click to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own text

29 August 2015

கால் கிலோ கவிதைகள்!!

  "ஆத்தங்கர ஓரம் ,
   
    அந்தி சாயும் நேரம்,

   ஒத்தயில. போறவளே .....

   ஒத்த நொடி நில்லே ....."!!


    உம்முகம்  பாத்த ,.....

    கம்பங்காடு தல சாய்க்கும் .....

     உம்   நிறம் பாத்த ......

      சூரியகாந்தி பூ சிவக்கும் ,......!!


       காடு உழும் அய்யனுக்கும் .....

      கழை வாரும் ஆத்தாளுக்கும் .,...

      கஞ்சி கொண்டு  போறியே .....

     எம் பசி  போக்க .....

    எப்ப வருவ ....,!!


     ""பாவட சரசரக்க   ஓடாத ..,

       பருத்தி காடு பாவமடி .,...

      பச்ச புல்லும் நோகுமடி ...""



    ""பருத்தி சீலக்கி பவுசு....

     உன்னால வந்ததடி மவுசு ....""


      ""நீ ஆடு மோய்க் போறியா.,...

        அப்படித்தான்  நினைக்குது ஊரு ....

         எம் மனச மோய்ப்பது

          யாருக்காவது தெரியுமானு பாரு.,...



        ""உனை பாக்கலன .....

         கரும்பு காடு காயுமடி .,..

         கடல செடி கருகுமடி ,....""


        ""எதித்த வீட்டு சிறுக்கி. ....

        எனை பாத்தானு .,...

        கருக்கருவால. தீட்டி ....

         சண்டக்கி போன....கருவாச்சி!! ""


        ""தை பொங்கலன....

         தை தைனு குதிப்ப ....

         மாட்டுக்கு முத. சோறு ,...

         மனிஷனுக்கு மறு சோறு

         ஓரவஞ்சன செய்யாத ....

         பாசக்காரி நீ ..,!!""

     

        ""சலிக்காம வேல இருந்தாலும் ..,..

          சல்லீச செய்வ .,....

         எப்படினு கேட்ட .,...

         மனசுல மச்சான் இருக்கானு ....

        மதர்ப்ப திரியுவ ,....!!""


          ஆத்தங்கர அம்மன்கிட்ட ....

          அப்படி என்ன பேசுவ ,...

            ஒட்டு கேட்டாலும் ,...

           ஒண்னுந் புரியாது எனக்கு ....!!""


          நான் காலேஜ் படிச்சிருந்தும் ....

          கவர்மெண்டு வேலயிருந்தும்

         நாகரிகம்  தொரியாதவனு ....

        தள்ளிவச்சது எந்தவறுடி .,.,!!

 
        ""உன் விவசாய பாசத்திக்கும் ....

         வெள்ளாமை பெருமைக்கும் ,...

         முன் ,....

        என் கவுரவம் கால் தூசடி ,...!!!!!

நன்றி இவை கால் கிலோ கவிதைகள் எனும் நான் எழுதிய. பதிப்பின் மறு பதிவு  எழுதிய ஆண்டு 2005
உங்கள் கருத்துகளை சொல்லுங்கள் நன்றி?!!!!

        

16 comments:


  1. ""உன் விவசாய பாசத்திக்கும் ....

    வெள்ளாமை பெருமைக்கும் ,...

    முன் ,....

    என் கவுரவம் கால் தூசடி ,.....அப்போ..உண்மையா இருந்திச்சு...இப்போ....????

    ReplyDelete
    Replies
    1. வருக அருமை நண்பரே!! இப்போதான் அப்பார்மெண்ட் கலர்கலராக முளைக்கிறதே!!நன்றி வந்தமைக்கும் ஊக்கப்படுத்தியமைக்கும்!!!

      Delete
  2. //அகத்தின் அழகு எழுத்தில் தெரியும் //
    தெரிஞ்சிடுச்சி பகீதன் . நாட்டுப்புறப் பாடல் அருமை

    ReplyDelete
    Replies
    1. வருக! வருக! நண்பரே! தங்கள் வந்தமைக்கும் பாராட்டிற்கும் நன்றிகள் பல!! தொடர்ந்து ஊக்கப்படுத்துங்கள் நன்றி! தங்களுக்கு சிறு தகவல் என் பெயர் Karurboobageethan//பூபகீதன்!! மீண்டும் வருக!! மீண்டும் நன்றி!!

      Delete
    2. //கரூர்பூபகீதன்//

      தங்கள் பெயரை. பிரித்து எழுதலாமே?
      கரூர் பூபகீதன்!

      தாங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

      Delete
    3. நண்பரே நான் கரூர்மாவட்டத்தின் எந்ந அடிப்படை வசதியும் இல்லாது கடைகோடியில் ஒரு குக்கிராமத்தில் பிறந்து வளந்தவன்!! முதலில் பூபகீதன் என்றுதான் வலைப்பூ ஆரம்பித்தேன் என் ஆர்வமிகுதியால் ப்ளாக் ஆகிவிட்டது! மறுபடியும் அதே பெயரில் ஆரம்பிக்கவேண்டும் என்பதாலும் கருரும் தெரியட்டுமே என்றுதான் அதையும் சேர்த்தேன்! தங்களுக்கு எது சுலபமோ அப்படியே ஆகட்டும் நண்பரே நன்றி!!!

      Delete
  3. நாட்டுப் புற மெட்டில், காதல் கவிதை!

    மிக நன்று!

    ReplyDelete
    Replies
    1. மிக மிக நன்றி நண்பரே!! தங்களின் வருகைக்கும் இனிய பாராட்டிற்கும், தொடர்ந்து ஊக்கம் தருவதற்கும் நன்றிகள் பல!!

      Delete
  4. வாருங்கள் வாருங்கள்! பதிவுலக அன்னையே!! தங்களின் வருகைக்கும் வந்தமைக்கும் ரசித்தமைக்கும் நன்றிகள் பல!! தொடர்ந்து வாருங்கள்! தவறுகளை சுட்டிகாட்டி ஊக்கப்படுத்துங்கள்! தங்களிடம் சில சந்தேகங்கள் கேட்டவேண்டும்! நேரம் கிடைக்கும் போது கேட்டுகெள்கிறேன் நன்றிய்யா!!!

    ReplyDelete
  5. //""தை பொங்கலன....

    தை தைனு குதிப்ப ....

    மாட்டுக்கு முத. சோறு ,...

    மனிஷனுக்கு மறு சோறு

    ஓரவஞ்சன செய்யாத ....

    பாசக்காரி நீ ..,!!""



    ""சலிக்காம வேல இருந்தாலும் ..,..

    சல்லீச செய்வ .,....

    எப்படினு கேட்ட .,...

    மனசுல மச்சான் இருக்கானு ....

    மதர்ப்ப திரியுவ ,....!!""//

    மனதை வருடிய வரிகள்.

    கவிதை அருமை! அற்புதமான கிராமத்து சொல்லாடல்கள், மனதை சுண்டி இழுக்கின்றன.

    ReplyDelete
    Replies
    1. வருக! வருக! நண்பரே!! தங்களின் கூட்டாஞ்சோறு அறிவேன்!! தங்கள் வருகைக்கும் இனிய பாராட்டிற்கும் நன்றிகள் பல!! தங்கள் புத்தகம் தினதந்தியில் வருவது மிக்க மகிழ்ச்சி!! தொடர்ந்து வாருங்கள்! தொடர்ந்து ஊக்கப்படுத்துங்கள்! வலைப்பூக்கு நான் புதியவன் நன்றி அய்யா!!

      Delete
  6. கவிதை அருமையாக இருக்கு சகோ அதுக்கேற்ற காட்சிப்படம் உங்க மனதில் தோன்றுவதையும் இணைத்தால் ! இன்னும் கவிதை நெஞ்சில் பதியும் என்பது என் கருத்து!ஆடு மேய்க்க போற அந்த காதலியாரோ[[

    ReplyDelete
    Replies
    1. வருக சகோ! தாமதமாக வந்தாலும் உங்கள் ஆலோசனைகளை தந்தீர்கள் அல்லவா?? முடிந்த அளவு படங்களை இனைத்து விடுகிறேன்!! காதலில் நம்பிக்கை கிடையாது நண்பரே!!!

      Delete
  7. மூத்தவர்கள் எல்லாம் முன்னாலே வந்துவிட்டார்கள் இன்று தான் கொஞ்சம் இந்தப்பக்கம் வரும் நேரம் கிடைச்சது!இனி முதலில் வர முயல்கின்றேன் சகோ!

    ReplyDelete
    Replies
    1. தாங்கள் எவ்வாறு வந்தாலும் சரி!சகோ!! மாதத்திற்கு ஒருமுறையாவது வந்து பாருங்கள் அது போதும் (நேரக்சிக்கல்தின் காரணம்!!)
      தங்கள் வாழ்த்திற்கும் நன்றிகள் பல!!!

      Delete

உங்கள் எண்ணத்தை இப்படியும் சொல்லலாம்,

தொடர்புக்கு : susibala1986@gmail.com