""கரும்பு காட்டுல நரிவிரட்டினோம்
கம்பு காட்டுல கிளி விரட்டினோம் ..
கடலை காட்டுல காக்கா விரட்டினோம். ..
நெல்லு காட்டுல மயில் விரட்டினோம் ...
"குருதுக்குள் எந்த அப்பனுமில்ல
அள்ற அளவுக்கு விளையவுமில்ல
விளையற அளவுக்கு மழையுமில்ல
வானம் பாத்த மக்களுக்கு வேற வழியுமில்ல ....
"ஓயாம உழுத மாடுக .,
உறங்கியே களச்சு போச்சுங்க ...
வரப்புலேயே மேய்ஞ்ச வண்டி மாடுக ...
பாரம் சுமக்க மறந்து போச்சுங்க ....
"காட்ட வித்தாவது கான்வெண்ட்டுல
படிக்க வைக்கனும்ங்க ...
கடன் வாங்கியாவது கவர்மெண்டுல
வேல வாங்கியே தீரணும்ங்க ...
"எங்க பொழப்பு மண்ணோடு
மண்ணா கலந்தாச்சுங்க ...
எங்க மக்கா மாருகளாச்சும்
ஆடி கார்ல ஆடாம போகட்டுங்க ..
"நீங்க இங்க வாழ வரவேணாம்
எப்படி வாழரோம்னு பாக்க வாங்க!!
நன்றி!!!