click to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own text

07 October 2015

அண்ணே ஒரு டீ ....!



" இருபாலரும் படிக்கும் அந்த பிரபலமான இன்சினியரிங் கல்லூரி, ஆள் அதிகம் புலங்காத அத்துவான காட்டில் அழகாய் கம்பிரமாய் காட்சியளித்தது!

எதிர்கால இந்தியாவை வல்லரசாக்க நினைக்கும் பல மாணவ மாணவியர்  சிரித்தவாறும் பேசியவாறும் ,கல்லூரிக்குள் நுழைந்த வண்ணம் இருந்தனர்!

கல்லூரியின் அழகு பல கோடிகளை விழுங்கியிருக்கும்! படிக்கும் பிள்ளைகள் எல்லாம் கரன்சியில் புரளும் குடும்பத்தை சேர்ந்தவர்கள் !

கல்லூரி நுழைவாயிக்கு 100மீட்டர் தள்ளி ஒரே ஒரு டீகடை! சுற்றிலும் தகரம் வைத்து அடைத்து கீத்துமட்டையால் மூடி அது டீகடை தான் என்று நிருபிக்க அதன் ஓனர் பிரயானசப்பட்டு கொண்டிருந்தான்!

கடையின் ஒரு மூலையில் "சுவாதிகா டீ கடை "என்று தகர சதுரத்தில் தொங்கியது!

டீ குடிக்க வருபவர்களுக்காக இரு மர பெஞ்ச், கரி பாய்லர், சின்ன மேசை , மேசையின் மேல் நாலைந்து கண்ணாடி ஜாடிகள், அதற்குள் பாதியளவு பிஸ்கட் இத்யாதி வகைகள்,  ஜாடியின் மேல், பஜ்ஜி  வடை போண்டா! திண்பண்டங்கள்!


தற்சமயம் நான்கு மாணவர்கள் மர பெஞ்சில் உட்காந்தவாறு டீ குடித்து, அரட்டையடித்தும் இருந்தனர்!

கடையின் ஓனர்  நுறை ததும்ப டீ ஆத்திக் கொண்டிருந்தான்! ஆத்திய டீயை அவன் குடிப்பானா அல்லது யாருக்காச்சும் தருவானா, என யோசிப்பதற்குள்

"அண்ணே ஒரு டீ "என்றவாறு கதையின் நாயகன் கிருஷ் வந்தான்!முழுப்பெயர் கிருஷ்ணன்!

சினிமா ஸ்டார் போல் இல்லாவிட்டாலும் பார்க்க அழகாயிருந்தான், கல்லூரியில் நடக்கும் அத்தனை நிகழ்ச்களிலும் முதலாக இருப்பான்

அவனை பற்றி பிறகு விலாவரியாக பார்க்கலாம்!

நுரை ததும்பம் டீயை சப்பிக் கொண்டே அந்த நாலு மாணவர்களை பார்க்க அவர்களும் இவனை பார்க்க அறிமுகப்படுத்தி கொண்டார்கள்!

கடையின் ஒனர் "இத்தன நாளு உன்னை பாக்கலையே? என்ன பேரு என்றான்!

ஆமாண்ண எனக்கு டீ பிடிக்காது அதனால வரல என்பேரு கிருஷ்ணன்  எல்லாரும் கிருஷ் னு கூப்பிடுவாங்க "

ஒ அப்படியா இனிமே தினம் வருவியா?

கண்டிப்பா வருவேண்ணே, எனக்கு இந்த வருசம் டீ குடிக்கிறதுதான்  ப்ரெக்ஜெக்ட் "என்றான்!

டீ குடிக்கிறத பத்தியா ஆராய்ச்சி பண்ணணும்?

ஆமாண்ணே! என்ன பண்றது கடைசி வருசமாச்சே!

என்னமோ போங்க நான் படிக்கிறப்ப இப்படியலாம் இல்ல!

இப்பவும் இல்லதாண்ணே! நான் மட்டும்தான் வீம்புக்கு டீ ஆராய்ச்சி பண்றத பத்தி எடுத்திருக்கேன்
அதுவும் ஒரு பொண்ணுக்காக "என்றான்

அந்த கிறுக்கு பய புள்ள யாரு?


அதுவும் இங்கதாண்ணே படிக்குது?


சரியான கூர் இல்லாத பிள்ளையா இருக்கும் போல


கிருஷ் மனசுக்குள் அப்பனுக்கு பிறந்த அப்படித்தான் இருக்கும், என நினைத்தவாறு

தெரியலணா? சரி வரேன் என்றவன் துள்ளி ஒடினான்


தொடரும்!

நன்றி என் முதல் புது முயற்சி எப்படி இருக்கு என்று
சொன்னால் மீண்டும் தொடவேன் நன்றி 

10 comments:

  1. நண்பா தொடங்குங்க ஸூப்பர் என்ன ? ஒண்ணு டீ போடும் பொழுது சர்க்கரை கேட்டுப் போடுங்க ஏன்னா ? ஸுகர் கம்ப்ளைண்ட் பார்ட்டிகள் கூடிப்போச்சு
    அசத்துங்க... அசத்துங்க.. எங்கே பார்ப்போம்.....

    தங்களது பதிவு வெளிவருவது எப்பொழுது என்று கணிக்க முடியவில்லை ஊரெல்லாம் சுத்துறேன் உங்களை சரியாப்புடிக்க முடியலை..

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஜி! இனிமே சர்க்கரையை கம்மியா டிகாஷன் அதிகமா போடறேன் சரியா!

      என் பதிவு தினமும்தான் வருது ஜி! எப்படியோ வந்துட்டுப்போங்க!

      வருகைக்கும் அசத்த சொல்லியதற்கும் நன்றிகள் பல!

      Delete
  2. தொடக்கம் அருமை;
    தொடரக் காத்திருக்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. வாங்க அய்யா! அருமையான வருகைக்கும் இனிய காத்திருப்பிக்கும் நன்றிகள் பல!

      Delete
  3. தொடருங்கள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வாங்க நண்பரே! தொட ஊக்கப்படுத்தியமைக்கு நன்றிகள் பல

      Delete
  4. ஆஹா தொடரும் எழுத தொடங்கியாச்சு சிங்கம் [[ ! டீ பிரியன் அல்ல நான் ஆனால் பால்க்கோப்பி பிரியன் நம்நாட்டில் பழக்க தோஷம் இன்னும் அதே தான் ஆனால் சீனி/சக்கரை இப்ப குறைச்சு கொழுப்பு அதிகம்!ஹீ! அருமையாக இருக்கு ஆராட்சி தொடரட்டும் டிக்கடை தொடர் என்பதால் இரண்டில் ஒன்,று படப்பாடல் ஞாபகம் வருகுது சகோ!

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோ! எனக்கும் வர காபி அதிகம் பிடிக்கும்! நம்மூர்ல டீயோ காபியோ இல்லனா? அட நினைச்சே பார்க்க முடியாது!

      நான் டீயில் ஆராய்ச்சி செய்ய ஊக்கப்படுத்தியமைக்கும் அதனால் பாட்டு ஞாபகம் வந்தமைக்கும் நன்றிகள் பல!

      Delete
  5. தொடர்ந்து சலிப்பு இன்றி தொடரை எழுதுங்க!

    ReplyDelete
  6. கண்டிப்பா சலிப்பு இல்லாம எழுதறேன் சகோ! வருகைக்கு நன்றிகள் பல

    ReplyDelete

உங்கள் எண்ணத்தை இப்படியும் சொல்லலாம்,

தொடர்புக்கு : susibala1986@gmail.com