24 September 2015

வண்ண ஆடை ஏற்றுமதிகளும் வளம் அழிக்கும் சாயக்கழிவுகளும் !!


"பிரபல ஜவுளிக்கடைகளில்  10 சதவிகிதம் தள்ளுபடி  விற்பனை என்றதும் குடும்பத்துடன் ஓடுகிறோம்! தள்ளுமுள்ளு ஏற்படுகிற கூட்டத்திலும் அந்ந தள்ளுபடியிலும் தள்ளுபடி வாங்கி ஆடை எடுத்து ஆனந்தப்படுகிறோம்! என்றாவது ஒரு நாள் அந்த ஆடைகளுக்கு பின்னால் இருக்கும் வரலாற்றை தெரிந்து கொண்டது உண்டா?
ஒவ்வொரு ஆடைக்குப்பின்னால் எத்தனை தொழிலாளர்களின் உழைப்பு, இறக்குமதி இயந்திரங்களின் இரைச்சல் ,எவ்வளவு தண்ணீர் வீணாக்கப்படுகிறது ?எத்தனை விதமான ரசாயன கலவைகள் பயன்படுத்தப்படுகிறது  ?கழிவுகளை மறுசுழற்சி எப்படி செய்கிறார்கள்? அதில் நடக்கும் மிகப் பெரிய சமுதாய சீர்கேடு எவ்வளவு என்று தெரியுமா??

ஆதிகாலம் மனிதன் கைகளிலால் ஆடைகளுக்கு சாயமேற்றி விற்பனைக்கு அனுப்பினான் !பிறகு இயந்திரங்களின் அதித வளர்ச்சியில் ஒரு புறம் நூலை கொடுத்தால் மறுபுறம் வண்ண ஆடைகளாக ரகம்ரகமாக விதம்விதமாக தரும் இயந்திரங்களில் வளர்ச்சியடைந்துள்ளான்!

திருப்பூர் ஈரோடு மற்றும் கரூர் ஆகிய பகுதிகளில் பின்னலாடைகள் மிகப்பெரிய அளவில் உற்பத்தி செய்கிறார்கள் !அதனால் பல இலட்சகணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்பும்  வருமானம் கிடைக்கிறது! அரசுக்கும் வருமானம் கிடைக்கிறது!

நம் கைகளில் கிடைக்கும் ஆடைகள், ஜவுளிக்கடைகளுக்கு  வரும்முன் சுமார் 30விதமான தொழிற்சாலைகளுக்கு சென்று  வரும்! ஒரு நாளைக்கு டன் கணக்கில் உற்பத்தி செய்கிறார்கள், கிலோ கணக்கில் ரசாயன கலவைகள் பயன்படுத்துகிறார்கள் (dyes)  சாய கழிவு நீர் கோடிக்கணக்கான லிட்டர்கள் வெளிவரும் (Effluent water) இதை அப்படியே இயந்திரங்கள் மூலம் மறுசுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்த வேண்டும்! இங்குதான் பிரச்சினை ஆரம்பிக்கிறது !!

சிறு  ,குறு ,ஆலைகளாக திருப்பூரில் 900சாய ஆலைகளும் கரூரில் 250சாய ஆலைகளும் உள்ளன! இந்த ஆலைகள் ஒரு நாள் பயன்படுத்தும் தண்ணீரை காவேரியாறில்  விட்டால் கரைபுரண்டு ஓடும் !குடிநீர் தட்டுப்பாடு இருக்கவே இருக்காது!!

ஆரம்பகாலங்களில் ஆத்தங்கரை ஓரங்களில் மட்டுமே சாய ஆலைகளை அரசு அமைக்க வலியுறித்தியது! காலமாற்றத்தில் சாய ஆலைகள் மிக மிக அதிக அளவில் அதிகரித்ததால் சாய கழிவுகள் ஆற்றில் கலப்பதை தடுக்கவும் குடிநீர் தட்டுப்பாட்டை களையவும்  விவசாயத்தை காக்கவும் எல்லா ஆலைகளிலும் மறுசுழற்சி இயந்திரங்களை அமைக்க வேண்டும் என்று அரசு அறிவித்தது (Reverse osmois system)எளிதாக ROஎன்பார்கள்.

ஒரு ஆடையை வண்ணமாக்கும் ஆலைகளுக்கு "டையிங் (Dying )என்றும் வெறும் வெண்மையாக மாற்றும் ஆலைகளுக்கு "பிளிச்சிங் "(Bleacing) என்றும் பெயர் உண்டு!

ஒரு ஆடை ,வண்ணமாக, மாறுவதற்கு 20மணி நேரங்களும் வெண்மையாக மாறுவதற்கு 16மணி. நேரங்களும் ஆகும்! இப்படி மாற்றமடைய பல விதமான ரசாயனங்கள் சேர்க்வேண்டும்

இந்த சாய கழிவுநீரை சுத்தம் செய்து மறுபடியும் பயன்படுத்துவதற்கு ஏழு, நிலைகளை கடக்கவேண்டும்! அதிலும் மறுசுழற்சி இயந்திரங்கள் அதிக விலை என்பதாலும், அடிக்கடி புரச்சனைகள் ஏற்படுவதாலும், ஆட்கள் பற்றாக்குறையாலும், அதிக அளவு செலவு ஆகுவதாலும், அதிக மாற்று ரசாயனங்கள் தேவைப்படுவதாலும், எந்த ஆலையிலும் முழுதாக சுத்தப்படுத்த மாட்டார்கள்!! முடியாது என்பதும் உண்மை! வேறு வழியே கிடையாது ஆற்றிலும்  கழிவுநீர் வடிகாலிலும்  எப்படியோ விட்டுவிடுவார்கள்.

.தமிழ்நாட்டில் 2000 TDS (total dissolved salt) உப்புதன்மையுடைய நீரில் பயிர்கள் வளரும் அரசு அனுமதித்த அளவும் அதுதான் !ஆனால் ஆற்றில் கலக்கும் சாய நீரானது இந்த அளவுகளுக்கு மிக மிக அதிகமாக இருக்கும்! இதனால்தான் ஆற்றின் வளம் குறைவதுடன் அதனை பயன்படுத்தும் மனிதன் முதல் விலங்குகள் வரை பல தீங்கு விளைவிக்கும் !மனிதர்களுக்கு "ப்ளுரையிடு " தண்ணீரில் அதிகமாக இருந்தால் பற்கள் மஞ்சளாகும் ஆண்மை குறைவும் ஏற்படும் !விலங்குகள் சினையாவதில் பிரச்சனை வரும்! அதன் பாலிலும் நஞ்சு கலந்துவிடும்!  விளை நிலங்களில் கலப்பதால் மண்ணிலுள்ள நுண்ணுயிர்கள் அழிந்து விடும்! விளைந்த காய்கறிகளிலும் நஞ்சு கலந்திருக்கும்!

"சாய நீரை முதலில் முதல்நிலை சுத்திகரிப்பில் (primary effluent treatment plant) சுத்தம் பண்ண வேண்டும்! இதில் பல வண்ணத்தில் இருக்கும் நீர் சுத்தமாகிவிடும்! அதிலுள்ள கழிவுகளை  பிரிக்க சுண்ணாம்பு,பெரஸ், பாலி, ஆலம்  ஆன்டிஸ்கேலண்ட் ,ஹைட்ரோ குளரிக் அமிலம், டைபார்மர், சோடியம் மெட்டா பை சல்பேட், ஆகிய ரசாயனங்கள் வேண்டும்! (lime, ferrous, poly, antiscalent, hcl acid, dieformour, smps) இவ்னைத்து  ரசாயனங்கள் இருந்தால் மட்டுமே சாய நீர் சுத்தமாகும்!
இந்த நிலையில் சாய நீரின் உப்புதன்மை (tds) சுமார் 7000லிருந்து 9000வரை இருக்கும்!
முதல் நான்கு நிலைகளில் சுத்தமாகி வெளிவரும் கழிவில் கிட்டத்தட்ட உப்பின் அளவு(tds) 55000முதல் 75000ஆயிரம் இருக்கும்! இதில் ஒரு தேக்கரண்டி அளவு கழிவு நீரை 100லிட்டர் நல்ல தண்ணீரில் கலந்தால் வாயில் வைக்க முடியாத அளவுக்கு உப்பு கரிக்கும்! ஆக இதை அப்படியே ஆற்று நீரில் கலந்தால் என்னவாகும் என்பதை நினைத்துப்பாருங்கள்!

எவ்வளவு தீங்கு வரும் என்று எண்ணிப்பாருங்கள்!


இதை, கண்கானிக்கும் அரசு மாசு கட்டுப்பாட்டு  (TNBC) வாரியம்    எவ்வளவு கண்கானிப்புடன் இருந்தாலும் , ஆலை கழிவுகள் கலப்பதை தடுக்கமுடியவில்லை விவசாயிகள் குரல் ஓங்கும் போது ஆலைகளுக்கு அதிரடியாக சென்று ஆலை முதலாளிகளை எச்சரிக்கை செய்து திரும்புவார்கள்!இருந்தும் சாய கழிவுகள் கலப்பதை தடுக்க முடியவில்லை ?என்றதும், மறுபடியும் விவசாயிகள் போராட்டத்தை ஆரம்பிப்பார்கள்!
நம்மை, நாமே அழித்துவருகிறோம்.அதுதான் உண்மை!

சாய நீரை சுத்தமாக்குவதற்கு இவ்வளவு ரசாயனங்கள் தேவைப்படும் போது ஆடையை வண்ணமாக்குவதற்கு எவ்வளவு ரசாயனங்கள் தேவைப்படும்
லிக்கர் , சல்பர் காஸ்டிக், பெராக்ஸைடு, வெட்டிங் ஆயில் சோடா, ( liquor, salfor,caustic,peroixed,wetting oil)பிறகு ஒவ்வொரு  வண்ணத்திற்கும் ஒரு ரசாயனம், வண்ணத்தை அதிகமாக்க / குறைக்க ரசாயனங்கள், என,20வகைகள் தேவைப்படும்.டன் கணக்கில் உப்பும் (salt) பயன்படும்!

ஐந்தாவது நிலையில் வரும் அதிக கடினமான கழிவு  நீரை (குழகுழப்பாக இருக்கும்) எவாப்ரேட்டர் (Evaporater) என்கிற இயந்திரத்தில் பாய்லர் (Boilar) உதவியுடன் வெறும் உப்பை மட்டும் பிரித்து எடுப்பார்கள்! மிஞ்சும் இறுதி நீரை சூரிய ஒளியில் படும்படி அகலத் தொட்டிகளில் சேமிக்கவேண்டும்! சூரிய ஒளியில் ஆவியாக்குவதற்கு (solar evaporate bond) என்று பெயர்! ஆவியானது போக மீதமிருப்பதை அதிக சக்தி உள்ள மின் மோட்டார் மூலம் பிரித்து எடுப்பார்கள்! இதற்கு சிலட்ஜ் (Sluge) என்று பெயர்! இதையும் கடினமான "தார்பாலின்கள் "கொண்டு மூடி பாதுகாக்க வேண்டும்! இதை 0.1கிராம் அளவு கழிவை 1லிட்டர் தண்ணீரில் கலந்தால் முழுவதும் நஞ்சாகிவிடும்! இதை குடித்தால் மனிதன் மற்றும் விலங்குகள் விவசாயம் என்ன பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை உணருங்கள்!

ஒவ்வொரு சாய ஆலைகளிலும் டன் கணக்கில் சேமிக்கப்படும் இந்த "சிலட்ஜ் "என்கிற கழிவுகளை முறையாக மறுச்சுழற்சி செய்ய இதுவரையில் எந்த மாற்று வழிமுறைகளும் கண்டுப்பிடிக்கப்படவில்லை!

பரிசோதனை முயற்சியாக சில "சிமெண்ட் "ஆலைகளிலும் செங்கல் ஆலைகளிலும் முயற்சித்துப்பார்த்தார்கள்.
பயன் ஏதும் கொடுக்காததால் முயற்சி கைவிடப்பட்டது!

   எனவே "சிலட்ஜ் "எனும் கழிவுப் பொருளை அரசு வழிகாட்டுதலுடன் தேவைக்கேற்ப அகலமாக பள்ளங்கள் ஏற்படுத்தி சுற்றிலும் "கான்கிரிட் "சுவர்கள் அமைத்து அதனுள் சிலட்ஜ் களை நிரப்பி மூடிவிடுவார்கள் இதற்கு SLF என்று பெயர் (Safty land filling)

திருப்பூரில் அனைத்து சாய ஆலைகளுக்கும், L&T, (larsan&duproo) என்ற நிறுவனம்தான் தண்ணீர் வழங்கும்!

இந்த நிறுவனத்திடம் அனுமதி வாங்காமல் யாரும், எவரும், அவர்தம்
சொந்த நிலத்தில் கூட ஆழ்துளை,கிணறு மூலமோ? அல்லது வேறு வகையிலோ,ஒரு  சொட்டு நீரையும் எடுக்கமுடியாது!

அவ்வப்போது விவசாய தேவைகளுக்கும் குடிநீர் தேவைகளுக்கும், திறந்து விடும்  ஆற்று நீரையும், ஆலைமுதலாளிகள்
ஆறுகளின் ஒரத்தில் "வட்ட கிணறுகள் "அமைத்து உறிஞ்சிவிடுவார்கள்?
அதனால்தான் கடைமடை பகுதிக்கு தண்ணீர் வரவில்லை? என்று விவசாயிகள்   போராடுவார்கள்! அதற்கு இதுவும் ஒரு காரணமாகும்!

காலங்காலமாக, இந்த அவல நிலை தொடர்ந்து
வருகிறது! மறுபுறம் அதிகரித்துக்கொண்டும் வருகிறார்கள்!
மனிதர்களின் போராசை,என்று ஒழிகிறதோ அன்றுதான் விடிவுகாலம் பிறக்கும்!

நீர்வளங்களை காப்பதற்கு அரசு பல கடுமையான கட்டுப்பாடுகளை ஏற்படுத்தவேண்டும்!

ஆலை நிறுவனங்களும் வழிமுறைகளை கடைப்பிடித்து மறையாக பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவேண்டும், இதுவே
முழுமையான தீர்வு ஆகும்!

நாம் செய்யவேண்டியது வருங்கால சந்ததிகளுக்கு பணத்தை சேமிப்பதை விட சுத்தத்தையும் சுகாதர விழிப்புணர்வையும், கற்றுதருவதே நாம் செய்யும் உண்மையான பங்களிப்பாகும்!

ஏற்றுமதியாகும் ஒவ்வொரு ஆடைகளுக்குப்பின்னாலும் நம் வளம் அழிந்து வருகிறது,அழித்துவருகிறோம், என்பதை தெரிந்து கொள்வோம்!!


(பட உதவி -இணையம்)

இப்படைப்பு வலைபதிவர் சந்திப்பு -தமிழ் இனணய கல்வி கழகம் இனணந்து நடத்தும் "மின்தமிழ் இலக்கிய பபோட்டிகள் களுக்காகவே எழுதப்பட்டது!

வகை (2) சுற்றுசுழல் விழிப்புணர்வு
இவை என் சொந்த படைப்புதான் என்றும் வேறுஎங்கும் வெளியானதல்ல என்றும் முடிவுகள் வரும்வரை வேறெங்கும் வெளியாகாது என்றும் உறுதியளிக்கின்றேன் !நன்றி 

21 comments:

 1. நன்றி...

  நம் தளத்தில் இணைத்தாகி விட்டது...

  இணைப்பு : http://bloggersmeet2015.blogspot.com/p/contest-articles.html

  புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக...
  அன்புடன் திண்டுக்கல் தனபாலன்

  ReplyDelete
  Replies
  1. மிக்க மகிழ்ச்சி நன்றி அண்ணா!

   Delete
 2. இந்த பதிவு என் டேஷ் போர்டில் வராமையால் உடனே வந்து கருத்திட முடியவில்லை! சிறப்பாக எழுதி உள்ளீர்கள்! போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள்! சில சர்ச்சை தரும் கருத்துக்களை நீக்கியிருக்கலாம். தமிழ் இணையக் கல்விக் கழகமும் ஓர் அரசு அமைப்பு. மற்றொரு அரசு அமைப்பை குறைச்சொல்லும் வார்த்தைகளை நீக்கியிருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது. எனது பக்கத்தில் தொடர்ந்து வந்து கருத்திடுவதற்கு மிக்க நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்கள் இனிய வருகைக்கு மிக்க நன்றிகள் நண்பரே! சர்ச்சை வார்த்தைகளை நினைவூட்டியதற்கு நன்றிகள்
   இன்னும் நம் நண்பர்களின் கருத்தை அறிந்துவிட்டு நீக்கிவிடுகின்றேன்! நன்றி!!

   Delete
  2. நான் இந்த துறையில் பணிபுரிந்து வருவதால் அதில் நடக்கும் பல "உள்குத்து வேலைகளும் முதலாளிகளின் லஞ்ச லாவண்யமும் நன்றாக தெரியும் நண்பரே! நன்றி

   Delete
 3. வகை (2) சுற்றுசுழல் விழிப்புணர்வு--- போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
  Replies
  1. வருக! நண்பரே! தங்களிடம் வேறு மாதிரி கருத்து எதிர்பார்த்தேன்? ஆனால் இந்த சூழலில் ......
   மிக்க நன்றி நண்பரே!

   Delete
 4. மிக முக்கிய பிரச்சைனையை எடுத்துக் கொண்டு அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்
  வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் அய்யா! முக்கிய பிரச்சினையே நீர்தானே அய்யா! வந்தமைக்கும் வாழ்த்தியமைக்கும் நன்றிகள் பல

   Delete
 5. பட்டறிவுப் பாங்கோடு சாயக் கழிவுகளின் தீமைகள் பற்றி அருமையாக பதிவிட்டுள்ளமைக்குப் பாராட்டுகள்.

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் அய்யா! தங்களின் வருகை மிக்க மகிழ்ச்சியளிக்கிறது!! பாராட்டியமைக்கு என் சிறம்தாழ்ந்த நன்றிகள் பல! நன்றி அய்யா!

   Delete
 6. சாயக் கழிவு நீரால் ஏற்படும் விளைவுகளை விபரமாகவும் விளக்கமாகவும் எழுதி உள்ளீர்கள். பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள்.

  போட்டியில் வெற்றி பெற இனிய நல்வாழ்த்துகள் !

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் அய்யா! தங்களின் முத்தான முதல் வருகையை கண்டு மிக்க மகிழ்ச்சி! தங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றிகள் பல

   Delete
 7. வணக்கம் நண்பரே நல்ல கட்டுரை மக்களின் முக்கிய பிரட்சினையை அலசியமைக்கு முதற்கண் நன்றி போட்டியில் வெற்றி பெற எமது மனமார்ந்த வாழ்த்துகள்,

  தங்களது பதிவை வேறொருவரின் பதிவின் வழியே வந்தேன் வயது 16 ஐக் கடந்து விட்டதால் ஞாபக சக்தியும் குறைந்து விட்டது நண்பரே... தொடர்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வருக நண்பரே! வேறு பதிவின் வழியே வந்தமைக்கு மிக்க நன்றி! வாழ்த்தியமைக்கும் மிக்க நன்றி! தங்கள் வயது ஞாபகசக்தியை அதிகரிக்க ஏதாவது "சாப் "ட் வேர் பயன்படுத்தலாமே (ச்சும்மா)
   16ரா 61னா????? நன்றி நண்பரே

   Delete
 8. நானும் அப்படியே,
  நல்ல அலசல்,,,, அருமையான தொகுப்பு,
  வெற்றிபெற வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வருக சகோ! வந்தமைக்கும் வாழ்த்தியமைக்கும் நன்றிகள் பல

   Delete
 9. அனைவரும் உணர வேண்டிய அருமையான கருத்துக்கள். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வருக நண்பரே! தங்களின் முதல் வருகைக்கு மிக்க நன்றி
   வாழ்த்திற்கும் நன்றிகள் பல

   Delete
 10. உங்கள் கட்டுரையைப் படிக்கப் படிக்க அதிர்ச்சி அதிகமாகிக்கொண்டே போனது. ஒவ்வொரு வண்ண ஆடையும் நம் நீர் வளத்தை அழிக்கிறது என்ற பகீர் உண்மை மனதை ரொம்பவும் வருந்தச் செய்கிறது. எப்போது இதற்கு விடிவு வரும்?
  கண் முன் நடக்கும் அழிவை வார்த்தைகளில் சிறப்பாகச் சொல்லியிருக்கிறீர்கள், வெற்றி பெற வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 11. வாருங்கள் அம்மா! தங்கள் முதல் வருகைக்கு என் முதல் நன்றி மிக்க மகிழ்ச்சி!

  எனக்கும் நீண்ட காலமாக மனதை மிக வருத்தமடைய விடயம்! சாயக்கழிவுகள் நீரில் கலப்பது! அதனால் எவ்வளவு மாசு ஏற்படும் என்பதை நான் அனுபவபூர்வமாக உணர்ந்துள்ளேன்!நமக்கு விழிப்புணர்வு வரவேண்டும்! தங்கள் கருத்துரையே பரிசு கிடைத்ததுபோல் உள்ளது!
  வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றிகள் !

  ReplyDelete

உங்கள் எண்ணத்தை இப்படியும் சொல்லலாம்,

தொடர்புக்கு : susibala1986@gmail.com