அநியாத்த என்ன சொல்ல..
""வச்ச வெள்ளாம வீடு வராம ...

ஒருநாளும் ,..

வக்கனய தின்னதில்ல...

நிம்மதிய நித்திரயுமில்ல...!!


""கும்மி அடிச்ச ...

குமரிக எல்லாம் ...

கூடி கூடி சீரியல் பேசுதிங்க ....

ஆடு மேய்ச்ச ...

பயலுக எல்லாம் ....

ஆண்ராய்டு கேக்குதிங்க ...!!


விஞ்ஞான வளர்ச்சி ...
வெவசாயத்துக்கு வீழ்ச்சி ,!!

""மூனு போகம் விளஞ்சதல்லாம்

இப்ப முள்ளுகாடா ஆய்டுச்சு ,...

வேல கேட்க எங்க விதியாச்சு!!!


""நீங்க இங்க வாழ வரவேணாம் ,

எப்படி வாழ்றேம்னு பாக்க வாங்க!!!

நன்றி!! உங்கள் கருத்துகளை கூறுங்கள் நன்றி! !!

01 September 2015

இ.பி.கோ பட்டபாடு!!!

       ""அதெப்படி ....

         பொய்யைக்கூட ...

         பொருத்தமாய்....

         சொல்லமுடிகிறது ,..

          உங்களால் மட்டும் .....

          ""எல்லாம் எதிர்கட்சி சதி ""

          எங்களால்.....

          உண்மையைக்கூட...

          பொய்யாகத்தான்...

         சொல்லமுடிகிறது ....

         ""எல்லாம் ஆளுங்கட்சி அதிகாரம் ""          ""!!ஐந்து வயதில் ....

             ஆரம்ப பள்ளிக்கூடத்தில்

            அ "னா  ஆ "வனா ...

            சொல்லிக் கொடுத்தார்கள்

            அன்றே.,.,

            "அரசியல் "  "ஆபத்து ""...

             என்றுதான்...

             எழுதிக்காட்டினேன் "!!!நன்றி! புதிய பதிவர்களை ஊக்கப்படுத்துங்கள் நண்பர்களேநண்பர்களே!! நன்றி! 

31 August 2015

நிமிரத் தெரியாதவர்கள்!!!      ""தடுக்கி விழுந்தேன் ....

        விழுந்த இடம் .....

        பள்ளமோ, பாதாளமோ அல்ல...

        உ(ங்கள்)ன்  மதுகுழி (டாஸ்மாக்)!!!?


        ""அடக்கு முறைக்கு ....

          அடிபணிய மாட்டோம் ...

          என்ற நாட்டில் ....

          அவரிடம் மட்டும் ....

           குட்( Good) வாங்க....

           குனிந்துகொண்டே...

           இருக்கிறார்கள் ,...

           இவர்கள்!!!!!சின்ன கேள்வி :::தமிழ்நாட்டில் ஒரு நாளைக்கு சுமார் 24 கிலோ மீட்டர் நடந்து நடந்து சம்பாரித்து தருபவர்கள் யார்???? தெரியுமா???


சின்ன தகவல் ::தற்போது ப்ரிட்ஜ் வாங்க நினைக்கறவங்க வாங்காதிங்க!!
ஏன்னா அடுத்த தேர்தலுக்கு ப்ரிட்ஜ் தரலாம்னு யோசிக்கிறங்களாம்?! (ஐ ஜாலி! ஜாலி)

நன்றி! !நிறைகுறைகளை சுட்டிகாட்டுங்கள் நன்றி!?! 

30 August 2015

கால் கிலோ கவிதைகள்!!


      ""உன் ....

       மின்சார விழிகள் ...

       திறவாவதால் ....

      அணுசக்திக்கு ...

      ஆசைப்படுகிறது ...

     இந்தியா ,...!!""
   ""என்னைப் பற்றி ...

     எல்லோரிடமும் ...

     எதையாவது. ...

     எந்நேரமும் ....

     சொல்லிக் கொண்டிரு ...

    "ஏனென்றால்????

   சில சமயங்களில் ...

   நீ..யார் என்பதை,.

    நானும்.,

   நான் யார் என்பதை .,

   நீயும்

   மறந்துவிடுவோம்,...!!""


நன்றி இவை 2005நான் கிறுக்கிய தொகுப்பிலிருந்து மறுபதிவு!! உங்கள் கருத்துகளையும் கூறுங்கள் நன்றி!! 

29 August 2015

கால் கிலோ கவிதைகள்!!

  "ஆத்தங்கர ஓரம் ,
   
    அந்தி சாயும் நேரம்,

   ஒத்தயில. போறவளே .....

   ஒத்த நொடி நில்லே ....."!!


    உம்முகம்  பாத்த ,.....

    கம்பங்காடு தல சாய்க்கும் .....

     உம்   நிறம் பாத்த ......

      சூரியகாந்தி பூ சிவக்கும் ,......!!


       காடு உழும் அய்யனுக்கும் .....

      கழை வாரும் ஆத்தாளுக்கும் .,...

      கஞ்சி கொண்டு  போறியே .....

     எம் பசி  போக்க .....

    எப்ப வருவ ....,!!


     ""பாவட சரசரக்க   ஓடாத ..,

       பருத்தி காடு பாவமடி .,...

      பச்ச புல்லும் நோகுமடி ...""    ""பருத்தி சீலக்கி பவுசு....

     உன்னால வந்ததடி மவுசு ....""


      ""நீ ஆடு மோய்க் போறியா.,...

        அப்படித்தான்  நினைக்குது ஊரு ....

         எம் மனச மோய்ப்பது

          யாருக்காவது தெரியுமானு பாரு.,...        ""உனை பாக்கலன .....

         கரும்பு காடு காயுமடி .,..

         கடல செடி கருகுமடி ,....""


        ""எதித்த வீட்டு சிறுக்கி. ....

        எனை பாத்தானு .,...

        கருக்கருவால. தீட்டி ....

         சண்டக்கி போன....கருவாச்சி!! ""


        ""தை பொங்கலன....

         தை தைனு குதிப்ப ....

         மாட்டுக்கு முத. சோறு ,...

         மனிஷனுக்கு மறு சோறு

         ஓரவஞ்சன செய்யாத ....

         பாசக்காரி நீ ..,!!""

     

        ""சலிக்காம வேல இருந்தாலும் ..,..

          சல்லீச செய்வ .,....

         எப்படினு கேட்ட .,...

         மனசுல மச்சான் இருக்கானு ....

        மதர்ப்ப திரியுவ ,....!!""


          ஆத்தங்கர அம்மன்கிட்ட ....

          அப்படி என்ன பேசுவ ,...

            ஒட்டு கேட்டாலும் ,...

           ஒண்னுந் புரியாது எனக்கு ....!!""


          நான் காலேஜ் படிச்சிருந்தும் ....

          கவர்மெண்டு வேலயிருந்தும்

         நாகரிகம்  தொரியாதவனு ....

        தள்ளிவச்சது எந்தவறுடி .,.,!!

 
        ""உன் விவசாய பாசத்திக்கும் ....

         வெள்ளாமை பெருமைக்கும் ,...

         முன் ,....

        என் கவுரவம் கால் தூசடி ,...!!!!!

நன்றி இவை கால் கிலோ கவிதைகள் எனும் நான் எழுதிய. பதிப்பின் மறு பதிவு  எழுதிய ஆண்டு 2005
உங்கள் கருத்துகளை சொல்லுங்கள் நன்றி?!!!!

        

24 August 2015

வாஸ்கோடகாமா!! !!

*    இந்தியாவை 
       கண்டுப்பிடித்த சமயத்தில் 
      நீ (ங்கள்) யிருப்பது,
       (ஜெ,  க ,ரா, வி , தி, வை,)
      தெரிந்திருந்தால்,
       வந்த வழியே,,,,
        திரும்பிறுப்பான்?
         வாஸ்கோடகாமா !!!!?
     *கீழ்கண்டவற்றிக்கு தமிழர்கள் தேவை!!
        ஓட்டு போடுவதற்கு,
         குடித்து குடும்பத்தை அழிப்பதற்கு,
       மது ஆலை முதலாளிகளை 
        வாழ வைப்பதற்கு,,
        பேனர் கட்டுவதற்கு,
         60டிகிரியில் குனிவதற்கு ,
         வாழ்க கோஷம் போடுவதற்கு!!!!! 
      *

20 August 2015

இவையும் கவிதைதான்

*அவர் கும்பிடும் 
சாமி "யைத்தான் நானும் 
கும்பிடுகிறேன்,
மொதலாளி மட்டும்
மேலும் மேலும் 
பணக்காரராக!!!
நான் மட்டும் 
கூலிக்காரனாக!!!!!*ஐயர் வரும்வரை 
அமாவாசை காத்திருப்பதில்லை 
இப்போது,
கடவுள் காத்திருக்கிறார்
கதவுகள் திறப்பதற்கு!!!


*இன்று 
எந்த கடவுளுக்கும் 
அதிகாரமில்லை?
அறங்காவலர்
முடிவே இறுதியானது!!?