""உன் ...
குலத்தெய்வத்திற்கு.,.
குத்துவிளக்கேற்றி ..
கும்பிட்டுவந்தேன் ...!
"அன்றாடம் அபிஷேகம் செய்துவந்தேன் ...
அமாவாசையன்று ...
அக்னிசட்டி ஏந்தினேன் ....!
"அய்யனாரும் நானும் ...
அண்ணன் தம்பிகளானேம் ...!
"அசுர சக்திகளை...
அழிக்கின்றாராம் அய்யனார் .,
உன் அண்ணன்கள் சக்தியை ..
யார் ஒழிப்பது ,?
"நான் சாமியாராகும் ..
தருணத்தில் ....
சம்மதம் என்கிறாய் ...!
""குலம் மாறக்கூடாது குத்தமாகிவிடும்?
குறுக்கே நுழைகிறார் .,
உன் முரட்டு அப்பா .,!
"அய்யனாரோ...
ஆனந்தமாய் சிரிக்கிறார் ...!
உன் மதியையும் .,
என் விதியையும் ...
என்னவென்று சொல்லட்டும் ..!!
நன்றி! இவை 2006ல் நண்பர்களேடு உதவியால் புத்தகங்களாக்கி நண்பர்களாக பிரித்துக் கொண்டேம்!
பல விசயங்கள. புதிதாக எழுத நினைத்தாலும் கணினி இல்லாததால் கைபேசியில் எழுத. கடுப்பாகிறது!
எந்த திரட்டியிலும் இணைக்கவும் இல்லை? எனவே
தொடர்ந்து ஊக்கபடுத்தும் உள்ளங்களுக்கு நன்றி நன்றி!!!