"நடக்க நல்ல பாதயுமில்ல..
நாட்டாமைக்கு நேரமேயில்ல...
நாலு தெரு நாப்பது வீடு ..
குடிக்க சொட்டு தண்ணியுமில்ல...!
"தெருகூத்து வண்ண. டீவிக்குள்ள ..
குடும்ப சண்ட நடுவீதியில ,
குறுதுக்குள்ள நெல்லுமில்ல..
கூலிக்கு போக வேலயுமில்ல..!
"அம்மி ஆட்டுக்கல்லு பழசாச்சு ..
அரசு கொடுத்ததெல்லம்
கெளரமாச்சு ,..
"பச்சயா இருந்த ஊரு ..
பசலபுள்ள சீக்காச்சு ...
பந்தி வச்ச. பழக்கம் ...
பாக்காம திண்ன வழக்காச்சு ...!
நீங்க எங்க ஊருக்க வரவேணாம்
எப்படி வாழறோம்னு பாக்கவாங்க.,!!!
நன்றி!!!