22 October 2015

அட்மிஷன் நடைபெறுகிறது .குறைந்த இடங்களே உள்ளது ...??!
"விஜயதசமியை முன்னிட்டு Lkg .Ukg வகுப்புகளுக்கு அட்மிஷன் நடைபெறுகிறது "என்று நேற்று பல இடங்களில் பார்த்தேன்! இதில் ஆச்சரியப்பட அதிசியக்க விஷயம் ஒன்றுமில்லைதான்! காலங்காலமாக நடப்பதுதான்! ஆனால் முதியோர் இல்லங்களில் அட்மிஷன் நடைபெறுகிறது என்ற பிளாக்ஸ் போர்டும் சில இடங்களில் நேற்று தென்பட்டது? மனதுக்கு வருத்தத்தை தருகிறது! 3வயது குழந்தைக்கு 3லட்சம் நன்கொடை தந்து பள்ளியில் சேர்க்கும் நாம், பழுத்த அனுபவங்களை  கனிந்த இதயங்களை முதியோர் இல்லத்தில் சேர்ப்பது என்ன கலாச்சாரம் என்ன பண்பாடு? எந்த முதியவரும் விருப்பபட்டு முதியோர் இல்லத்திற்கு வருவதில்லை மடையர்களே? அவர்களை வைத்து பராமரித்து  புண்ணியம் தேடிக்கொள்ளும் மகான்களே. இதயமில்லாமல் அட்மிஷனுக்குஅழைத்து  வரும் கூறுகெட்ட ஜென்மத்திற்கு எதாவது அறிவுறை சொல்லுங்க! இல்லையா முதியோர் இல்லத்தை மூடிட்டு மனமாற்று இல்லம் வச்சு தெலைங்க!!!


"வெங்கடாசலபதி சாமி 
முருகன் சாமி 
கருப்ப சாமி 
குலசாமி 
வேப்பமர சாமி 
சின்ன சாமி 
பெரிய சாமி 
இத்தனை சாமிய 
வேண்டியும் 
ஏன்னு கேக்காத சாமி 
என்ன சாமி!!!! 

"நேற்று நாடு முழுவதும் விதவிதமாக ஆயுத பூஜை எல்லாம் கொண்டாடினேம் 
அது தேவையானதுதான்! ஆனால் இறுதியாக கண்திருஷ்டி என்று தேங்காயையும் பூசனிகாயையும் நடு வீதியில் யாருக்கும் பத்து பைசா பயனில்லாமல் உடைப்பது என்ன பக்தியில் சேர்ப்பது! நேற்று ஒரு நாள் மட்டும் எத்தனை எத்தனை தேங்காயும் பூசனிகாயும் உடைந்து தன் உயிரை விட்டிருக்கும்? இதற்குபின்னால் எத்தனை விவசாயிகள் உழைப்பிருக்கும்!
நடுவீதியில் நடு சாலையில் உடைத்தால்தான் திருஷ்டு நீங்கும் என்று யார் எந்த புராணத்தில் சொல்லியுள்ளார்கள்! உருவாகும் ஒவ்வொரு பொருளும் அதுதது இதற்குத்தான் என்றால் மனிதன் மட்டும் என்ன தேவைக்காக படைக்கப்பட்டுளான்??? 
(நான் என் அனுபவத்திற்கு அப்பாற்பட்டு கூறியிருந்தால் மன்னிக்கவும்)

"தி ஒ தகவல் :விஞ்ஞானமும் மெய்ஞானமும் கைகோர்த்துக்கொண்டால் மட்டுமே மனித சமுதாயம் சிறக்கும்!!

அழகு என்பது கடமையை பாதிக்கும் கடமையை சரியாக செய்தால் மட்டுமே வாழ்க்கை உயரம் :சொன்னவர் நம் கலாம் அய்யா!

நன்றி!!! 


9 comments:

 1. முக்கியமான இரு செய்திகளை எடுதிருக்கிறீர்கள்.முதல செய்தி மனம் வலிக்கச் செய்கிறது
  இரண்டாவது வாகன விபத்து உண்டாகி உடல் வலிக்கச் செய்கிறது

  ReplyDelete
  Replies
  1. வருக அய்யா! நமக்குதான் மனம் கனக்கிறது! இந்த முட்டாள்களுக்கு மனமே இல்லை மிக்க நன்றி அய்யா!!

   Delete
 2. விஞ்ஞானம் அஞ்ஞானமாக்கப்பட்டு வருகிறது நண்பரே....

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் நண்பரே! அதற்குத்தான் நவீன வளர்ச்சியாம்????

   Delete
 3. விஞ்ஞானம் அஞ்ஞானமாக்கப்பட்டு வருகிறது நண்பரே....

  ReplyDelete

 4. விஞ்ஞானமும் மெய்ஞானமும் கைகோர்த்துக்கொண்டால் மட்டுமே மனித சமுதாயம் சிறக்கும்!! உண்மையும் கூட!
  நட்புடன்,
  புதுவை வேலு

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் நண்பரே! ஆனால் நாம்தான் ஒன்றை பயன்படுத்தினால் மற்றென்றை பயன்படுத்த அடம்பிடிப்போமே??? மிக்க நன்றி

   Delete
 5. விஜயதசமியன்று முதியோர் இல்ல சேர்க்கைக்கு ப்ளக்ஸ் போர்டா
  நெஞ்சம் கனக்கிறது நண்பரே
  தவறான திசையில் வேகமாகப் பயணித்துக் கொண்டிருக்கிறோம்
  அபிசேகம் என்ற பெயரில் பாலினையும் திருஷ்டி என்ற பெயரில் பூசனிக்காயினையும் விரயமாக்குகிறோம் ஆனால் பக்தி என்ற பெயரில் மாட்டு சிறுநீரினை குடிக்கத் தயாராக இருக்கிறோம்
  என்ன உலகம் இது

  ReplyDelete
  Replies
  1. வருக நண்பரே! தங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றிகள் பல! ராக்கெட் வேகத்திற்கு நாமும் ஓடவேண்டாமா? அதனால்தான் நாம் என்ன ஏது செய்கிறோம் என்பதுகூட தெரியாமல் இருக்கிற நவீன கலியுக காலம் இது!!! நன்றி

   Delete

உங்கள் எண்ணத்தை இப்படியும் சொல்லலாம்,

தொடர்புக்கு : susibala1986@gmail.com