"புலி விரட்டியப் பரம்பரை நாங்க ...
புறநானூறு புகட்டிய தமிழன் தாங்க ...
தமிழ் வளர்த்து லாபமில்லை ...இங்கு
சாதி வளர எந்த தடையுமில்லை ...
மேலைநாட்டு கல்வி பாரு ...
அது மேலானவர்..பணத்தீவுதானே ...
வறியவர் வாக்கை கேளு .அவர்...
மண் சுமக்கும் கதை எழுது ....
குனிவதற்கு இலக்கணம் வகுத்தோம் ..
கூன்குருடாய் அவதரிக்க மறுத் தோம் ...
மீசைகவி கண்ட மாந்தரொல்லாம் ....
மூச்சுமுட்ட குடிக்கிறது பாரினிலே...
தலைநிமிர்ந்து நில்லடா? பல தலைமுறை -சொல்லிவிட்டோம் ....
தள்ளாடாமல் நில்லடா? என்பதை நம் -தலைவிதியாக்கிவிட்டோம் ..!
மறத்தமிழன் மரித்துவிட்டான் ....
மதுத் தமிழனாய் பிறந்துவிட்டான் ..!
படித்தவன் பரதேசம் போ...
பாமரன் இறந்து போ...
விவசாயி வீணாகிப் போ...
விடிவுகாலம் இல்லையதை மறந்து போ..!
தமிழ் வாழ "முற்றமிழ் "வேண்டும் ...
தரணி சிறக்க நற்றமிழன் வேண்டும் ..!!
இப்படைப்பு "வலைபதிவர் சந்திப்பு 2015 மற்றும் தமிழ்இணைய கல்வி கழகம் நடத்தும் "மின்தமிழ் இலக்கிய போட்டிகள்"களுக்காக நான் எழுதிய சொந்த படைப்பாகும்!
வகை (4) புதுக்கவிதை போட்டி!
முன்னேறிய உலகில் பண்பாட்டின் தேவைகள்!
இதற்குமுன் எங்கும் வெளியானதல்ல என்றும் முடிவுகள் வெளியாகும்வரை வேறெங்கும் வெளிவராது என்றும் உறுதியளிக்கின்றேன்!
-கரூர்பூபகீதன் -