click to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own text
Showing posts with label தமிழ் வளர்ச்சி கட்டூரை. Show all posts
Showing posts with label தமிழ் வளர்ச்சி கட்டூரை. Show all posts

23 September 2015

நவீன காலத்தில் -கிராமக் கண்ணோட்டத்தில் தமிழ் வளர்ச்சி -ஒரு பார்வை!!!


"நாம் வெள்ளைகாரர்களிடமிருந்து சுதந்திரத்தை மட்டுமா  ?வாங்கினோம், அவர்கள் விட்டுச்சென்ற கட்டடங்கள், சாலைகள், பாலங்கள்  கூடவே இலவச இணைப்பாக ஆங்கிலத்தையும் பெற்று
இன்று வரை தமிழை கொஞ்சம், கொஞ்சமாக ,அழித்துக்கொண்டுவருகிறோம்! என்பதுதான் அப்பட்டமான உண்மை! கணினியை கண்டுப்பிடித்ததும் அவர்கள்தான்! அந்த கணினியில் நம் தமிழைப் , புகுத்தி அழகுபார்த்து,
வளர்ப்பதற்கு பெரும் முயற்சி எடுத்து வருகிறோம் என்பதே நிதர்சனம்!

அன்று என் பையனுக்கு ஆங்கிலமே தெரியாது? என்ற நிலை மாறி இன்று என் பையனுக்கு தமிழே தெரியாது என்ற நிலைக்கு வந்துவிட்டோம! இப்படி சொல்வதுதான் கெளரவம், பெருமை, சாதனை, என்று படித்தவர் படிக்காதவர் பாகுபாடு கிடையாது!

தமிழக அரசில் அரசு வேலையில் இருப்பவர்கள்
13 ,00000) பதிமூன்று இலட்சம் பேர்! இவர்களின் குழந்தைகள் எல்லாம் அரசு பள்ளியில்தான் படித்து வருகிறார்கள் என்று யாராவது கூறமுடியுமா? கைநிறைய சம்பளம் வாங்கும் இவர்கள் அரசு பள்ளியில் சேர்த்தால் அவர்கள் கெளரவம்  என்னாவது, சமுகத்தில் அவர்கள் பெருமை என்னாவது?? 2013-14ஆண்டில் அரசு தொடக்கப்பள்ளிகள் 65.16 சதவிகிதமாகவும் தனியார் தொடக்கப்பள்ளிகள் 34.84 சதவிகிதமாகவும் அதிகரிப்பதற்கு யார் காரணம்? தற்போது அரசும் தொடக்கப்பள்ளிகளில் ஆங்கில கல்வியை கொண்டுவந்து விட்டது? எதற்காக ?எல்லா மக்களுக்கும் , தனியார் மோகம் பிடித்து ஆட்டுவதால்
தமிழ் பள்ளிகள் தரமிழந்து விடும் என்ற ஆதங்க அரசியல் காரணம்தான்! எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றால் தனியார் பள்ளிகளை அனைத்தும் தடை பண்ண வேண்டியதுதானே? மாட்டவே மாட்டார்கள்! ஒவ்வொரு தேர்தலுக்கும்கோடி கோடியாக அள்ளிதரும் அட்சய பாத்திருத்தை ஆட்சியாளர்கள் புறக்கணிப்பார்களா?  மக்களும்தான் விட்டுவிடுவார்களா? பள்ளி நடத்தும் பண முதலைகள் வேடிக்கைபார்ப்பார்களா!!!

இந்த நிலையில் தமிழை எப்படி வளர்ப்பார்கள்??
இருக்கவே இருக்கிறார்கள், வறுமை கோட்டிற்கு கீழ் இருப்பவர்கள்! நம் சமுகத்தில் பணம் உள்ளவர்களுக்கு ஒரு பள்ளிக்கூடத்தையும, சாதாரணமானவர்களுக்கு ஒரு பள்ளிக்கூடத்தையும் ஏற்படுத்தி மிக சிறப்பாக "தமிழை வளர்ப்பது நாம் தான் என்பதில் பெருமைபட்டு கொள்ளலாமா???


"தமிழ் படிக்க அரசு பள்ளிகளுக்கு செல்லும் நம் மாணவர்  விகிதம் 2013-14ஆண்டுகளில்
41.06சதவிகிதம் மட்டுமே! அதே தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் 58.94
சதவிகிதம்! நினைத்துப்பாருங்கள் எதில் நாம் வளர்ச்சி அடைகிறோம்??

வளர்ந்து வரும் நவீன காலத்தில் கிராமம் மட்டும் விதிவிலக்கா? இல்லை !அவர்கள் விவசாயம் பாதாளத்திற்கு போனாலும் அவர்கள் குழந்தைகள் பெரும்பாலும் தனியார் பள்ளிகளுக்குதான் அனுப்புகிறார்கள்? காரணம், எங்கள் தலைமுறைதான் காடு கரடு என்று அலைந்து திரிகிறோம்! எங்கள் பிள்ளைகளாவது நன்றாக, படித்து அரசு வேலைக்கு போகாவிட்டாலும், தனியார் நிறுவனத்திலாவது,  கைநிறைய சம்பாதிக்க தனியார் கல்வியே சிறந்தது என்கிறார்கள்!
தமிழை மட்டுமே படித்தவர்களுக்கு தமிழ்நாட்டில் வேலை கிடைக்குமா?? தமிழை மட்டுமே படித்தவர்கள் வெளிநாடுகளில் வேலைக்கு செல்லமுடியுமா?இல்லை என்பதுதான் நாம் உணர வேண்டிய உண்மைகள்.

தற்சமயம்தான் கிராமப்புறங்களுக்கு இணைய வசதி ஏற்படுத்துவதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது!

கிராமப் பொருளாதாரம் உயர்ந்தால்தானே கிராம மக்கள் முன்னேறுவார்கள் .
இனிவரும் காலங்களில்தான் அவர்கள் கணினியை கற்க வேண்டும்! அதன்பிறகுதான்
கணினியில் தமிழ் வளர்ச்சியை காணமுடியும்!

 அகில இந்தியா IIM.IIT போன்ற நுழைவுத் தேர்வுகளில் தமிழை மட்டும் படித்தவர்கள் எத்தனை பேர் வருடா வருடம் உள்நுழைகிறார்கள்! மிக மிக குறைந்த அளவுதான்!! சுதந்திரம் வாங்கி இத்தனை ஆண்டுகள் கடந்தும்
நம் நீதிமன்றங்களில் தமிழை வழக்கு மொழியாக்க, முடியவில்லை! நீதிபதி தமிழன்!! வழைக்கறிஞர் தமிழன்! வழக்கு தருபவன் தமிழன்! வாதாடுவதோ,தீர்ப்பு வழங்குவதோ  ஆங்கிலத்தில், இதில் எவ்வளவு முரண்பாடுகள் பாருங்கள்!!


"தமிழை புது தலைமுறைகளுக்கு கற்றுத்தரும் அரசு ஆசிரியர்கள் விகிதம் 2013-14 ஆண்டுகளில் 42.91சதவிகிதம்! அதே அனைத்து பாடங்களையும் ஆங்கிலத்தில் கற்றுதரும் தனியார் ஆசிரியர்கள் விகிதம் 57.09சதவிகிதம்! எதில் நாம் அதிக வளர்ச்சியை எதிர்பார்க்கின்றோம்

இன்றைய இளைய சமுதாயம் ஆண்ராய்டு கைபேசிகளுக்கு அடிமையாகிவிட்டார்கள்!! அதில் எத்தனை பேர் தமிழில் மட்டும் "குறுஞ்செய்தி, முகநூல் செய்தி அனுப்புகிறார்கள்! கேட்டுப்பாருங்கள் தமிழில் எழுதுவது மிக கடினம் என்பார்கள்! தமிழ் வளர்த்த பல சான்றோர்களை அவர்கள் நினைவு நாளில் மட்டும் நினைத்துவிட்டு பிறகு மறந்து விடுகி றோம்!இங்கு தமிழன் தமிழில் , பேச தயங்குகிறான் என்பது அவலமல்லவா?

"இணையத்தில் எழுதுவது தமிழன், படிப்பது தமிழன் என்ற
நிலை இருக்கும் சூழலில் வலைப்பதிவர் திருவிழா "என்றில்லாமல் தமிழ்ப்பதிவர் திருவிழா என்று இருப்பின் நம் தமிழுக்கு நம்மால் முடிந்த சிறு
பெருமையாக இருக்கும்!

பல வலைப்பதிவர்கள் எழுதிவந்தாலும் அதில் எத்தனை நபர்கள் பெயரைக்கூட தாய் தமிழில் வைத்திருக்கிறார்கள்.

இங்கு பிற மொழி கலப்பில்லாமல் பேசவும் முடியாது, வாழவும் முடியாது, என்பதுதான்
உண்மை நிலவரம்!!

மூன்று வயதில் முழுக்க பிற மொழிகளை ,புகுத்தி அறிவு வளர்த்து, கைநிறைய, வருமானம் கிடைத்தவுடன், முப்பது வயதுக்கு மேல் தான், பல தமிழர்களுக்கு ,தமிழ்மொழியின் மீது பற்றும் பாசமும் ஞானமும் வருகிறதோ?எனும் ஐயம் வருகிறது.


கணினியில் தமிழ் வளர்ச்சி என்பது ஒரு புறமாக இருந்தாலும் "தரணியில் அழியும் தமிழை வளர்ப்பதே நம்
தமிழுக்கும் தமிழனுக்கும் அடுத்த தலைமுறைக்கும் செய்யும் உண்மையான பங்களிப்பாகும்!!

தமிழ் வளர்வதும் வளர்ப்பதும் நம் கைகளில்தான் உள்ளது!!

தமிழை ஊக்கப்படுத்து வோம்! தமிழனையும் ஊக்கப்படுத்து வோம்
(புள்ளி விவர ஆதாரங்கள் NUEPA 2012-14)

"இப்படைப்பு " வலைப்பதிவர் திருவிழா -தமிழ்இனணய கல்வி கழகம் நடத்தும் "மின்தமிழ் இலக்கிய போட்டிகளுக்காக எழுதப்பட்டது
வகை (1)
இவை என் சொந்த படைப்புதான் என்றும் வேறு எங்கும் வெளியானதல்ல என்றும் முடிவுகள் வெளியாகும்வரை வெளியாகாது என்றும் உறுதியளிக்கின்றேன்!!