click to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own text

10 October 2015

நான் செய்த தவறுகள் ....!




"நம் பதிவர் சந்திப்பு +தமிழ்இணைய கல்வி கழகம் நடத்திய போட்டிக்கு நானும் என் அறிவுக்கு எட்டிய கருத்துகளை கட்டூரையாக எழுதி அனிப்பினேன்! அதில் நான் செய்த தவறுகளை விளக்கவே இந்த பதிவு! நான் சொல்லியுள்ளவற்றில் ஏதும் தவறிந்தால் தயங்காமல் தெரியப்படுத்தினால் இனி வரும் காலங்களில் தவறை திருத்திக் கொள்வேன்!

.நான் செய்த தவறுகளாக என் நண்பர்கள், என் இல்லாள் மற்றும் நான் நினைப்பது! இதில் யாரையும் குறை சொல்லியோ, போட்டி மனப்பான்மையிலை இதை எழுதவில்லை! 

அது போல நான் மற்றவர்களை விட அருமையாக எழுதிவிட்டேன் என்றும் அடுத்தவர்கள் சரியாக எழுதவில்லை என்றும் பொறாமை எண்ணத்திலும் இதை எழுதவில்லை  !
என் அறிவிற்கு எட்டாத விசயங்களை உங்களிடம் அறியவே இந்த பதிவு!!! 

மேலும் என் வாழ்நாளில்   கணினியில் எழுதிய முதல் படைப்பு!

1*இந்த துக்கடா கைபேசியில் எழுதியது!
அதனால் பல எழுத்து தவறுகள் வந்தது!
போட்டிக்கு அனுப்பிவிட்டு திருத்தியது!
விதிமுறைகளை சரியாக கவனிக்காமல் (ஆர்வகோளாறு) போட்டுக்கு அனுப்பிட்டு இடையில் சில கருத்துகளையும் வாக்கிய அமைப்புகளையும் திருத்தி எழுதியது!

கைபேசியில் எழுதியதால் பதிவு கணினியில் பார்க்கும் போது எவ்வாறு தெரியும் என்பதும், பதிவின் நீளம் எவ்வளவு என்பதும் எனக்கு தெரியாது  

2*எல்லார்க்கும் தெரிந்த விசயங்களில் அதில் தெரியாத விசயங்களை மட்டுமே எழுத வேண்டும் என்பதை தெரிந்துகொண்டேன்

*யார்க்கும் தெரியாத விசயங்களை எழுதவே கூடாது என்பதையும் தெரிந்து கொண்டேன்!

 *3*போட்டி நடத்துவது தமிழ் இணைய கல்வி கழகம் என்பதை மறந்து அரசைப்பற்றி சில தவறான கருத்துக்களை எழுதியும் போட்டிக்கு அனுப்பிய பிறகு திருத்தியது தவறு என்பதை இப்பொழுது  உணர்ந்துவிட்டேன்!


ஒருவர் படிக்கும் போது அவர் எதிர்பார்த்த  பாதிப்படைய கூடிய கருத்துக்கள் இருக்கவேண்டும், புரியாத விசயங்களை எழுதகூடாது என்பதையும் தெரிந்து கொண்டேன்! 

*4*விதிமுறைகளை மீறிய படைப்பாக இருந்தாலும் அது நல்ல கருத்தாக இருந்தால் ஏற்றுக் கொள்ளலாம் என்பதையும் உணர்ந்து கொண்டேன்!

ஒவ்வொரு படைப்பையும் தேர்ந்தெடுக்க அதன் துறை சார்ந்த வல்லுனர்கள் தேவையில்லை? பொதுவாணவர்கள் போதும் என்பதையும் தெரிந்து கொண்டேன்!
தலைப்புக்கு பொருத்தமில்லாத படைப்புகளை எழுத கூடாது என்பதையும் தெரிந்து கொண்டேன்!

ஒரு படைப்பை எந்த கண்ணேட்டத்தில் பார்க்கவேபார்க்கவேண்டும் என்பதும் எனக்கு தெரியாது!

வழக்கமாக கருத்துரை இடுபவர்கள்,பாராட்டுவதைவிட குறைகளை கூறி வழிகாட்டுங்கள்!

வழக்கமாக என் தளத்திற்கு வந்து கருத்துறை இடுபவர்களை இப்படு நான் பதிவிட்டு இருப்பதால் எனக்கு பொறாமை என்றோ ஆதங்கம் என்றோ தயவு செய்து நினைக்க வேண்டாம்!

என் தவறு சுட்டிக்காட்டினால் திருத்திக்கொள்வே!

ஏனென்றால் சிலர் சிலபல ஆண்டுகளாக எழுதிவருகீர்கள்
அதனால்தான் உங்களிடம் என் கருத்தை அறிய விழையும் முயற்சியே இந்த பதிவு!

நன்றி! 

17 comments:

  1. பேட்டி மனப்பான்மை வேண்டுமே ஒழிய...போட்டி மனப்பான்மை வேண்டாம் என்பதே என்து கருத்து..........

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே! தங்களின் கருத்தை அப்படியே ஏற்றுக் கொள் கிறேன்! நன்றி

      Delete
  2. பேட்டி மனப்பான்மை வேண்டுமே ஒழிய...போட்டி மனப்பான்மை வேண்டாம் என்பதே என்து கருத்து..........

    ReplyDelete
  3. போட்டியில் கலந்து கொண்ட அனைவருமே
    வெற்றி பெறுவது என்பது இயலாத காரியம் நண்பரே
    தோல்விகளோ
    நாளை வெற்றியின் படிக்கட்டுகள்
    தொடர்ந்து எழுதுங்கள்
    வெற்றி தேடி வரும்

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் உண்மைதான் நண்பரே ஒரு துளி அதிர்ஷ்டமும் வேண்டும்! அனைவருமே வெற்றி பெறுவதற்கே எழுதுகிறார்களா என்பது யார்க்கு தெரியும்! நன்றி அய்யா!

      Delete
  4. நம்மாலும் எழுத முடியும் என்ற ஒரு நம்பிக்கையை வளர்க்கவே எழுதுகிறோம்,பரிசோ பாராட்டோ பின்னால்!அனுபவம்தானே பாடம் தரும்!
    வாழ்த்துகள் பூபகீதன்

    ReplyDelete
    Replies
    1. வாங்க அய்யா! இனி சிறப்பாக எழுத முடியும் என நம்பிக்கை வந்துள்ளது! எல்லாம் அனுபவம்தான் அய்யா! உண்மை! நன்றி

      Delete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. பூபகீதன் பெரிய மனுசன் பட்டதாரி சிங்கம் என்று கற்பனைக்கோட்டையில் இருந்தேன் ஆனால் பதிவர் விழாவில் ஒன்றும் சொல்லாமல் நிறை/குறையைச்சொல்லி ஊக்கிவிக்கிக்க வேண்டும் என்றதை மட்டும் தான் பார்த்தேன் இனித்தான் முழுமையாக பார்க்க வேண்டும் நேரம் ஒதுக்கி!

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோ! சின்ன மனுசன்தான் ஆனால் தன்னம்பிக்கை தைரியத்தில் பெரிய மனுசன்! பட்டாதாரிதான் சகோ! பயோ டெக்னாலஜி! ஒருவனுக்கு எந்த விசயத்திலும் நமக்கு தெரிந்த நிறை குறை களை சொன்னால் போதும்! முயற்சிப்பதும் முன்னேறுவதும் அவன் பார்த்துப்பான்! ம் முழுவதும் பாருங்க சகோ! நன்றி

      Delete
  7. முடிந்தவரை போட்டிக்கு அனுப்பிய விடயம் பற்றி இனிமேல் நேரம் ஒதுக்கி இப்படி பதிவு எழுதுவதை விடுத்து இன்னொரு உங்களின் சுய பதிவு எழுதி உலகநாடுகளில் உங்க உறவை வளர்க்க முயலுங்க! இது சாமானியன் தனிமரத்தின் ஆலோசனை சகோ!

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோ! உங்கள் ஆலோசனை அப்படியே ஏற்றுக் கொள்கிறேன்! முடிந்த விசயத்தை எதற்கு இனி எழுத வேன்டும்! என் தவறுகளை களையத்தான் நன்றி சகோ!

      Delete
  8. போட்டியில் இருக்கின்றோம் என்பதுதான் முக்கியம் தோல்வியும் வெற்றியும் ஒரு விளையாட்டுப்போல[[ எனக்கும் எழுத்துப்பிழை கைபேசி/கணனி என்று விடாது துரத்தும் கறுப்பு! கவலை வேண்டாம் சகோ! உங்க படைப்பு பலரிடம் போனதே உங்க திறமைக்கு பரிசு!

    ReplyDelete
  9. கலந்து கொண்டதே பெரிசு....வித்தியாசமா எழுதியிருக்கீகளே இந்த சுய அலசல் உங்களை நிச்சயம் மேம்படுத்தும் வாழ்த்துகள்..

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்! இது என்னை நானே சுயமதிப்பூடு செய்து கொள்ளும் ஒரு சிறந்த வழி! பள்ளிகால பழக்கம் இது! தங்களின் இனிய கருத்திற்கு நன்றி சகோ!!!

      Delete
  10. நல்ல விதமாக அலசி இருக்கின்றீர்கள் நண்பரே தவறு வரும் பொழுது நான் கண்டிப்பாக சுட்டிக் காட்டுவேன் ஆனால் ? அதற்க்கு எனக்கு தகுதி இருக்கின்றதா ? 80 தான் குழப்பம்.

    ReplyDelete
  11. வாங்க நண்பரே! தவறை சுட்டிக்காட்ட தகுதி வேண்டும் என்பது நல்ல மனசு இருந்தால் போதும்! உங்களிடம் அது அதிகமாகவே உள்ளது ஜி! நன்றி!!

    ReplyDelete

உங்கள் எண்ணத்தை இப்படியும் சொல்லலாம்,

தொடர்புக்கு : susibala1986@gmail.com